செவ்வாய், மே 22, 2012

நாடுகாண் பயணம் - காபோன்

நாட்டின் பெயர்:
காபோன்(Gabon)

வேறு பெயர்கள்:
காபோனியக் குடியரசு(Gabonese Republic) அல்லது கபூன்

அமைவிடம்:
மேற்கு மத்திய ஆபிரிக்கா

எல்லைகள்:
வட கிழக்கு - ஈக்குவடோரியல் கினியா
வடக்கில் - கமரூன்
கிழக்கு மற்றும் தெற்கு - கொங்கோ குடியரசு
மேற்கில் - கினிய வளைகுடா மற்றும் அத்திலாந்திக் சமுத்திரம்.

தலைநகரம்:
லிப்ரவில்(Libreville)

அலுவலக மொழி:
பிரெஞ்சு

ஏனைய மொழிகள்:
பாங், மைனோ, ஷேப்பி, பபுனு,பண்ட்ஜாபி.

இனங்கள்:
பண்டு பழங்குடி, ஆபிரிக்கர்கள், ஐரோப்பியர்கள் குறிப்பாக பிரெஞ்சுக் காரர்கள், கலப்பு இனங்கள்.

சமயங்கள்:
கிறீஸ்தவம்
ஆதிச் சமயம்
மிகக் குறைந்த தொகையில் முஸ்லிம்கள்.

பிராந்திய மொழிகள்:
வ்வாங்(Fang) மற்றும் யேனே(Myene)


கல்வியறிவு:
73%
*இந்நாட்டில் கட்டாயக் கல்வி முறை நடைமுறையில் உள்ளது.


ஆயுட்காலம்:
ஆண்கள் 51 வருடங்கள்
பெண்கள் 52 வருடங்கள்
*எயிட்ஸ் நோய் காரணமாக இளவயதிலேயே பலரும் இறப்பதால் சராசரி ஆயுட்காலம் மிகவும் குறைவாக உள்ளது.2009 ஆம் ஆண்டு மதிப்பீட்டின்படி இந்நாட்டில் சுமாராக46,000 எயிட்ஸ் நோயாளிகள் உள்ளனர்.

ஆட்சிமுறை:
ஜனாதிபதி தலைமையிலான குடியரசு ஆட்சி

ஜனாதிபதி:
அலி பொங்கோ ஒண்டிம்பா(Ali Bongo Ondimba)*இது 22.05.2012 அன்று உள்ள நிலவரம் ஆகும்.
*உலகிலேயே ஒரு நாடு சுதந்திரம் அடைந்த காலம் தொடக்கம் தொடர்ச்சியாக 42 ஆண்டுகள்(1967-2009) ஒரே நபர் ஜனாதிபதியாகப் பதவி வகித்தது இந்நாட்டிலே ஆகும். அவரது பெயர் El hadj Omar Bongo Ondimba ஆகும். இவரது மகனே இந்நாட்டின் தற்போதைய ஜனாதிபதி ஆவார். ஜனநாயக விதிமுறைப்படி இது தவறு ஆயினும், இது ஒரு உலக சாதனை ஆகும்.


பிரதமர்:
ரேமண்ட் ஓங் சிமா(Raymond Ndong Sima)*இது 22.05.2012 அன்று உள்ள நிலவரம் ஆகும்.


பிரான்ஸ் நாட்டிடமிருந்து விடுதலை:
17.08.1960


பரப்பளவு:
267,667 சதுர கிலோமீட்டர்கள்.


சனத்தொகை:
1,475,000(2009 மதிப்பீடு)*இலங்கையை விடவும் சுமாராக நான்கு மடங்கு பெரிய நாடாக இருப்பினும் சனத்தொகை சுமாராக பதினைந்து லட்சம் மட்டுமே.


வேலையில்லாத் திண்டாட்டம்:
21%


நாணயம்:
மத்திய ஆபிரிக்க பிராங்(CFA franc/XAF)


இணையத் தளக் குறியீடு:
.ga


சர்வதேசத் தொலைபேசிக் குறியீடு:
00 + 241இயற்கை வளங்கள்:
பெட்ரோலியம், இயற்கை எரிவாயு, வைரக் கற்கள், நைபோபியம், மங்கனீஸ், யுரேனியம், தங்கம், மரம், இரும்பு, ஈயம், நீர் மின்சாரம்.

விவசாய உற்பத்திகள்:
காப்பி, கொக்கோ, சீனி, மர எண்ணெய்(பாமாயில்), ரப்பர், ஆடு, மாடு, காகித மரம், மீன்.

தொழிற்சாலை உற்பத்திகள்:
பெட்ரோலியம் சுத்திகரித்தல், மங்கனீஸ், தங்கம், இரசாயனப் பொருட்கள் தயாரித்தல், கப்பல் பழுதுபார்த்தல், உணவு உற்பத்தி, குளிர்பானங்கள் தயாரிப்பு, துணிவகை உற்பத்தி, மரப்பலகைகள் தயாரிப்பு, மரப்பசை தயாரிப்பு, மர ஓட்டு வேலை, சீமெந்து தயாரிப்பு.

ஏற்றுமதிகள்:
மசகு எண்ணெய்(கச்சா எண்ணெய்/பெட்ரோலியம்), மரம், மங்கனீஸ், யுரேனியம்.

நாட்டைப் பற்றிய சிறு குறிப்புகள்:

  • ஆபிரிக்கக் கண்டத்தில் உள்ள செல்வந்த நாடுகளில் ஒன்று.இதற்குக் காரணம் இந்நாட்டின் பெற்றோலிய வளமும், குறைந்தளவு சனத்தொகையுமாகும்.
  • இந்நாட்டில் வேலையில்லாத் திண்டாட்டம் உள்ளபோதும், எந்தவொரு குடிமகனும் வறுமைக் கோட்டிற்குக் கீழே வாழவில்லை எனும் விடயம் ஆபிரிக்கர்களின் புருவங்களை உயர்த்தி நிற்கிறது.
  • இந்நாடு தனது அண்டை நாடாகிய ஈக்குவட்டோரியல் கினியாவுடன் ஒரு சில தீவுகள் சம்பந்தமாக நெடுங் காலமாகத் தீர்க்கப்படாத பிரச்சனையைக் கொண்டுள்ள நாடு ஆகும். மேற்படி தீவுகளில் பெட்ரோலியம் கிடைப்பதே மேற்படி பிணக்கிற்குக் காரணம் ஆகும்.
  • நாடு செல்வந்த நாடாக இருப்பினும் மக்களை ஆட்டிப் படைக்கும் சமுதாயப் பிரச்சினையாக எயிட்ஸ் நோய் உள்ளது.அத்துடன் 4000 நோயாளிகளுக்கு ஒரு மருத்துவர் எனும் நிலை காணப்படுகிறது.

2 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

ஆபிரிக்கக் கண்டத்தில் உள்ள செல்வந்த நாடுகளில் ஒன்று என்பது மிக தவறு.

வறுமை, வேலையில்லா திண்டாட்டம், அடிபடை மருத்துவ வசதியின்மை, அடிப்படை போக்குவரத்து வசதியின்மை மேலும் பல பிரச்சனைகள் நிறைந்த நாடு கபான்.

தலைநகரம் - லிப்ரெவிலே என்று வாசிக்காமல் லிப்ரவில் என்று வாசிக்கவும்

anthimaalai@gmail.com சொன்னது…

வாசகர் 'பெயரில்லா' அவர்களின் கருத்துக்களுக்கு நன்றி. தாங்கள் கூறியதுபோல் நாட்டின் தலைநகரின் பெயரைத் திருத்தியுள்ளோம். ஆனால் ஆபிரிக்க நாடுகளில் இது ஒரு 'செல்வந்த நாடு' எனும் தகவல் விக்கிபீடியா மற்றும் www.cia.gov/library இணையத் தளங்களில் இருந்து பெறப்பட்டது. அக்கறையுடன் வாசிக்கும் உங்களுக்கு நன்றிகள்.

கருத்துரையிடுக