புதன், ஏப்ரல் 02, 2014

நீண்ட ஆயுளைத் தரும் உணவு

பாரம்பரிய உணவுகளே நமது ஆரோக்கியத்தை மேம்படுத்தி நீண்ட ஆயுளைத் தரும் என ஊரகக் காவல் கண்காணிப்பாளர் வே. பாலகிருஷ்ணன் கூறினார்.

சுற்றுச்சூழல் பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு மதுரை ஆயுதப்படை மைதான வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் அவர் பேசுகையில், ஆரோக்கியமான வாழ்வுக்கும், சத்தான உணவுக்கும் நமது பாரம்பரிய உணவுகளை உண்ண வேண்டும்.  அதன்படி கேழ்வரகு, கம்பு, சோளம் ஆகிய தானியங்களின் உணவை நமது குழந்தைகள் உண்ணும் வகையில் நாம் நமது பழக்கவழக்கத்தை கடைப்பிடிப்பது எதிர்காலத்துக்கு நல்லது. கடந்த 10 ஆண்டுகளில் நமது சுற்றுச்சூழல் 10 சதவிகிதம் மாசுபட்டுள்ளது. ஆகவே காற்று மாசுபடுவதைத் தடுப்பது அவசியம் என்றார்.

  நிகழ்ச்சியில் மதுரை விவசாயக் கல்லூரி முதல்வர் பார்வதி பேசுகையில், பாரம்பரிய உணவுகளை உண்டால் ஆயுள் கூடும் என்றார்.
மாவட்ட பாஸ்போர்ட் அலுவலர் மணி பேசுகையில், மரம் வளர்ப்பதால் சுற்றுச்சூழல் மேம்படும் என்றார்.

  மேலும், ஊரகக் காவல் துறைக்குச் சொந்தமான நூறு வாகனங்கள் வெளியிடும் புகை அளவு சரிபார்க்கப்பட்டது. அதன்படி ஓட்டுநர்கள் மிதமான வேகத்தில் செல்லவும் வலியுறுத்தப்பட்டுள்ளதாகவும், இதனால் புகை அதிகரிக்கும் நிலை தவிர்க்கப்படும் எனவும் போலீஸ் அதிகாரிகள் கூறினர்.

நன்றி: தினமணி (7 June 2014)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக