சனி, ஏப்ரல் 12, 2014

கோடையில் குளு குளுன்னு இருக்க..

கோடையில் குளு குளுன்னு இருக்க தர்பூசணி சாப்பிடுங்க.. தாகத்தை தீர்க்கும் தர்பூசணி உடலுக்கு ரொம்ப நல்லது. ரொம்ப பசியா உள்ளவர்கள் தர்பூசணி நாலு துண்டு சாப்பிட்டாலும் வயிறு திம்முனு இருக்கும், பசியே எடுக்காது....

தேவையான பொருட்கள்:
தர்பூசணி துண்டுகள் - 4
சர்க்கரை (அ) தேன் - சிறிது
மிளகு தூள் - ஒரு சிட்டிகை
சுக்கு தூள் - 1/4 டீஸ்பூன்
உப்பு - அரை சிட்டிகை
ஐஸ் கியுப்ஸ் - 6

செய்முறை:
நான்கு துண்டு தர்பூசணி எடுத்து கொள்ளவும்.
பழத்தை கழுவி, அதில் உள்ள கொட்டைகளை நீக்கி விட்டு, துண்டுகளாக அரியவும்.
மிக்சியில் ஐஸ் கியுப்ஸ், சர்க்கரை, உப்பு, மிளகு தூள், சுக்கு தூள் பழம் அனைத்தையும் போட்டு நன்கு அடித்து பெரிய துளையுள்ள வடிகட்டியில் வடித்து குடிக்கவும்.
அப்படி வடிகட்ட முடியவில்லை என்றால், மிக்சியில் அடித்ததை ஒரு பாத்திரத்தில் ஊற்றிவைத்தால் அடியில் கொட்டைகள் தங்கிடும், மிகவும் கலக்காமல் அப்படியே தெளிந்த மாதிரி டம்ளரில் ஊற்றி பருகவும்.
ஆஹா! என்ன.. ஒரு புத்துணர்வு. கண்ணெல்லாம் குளிர்ந்து விடும்.

குறிப்பு:
தர்பூசணி நல்ல ஒரு நீராகாரம், தாகத்தை தணிக்கும்.
இனிப்பில்லாத தர்பூசணி பழத்தை சின்னதா கட் செய்து அதில் சர்க்கரை சேர்த்து குளிர வைத்து குடித்தாலும் நல்லா இருக்கும்.
இதில் பால் சேர்த்தும் ஜூஸ் தயாரிக்கலாம் பால் சேர்க்கும் போது வெரும் ஐஸ் கட்டி, சர்க்கரை மட்டும் போதும். மாதுளை சேர்த்தும் செய்து குடிக்கலாம்.
இதன் தோலை வீணாக்காமல் சாம்பார் வைக்கலாம். தர்பூஸ் வெட்டிய முழுவதையும் தோலிலிருந்து வெட்டி எடுக்க முடியாது அதற்கு ஒரு மேஜை கரண்டி கொண்டு வழித்தெடுத்தால் ஈசியாக வந்துவிடும்.
தர்பூசணியை கட் செய்து பிரிட்ஜில் வைத்தால் தண்ணீர் அதிகமாக விடும், அது கெட்டியாக கிரிப்பாக இருக்க அரிந்ததும் பீரிஜரில் சிறிது நேரம் வைத்து எடுத்தால் தண்ணீர் விடாமல் கிரிப்பாக இருக்கும்.


நன்றி: கூடல்.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக