திங்கள், ஏப்ரல் 14, 2014

இன்றைய சிந்தனைக்கு

பகவத் கீதை 
இயற்கை முழுவதும் ஒரு முடிவில்லாத 'கொலைக்களம்' என்பதைப் புரிந்து கொள். அணு முதல் அண்டம் வரையில் எங்கும் எண்ணில்லாத உயிர்கள் நிரம்பியுள்ளன. ஒரு துளி நீரில் எண்ணில்லாத சிற்றுயிர்கள் இருக்கின்றன. நம் அறிவுக்கு அவைகள் 'சிற்றுயிர்கள்'. அவைகளின் இராச்சியத்தில் அவை 'பேருயிர்கள்' ஆகும். நமது மூடிய கைக்குள் உள்ள காற்றில் அதே அளவில் கணக்கற்ற உயிர்கள் இயங்கிக் கொண்டிருக்கின்றன. மண்ணுக்கு உள்ளேயும் 'உயர்த் தத்துவம்' நிரம்பி உள்ளது. ஒவ்வொரு உயிரும் ஒன்றை ஒன்று விழுங்கி வாழவும், வளரவும் இயற்கை வழி செய்திருக்கிறது. மண்ணில் வளரும் செடி ஒன்றுக்கு கோடானகோடி நுண்ணுயிர்க் கிருமிகள் மண்ணிலிருந்து ஓயாது பலியாகின்றன. உனது உணவில் கூட 'உயிர்த் தத்துவம்' அடங்கியிருத்தலை அறிவாயாக. ஓர் உயிர் மற்றொரு உயிரை அழிக்காமல் வாழ முடியாது. இதுவே இயற்கையின் அமைப்பு.இயற்கையில் எங்காவது 'கொலைச் செயல்' நிகழாது இருக்கிறதா என்று காட்டு பார்க்கலாம். பார்க்கும் இடம் எங்கும் 'கொலைக் களமே'. கண்மூடித் தனத்தை அகற்றிவிட்டுக் 'கொலைக் களமாக' இவ்வுலகைக் காண்பவரே 'உண்மையின்' முதற்படியைக் காண்கிறார். 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக