தரமான, விரும்பிய கல்வியைத் தேடி வெளிமாநிலங்களுக்கு செல்லும் மாணவிகளின்
எண்ணிக்கை வருடத்திற்கு வருடம் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. நன்றாக
படித்து, விரும்பிய லட்சியத்தை அடைந்துவிடும் மாணவிகள் மிக அதிகம். ‘கை
நிறைய கல்வி..
பை நிறைய சம்பளம்' என்ற எல்லையை பலரும் தொட்டுவிடும்போது, ஒரு சிலர் போதை பழக்கத்தில் சிக்கி ‘கைவிட்டது கல்வி..! காணாமல் போனது எதிர்காலம்!' என்பதுபோல் கும்மிருட்டுக்குள் சிக்கிக்கொள்கிறார்கள்.
அந்த மாய வலைக்குள் அவர்கள் சிக்கிக்கொள்ள என்ன காரணம்? “எல்லையற்ற சுதந்திரமும், எல்லாவற்றையும் அனுப எல்லோருடைய பிறந்த நாளுக்கும் பார்ட்டி உண்டு. அதில் ஒயின், பீர் இல்லாமல் இருக்காது. அதில்தான் முதலில் விழுகிறார்கள்.
பின்பு ஒன்றன்பின் ஒன்றாக பல்வேறு அசிங்கங்கள் அரங்கேறுகிறது. போதைப் பொருட்கள் இப்போது சில பெண்கள் விடுதிகளில் சகஜமாக காணப்படுகிறது..
போதை வலையில் சிக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?
வெளி மாநிலங்களுக்கு சென்று படிக்கும் மாணவிகள் மட்டுமல்ல, வீட்டில் இருந்து தினமும் கல்லூரி சென்று படிக்கும் மாணவிகள்கூட தற்போது போதை பழக்கத்திற்கு உள்ளாகுவது அதிகரித்து வருகிறது.
* ஆண்களால் மட்டுமல்ல பெண்களாலும் இந்த போதை நட்பு வட்டத்திற்குள் இழுக்கப் படலாம். அதனால் நண்பர்களையும், தோழிகளையும் கல்லூரி மாணவிகள் மிக கவனமாக தேர்ந்தெடுக்கவேண்டும்.
* தன்னம்பிக்கை இல்லாத பெண்கள் இந்த வட்டத்திற்குள் எளிதாக இணைந்துவிடுவார்கள். அமைதியான குடும்ப சூழல் அமைந்து, மனம்விட்டு பேசக்கூடிய நல்ல பெற்றோரும் அமைந்தால் அவர்களது மகள்கள் தன்னம்பிக்கை கொண்டவர்களாக இருப்பார்கள்.
* ‘பலரும் இதை அனுபவிக்கிறார்கள். அதனால் நாமும் அனுபவிப்போம்’ என்று கூறி இந்த போதை பழக்கத்திற்குள் இழுக்க முயற்சிப்பார்கள். ‘பலரும் அணிவதால் நாமும் ஜீன்ஸ் அணியலாம். பலரும் விரும்புவதுபோல் நாமும் ‘ஹேர் கட்’ செய்துகொள்ளலாம்.
ஆனால் மற்றவர்கள் மது அருந்துவதால் நாமும் அருந்தவேண்டியதில்லை என்ற கொள்கையில் பெண்கள் பிடிவாதமாக இருக்கவேண்டும். எக்காரணத்தைக்கொண்டும் பெண்கள் தங்கள் தனித்துவத்தை இழக்கக்கூடாது.
* போதைப் பழக்கத்திற்கு பெண்களை ஆட்படுத்துகிறவர்கள், குறிப்பிட்ட பெண்ணை முதலில் தேர்ந்தெடுப்பார்கள். அந்த பெண்ணின் மனதில் இடம் பிடிக்க பல்வேறு விதமான காரியங்களில் ஈடுபடுவார்கள். பல மாதங்கள்கூட காத்திருப்பார்கள்.
வாய்ப்பு கிடைக்கும்போது, ‘உன் மீது பைத்தியமாக இருக்கிறேன்’, ‘நீ கிடைக்காவிட்டால் உயிர்வாழ மாட்டேன்’ என்றெல்லாம் சொல்வார்கள். அவள் அதை உண்மை என நம்பி காதலுக்கு மரியாதை செய்யும்போது, ‘நீ என்னை காதலிப்பது உண்மையாக இருந்தால், என்னோடு தியேட்டருக்கு வரவேண்டும். பீச்சுக்கு வரவேண்டும்’ என்றெல்லாம் சொல்வார்கள். அதற்கு ஒத்துக்கொண்டால் அடுத்தடுத்து மது, போதை, செக்ஸ் என்று இழுத்துச் சென்றுவிடுவார்கள்.
* ஆஸ்டலில் தங்கிப் படிக்கும் பெண்கள் மீது அவர்களது லோக்கல் கார்டியன் எப்போதும் ஒரு கண்வைத்திருக்கவேண்டும். பெற்றோரும் பெயரளவுக்கு போன் போட்டு மட்டும் பேசாமல், மாதத்தில் ஒருமுறையாவது நேரில் சந்திக்கவேண்டும். கல்லூரி வருகை, ஒழுக்கம், படிப்பு பற்றி விசாரிக்கவேண்டும்.
* ஒவ்வொரு பெண்ணின் குணாதிசயமும் அவளது பெற்றோரால்தான் வடிவ மைக்கப்படுகிறது. நல்லவிதமான அடிப்படைக்கூறுகளோடு வளர்க்கப்படும் பெண்கள் எங்கு சென்றாலும், எந்த சூழ்நிலையிலும் தனது தனித்தன்மையை இழக்கமாட்டார்கள்.
* ஆண், ஒரு பெண்ணை தவறான பாதைக்கு கொண்டு செல்ல விரும்பும்போது அவனது சொல், செயலை பெரும்பாலும் அடையாளம் கண்டிட முடியும். சக மாணவன் ஒருவன், பெண்ணோடு நட்பு பாராட்டுவதும், பேசுவதும் இயல்பு.
அதை பொது இடங்களில் மேற்கொள்ளாமல் தனிமையில் சந்திக்க விரும்பும்போது பெண்கள் விழிப்படைந்துவிடவேண்டும். கல்லூரிக்கு கட் அடிக்க சொல்வார்கள். விலை உயர்ந்த பரிசுகள் வழங்குவார்கள். பெரிய நட்பு வட்டம் இருப்பதுபோல் காட்டிக் கொள்வார்கள். பணக்காரன் போல் நடந்துகொள்வார்கள். இப்படிப்பட்டவர்களிடம் பெண்கள் விலகியிருக்கவேண்டும்.
* எளிதாக உணர்ச்சிவசப்படுகிறவர்கள், சின்னப் பிரச்சினைகளைகூட சமாளிக்கத் தெரியாமல் தடுமாறுகிறவர்கள், எதற்கெடுத்தாலும் கோபம் கொள்கிறவர்கள், எந்த செயலையும் செய்து முடிக்கும் திறன் இல்லாமல் தடுமாறுகிறவர்கள் போன்றவர்கள் எளிதாக போதைக்கு அடிமையாகிறார்கள். அவர்கள் மீது பெற்றோர் தனிக்கவனம் செலுத்தி, அவர்களிடம் ஆளு மைத்திறனை வளர்க்கவேண்டும்.
விளக்கம்:
மனோதத்துவ ஆலோசகர் பூர்த்திராவ், சென்னை.

நன்றி: மாலைமலர்
2 கருத்துகள்:
நல்ல விழிப்புணர்வு பதிவு., ஒழுக்கமான பெற்றொர்களால் வளார்க்கப்படும் குழந்தைகள்கூட சகவாசத்தோசத்தால் சீரழிவது உண்டு.
இந்த ஆலோசனை கல்லூரிப் பெண்களுக்கு மட்டுமல்ல ,குறிப்பாக ITதுறையில் பணியாற்றும் பெண்களுக்கு மிகவும் பொருந்தும் !
கருத்துரையிடுக