புதன், அக்டோபர் 03, 2012

உறவுகள்


உங்களது சிறுநீரகங்கள் செயலிழந்து விட்டன என்று டாக்டர் கூறிய போது அதை ஜீரணிக்க முடியாமல் பேயறைந்தது மாதிரி அவரையே வெறித்துப் பார்த்துக் கொண்டு நின்றான் சேகர்.

என்ன டாக்டர் சொல்றீங்க?  அவங்களுக்கு வயத்துல தான் வலி.  ரெண்டு நாளா வாந்தி.  மூச்சு விட ரொம்பச் சிரமப்படுறாங்க.  முகமும் காலும் ரொம்ப வீங்கியிருக்கு. அதுக்காகத் தான் ஒங்கக்கிட்ட காட்ட வந்தோம்.  நீங்க வேற என்னமோ சொல்லிப் பயமுறுத்திறீங்க?

டாக்டர் சொன்னதை நம்ப முடியாமல் அவன் மனைவி சித்ரா  கேட்டாள்.

எல்லாம் அதோட அறிகுறிதாம்மா.  நுரையீரல்ல நிறைய தண்ணி சேர்ந்திருக்கு. ஒடனடியா ஆஸ்பத்திரியிலே சேர்த்துடுங்க.  டயாலிசிஸ் செய்யணும்.  கையிலபிஸ்டுலான்னு ஒரு சின்ன ஆப்ரேஷன் பண்ண வேண்டியிருக்கு.  ஆனா அது மூலமா டயாலிசிஸ் செய்றதுக்கு ஒரு மாசம் ஆகும்.  அதுவரைக்கும் தற்காலிகமா கழுத்து பக்கத்துல ஒரு கதீட்டர் போட்டுப் பண்ணனும். 

அதுக்கெல்லாம் நெறைய பணம் தேவைப்படுமே.  நாங்க சாதாரண வயித்து வலின்னு நெனைச்சுக் கிட்டுத்தான் வந்தோம்.  அதனால் வீட்டுக்குப் போய் பணம் ஏற்பாடு பண்ணிக்கிட்டு நாளைக்கு வரலாமா டாக்டர்?

நாள் வளர்த்தினீங்கன்னா ரொம்ப சீரியஸ் ஆயிடும்மா. எவ்ளோ சீக்கிரம் வர்றீங்களோ, அவ்வளவுக்கு நல்லது.

சரிங்க டாக்டர்.  நாளைக்குக் கண்டிப்பா வந்துடுறோம்.

ஒரு நிமிடம் பாத்ரூம் போய் வருகிறேன் என்று அவனிடம் கைப்பையைக் கொடுத்து விட்டு உள்ளுக்குள் சென்று கொஞ்ச நேரம் அழுது தீர்த்து விட்டு முகத்தைக் கழுவிக்கொண்டு வெளியில் வந்தாள் சித்ரா.   

எதிர்காலமே சூன்யமாகி விட்டது போலிருந்தது அவனுக்கு. 

இன்னமும் நான் முடிக்க வேண்டிய வேலைகள் எவ்வளவோ இருக்கின்றனவே? அய்யோ நான் என்ன செய்வேன்? திடீரென்று ஒருவனிடம் உன்னுடைய ஆயுட்காலம் இவ்வளவு நாள் அல்லது இத்தனை மணி நேரம் என்று சொன்னால் அவனுக்கெப்படி இருக்கும்?  எனக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் நாளுக்குள் முடிக்க வேண்டிய பணிகள் அனைத்தையும் என்னால் முடித்து விட்டுப் போக முடியுமா? எல்லாவற்றையும் சித்ரா தலையில் சுமத்தி விட்டுப் போனால், பாவம் அவள் என்ன செய்வாள்?

சிவந்திருந்த தன் முகத்தையும், கண்களையும் அவன் பார்க்க முடியாதபடிக்கு முகத்தை வேறு பக்கம் திருப்பிக் கொண்டு, வாங்க வீட்டுக்குப் போகலாம், என்று சித்ரா அழைத்த போது அவனது எண்ண ஓட்டம் தடைப்பட்டது.

அவ்வளவு தான் என் வாழ்க்கை! எல்லாம் முடிந்து போய் விட்டது சித்ரா, என்று அவன் சொன்ன போது குரல் உடைந்து கண்ணீர் கொட்டியது.  சிறு குழந்தை போல் குலுங்கிக் குலுங்கி அழுதான் சேகர்.

ஷ்! எல்லாரும் பார்க்கிறாங்க.  மனசைத் தளர விடாதீங்க.  இந்தச் சமயத்துல தைரியம் தான் ரொம்ப முக்கியம்.  வருஷக்கணக்கா டயாலிசிஸ் செஞ்சிட்டு எத்தனை பேரு நல்லா இருக்காங்க தெரியுமா?  மேலும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக