புதன், மே 09, 2012

இளமை தரும் கனி


இயற்கை மனிதனுக்கு அளித்துள்ள மிக அற்புதமான கனிகளுள் நெல்லிக்கனியும் ஒன்றாகும். அருநெல்லிக்காயை விட சற்று அடர்த்தியான பச்சை நிறத்தில் கோடுகளுடன் குட்டி எலுமிச்சம்பழ அளவில் இருக்கும் பெரிய நெல்லிக்காயில்தான் மருத்துவ குணங்கள் அதிகம் உள்ளன.

பழங்களிலேயே அதிக அளவு வைட்டமின் சி உள்ள பழம் இதுதான்.
100 கிராம் நெல்லிக்கனியில் 600 மில்லிகிராம் அளவு வைட்டமின் சி இருக்கிறது. கால்சியம் 50 மிகி; பாஸ்பரஸ் 21 மிகி, இரும்புச்சத்து, வைட்டமின் பி, மாவுச்சத்து 14 சதவிகிதம் உள்ளன.

நெல்லிக்காயையும், கனியையும் எப்படிப் பதப்படுத்தினாலும் அதில் இருக்கிற வைட்டமின் சி அழியாது. இது இக்கனியின் சிறப்பம்சமாகும்.

உடல் நலத்திற்கும், உடல் வளர்ச்சிக்கும் தேவையான எல்லா வித அமிலங்களும் அடங்கிய சிறந்த கனி நெல்லிக்கனிதான் என்று இந்திய மருத்துவ மேதையான சுஸ்ருதா சான்று தருகிறார்.


இதயக் கோளாறுகளையும் இப்பழம் குணமாக்குகிறது. நெல்லியை தேவாமிர்தம் என்றால் அது மிகையல்ல. உடலின் எல்லா அவயவங்களிலும் கலந்து அந்தந்த உறுப்புகளில் காணப்படும் கோளாறுகளைத் சரி செய்து நீண்ட நாட்கள் இளமைத் தோற்றத்துடன் வாழ வழி அமைத்துத் தருகிறது. “நெல்லிக்காய் லேகியம்” உடலுக்கு மிக நல்லது.

நெல்லிக்கனியின் சதை சிறு துவர்ப்பும், கசப்பும், புளிப்பும், இனிப்பும் கலந்து இருக்கும்.

இக்கனியை அப்படியே சாப்பிடப் பிடிக்காதவர்கள், அவித்தும் சாப்பிடலாம். அவித்தால், உப்பு சேர்த்துக்கொள்ளலாம்.

நீரிழிவு நோயாளிகளுக்கு நன்மை தரும் உணவுகளில் நாவற்பழத்திற்கு அடுத்து நெல்லியே இடம் பெறுகிறது. ஒரு கப் பாகற்காய் சாறுடன் ஒரு தேக்கரண்டி நெல்லிக்கனி சாறையும் காலையில் வெறும் வயிற்றில் அருந்தி வந்தால் நீரிழிவுக்காரர்களின் இரத்தத்தில் சர்க்கரை அளவு குறையும். இதைத் தொடர்ந்து இரண்டு மாதங்கள் இந்த முறைப்படி கலந்து அருந்தி வர வேண்டும்.

கண் பார்வை தெளிவாகத் தெரிய நெல்லிக்கனி சாறுடன் ஒரு தேக்கரண்டி தேனையும் சேர்த்து காலையும் மாலையும் அருந்தி வர வேண்டும். இப்படி ஏழு நாட்கள் அருந்திய பிறகு ஒரு வேளை மட்டும் அருந்தி வந்தால் போதும்.

உலர்ந்த நெல்லிக்கனியைத் தூள் செய்து வைத்துக்கொண்டால் தினமும் பயன்படுத்தலாம். எலுமிச்சம்பழ சர்பத்துடன் ஒரு தேக்கரண்டி அளவு இந்த தூளைச் சேர்த்து அருந்த, சீதள பேதி, வயிற்றுக் கடுப்பு முதலியவை உடனே குணமாகும்.

சொறி, சிரங்கு உள்ளவர்கள் ஒரு தேக்கரண்டி உலர்ந்த நெல்லிக்கனித்தூளுடன் அதே அளவு சர்க்கரையையும் சேர்த்து பாலுடன் அருந்த வேண்டும். தினமும் இதைத் தொடர வேண்டும். இதில் பாலின் அளவு அரை கப் மட்டும் இருத்தல் நலம்.

நெல்லிக்கனிச் சாறு கீல்வாதத்தைக் குணமாக்குகிறது. கீல் வாதத்திற்கு மேல்பூச்சாகத் தேய்க்க, நெல்லிக்காயிலிருந்து தயாரிக்கப்படும் தைலம் உபயோகப்படுகிறது.

முடி கொட்டிப்போவதையும், நரைப்பதையும் தடுக்கும் எல்லா விதமான சிறப்புத் தைலங்களின் முக்கிய மூலப்பொருள் நெல்லிக்கனிதான்.

நெல்லிக்கனி சாப்பிடுவதால் இதயம் வலுவாகிறது. நரம்பு பலவீனம் தடுக்கப்படுகிறது.

அடிக்கடி கோபப்படுகிறவர்களுக்கும், மன நலம் பாதிக்கப்பட்டவர்களுக்கும் நெல்லிக்கனி அருமையான மருந்து. மூளையையும் இது குளுமைப்படுத்துகிறது.

நெல்லிக்கனியின் தாயகம் இந்தியா.
நன்றி: இதயபூமி

4 கருத்துகள்:

Seelan சொன்னது…

good for health. thanks

vetha (kovaikkavi) சொன்னது…

i like this....Thanks...

baskaran சொன்னது…

nellai irukkum, ubbil uravaiththal mekavum nallathu.

Suthan france சொன்னது…

wonderfull;

கருத்துரையிடுக