புதன், ஆகஸ்ட் 01, 2012

சுமைக்கூலி முக்கால் பணம் - மலிவுவகை விமான சேவைகள்


தரைக்கு மேலே பல்லாயிரம் அடிகளில் பறக்கும் விமான பயணம் என்பது எப்பொழுதுமே ஒரு சாகசம்தான், விமானப் பயணம் என்பது கடந்த பத்தாண்டுகள் முன்பு வரை, பணக்காரர்களுக்கானது என்ற நிலையை, மலிவு விலை விமான சேவைகள் அடித்து நொறுக்கி வருகின்றன. ஐரோப்பாவை பொறுத்தமட்டில், ஐரோப்பிய ஒன்றிய இணைப்புகளைக் காட்டிலும் மக்களை இணைத்தது இந்த வகை விமான சேவைகள்தாம், குறிப்பாக ரையான் ஏர் என்ற விமான சேவை. மேல்நடுத்தர வர்க்கத்திற்கான இன்பச்சுற்றுலாக்களை, சாமனிய ஐரோப்பியர்களுக்கும் திறந்துவிட்டது ரையான் ஏர் விமானசேவை என்பது மிகைப்படுத்தப்பட்டதல்ல, ஏறக்குறை மூடப்பட வேண்டிய பல விமான நிலையங்களுக்கு மறு வாழ்வு அளித்தது ரையான் ஏர் என்பது குறிப்பிடத்தக்கது. இங்கிலாந்திலும் ஸ்காட்லாந்திலும் ஏகப்பட்ட கிழக்கு ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்தவர்கள், கட்டிட வேலைகளில் ஈடுபட்டிருப்பதைக் கண்டிருக்கலாம், ஐரோப்பிய ஒன்றியம் ஐரோப்பிய குடிமக்கள் எங்கு வேண்டுமானாலும் வேலை செய்யலாம் என்ற உரிமையத் தந்திருந்தாலும் , மக்களை எளிதாக இடம்பெயர இந்த வகைவிமான சேவைகள் கண்டிப்பாக உதவின.

ஆனாலும் சுண்டைக்காய் கால் பணம், சுமைக்கூலி முக்கால் பணம் என்ற வகையில் ரையான் ஏர் விமான சேவையோ அல்லது ஏனைய மலிவுவகை விமான சேவைகளை உண்மையில் அத்தனை மலிவானது அல்ல, அடிப்படை விலை ஒன்றுமே இல்லாதது போலத் தோன்றினாலும், அடுக்கடுக்காய் அவர்கள் வைக்கும் கட்டணங்கள், ஏனைய விமான சேவைகளைக் காட்டிலும் பல சமயங்களில் அதிகமாகவே வந்துவிடும்.

ஐரோப்பாவில் விஸ் ஏர், ரையான் ஏர் போன்ற மலிவுரக விமானசேவைகளின் பிரச்சினைகள்,

1. மேற்கண்ட இரண்டு விமான் சேவைகளும் பாரிஸ் , ஸ்டாக்ஹோல்ம், என்ற பெரு நகரங்களுக்கும் பறக்கிறோம் என்று விளம்பரம் செய்தாலும், உண்மையில் அவர்கள் அங்கு பறப்பதில்லை. சில ஆண்டுகளுக்கு முன்னர், முக்கிய விமானநிலையங்களுக்கான உரிமங்களில் ரையான் செய்த சில மேலும் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக