திங்கள், மே 21, 2012

பிரபலங்கள் - 10


ஆக்கம்: வேதா இலங்காதிலகம், டென்மார்க்

காந்தி காந்தியம்


சத்தியமே வழிகாட்டு மொழி.
சத்தியமே பாதுகாக்கும் கேடயம்.
சத்தியமே மார்புக் கவசம்
சத்தியசொரூபி கடவுளென்றார்.
சத்தியமே கடவுள் மௌனமும்
சத்தியவாளரின் அனுமானக் கட்டுப்பாட்டிலொன்று.
உருசியென்பது எண்ணம், நாவிலில்லை.
உத்தம கையெழுத்து பிள்ளைகளுக்காகட்டும்.
பொருட்களைப் பார்த்து முதலில்
பிள்ளைகள் வரையக் கற்கட்டும்
பின்னர் எழுதிடக் கற்கட்டுமென்று
புதுப்பணி ஆசிரியத்தையன்றே மொழிந்தார்.
சத்தியத்தை நாடும் ஒருவனே
சரியான விதியைப் பின்பற்றுவான்.
வரவு, செலவிற்குக் கணக்கிடு!
ஒழுக்கமேயொருவனைக் கனவானாக்குமென்றார்.
பயம் போக்கும் மருந்து
பக்தியான இராமநாமமென்று
பணிப்பெண் ரம்பா ஆலோசனையில்
பணிவாகச் செபம் கற்றார்.
மகாத்மா பட்டம் பரவசமளிக்கவில்லை.
மகாத்மா பட்டத்தை மதியாதவர்.
மகாத்மா பட்டத்தில் வேதனையானவர்.
மகாத்மாவின் கூற்று இது.
உத்தமராய் உலகு போற்றும்
தித்திப்போ, கசப்போ – காந்தியின்
சத்தியசோதனை வாழ்வு
பத்தியமாகும் உலக மக்களிற்கு.
(காந்தி மறைவின் தினத்தையொட்டி எழுதியது.)

1 கருத்து:

vetha (kovaikkavi) சொன்னது…

பிரசுரித்ததற்கு மிக்க நன்றி அந்தி மாலை. 3 நாளாக கணனி திறக்கவில்லை. இறையாசி கிட்டட்டும்.

கருத்துரையிடுக