மேட்டூர் அணையில் தண்ணீர் குறைவாய் இருப்பதால், குறுவை சாகுபடிக்கு அணையைத் திறக்க வாய்ப்பில்லை எனத் தமிழக அரசு கையை விரித்து விட்டது.
நடந்து முடிந்திருந்த சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிட்டு, அனைத்து இடங்களிலும் டெபாசிட் தொகையை இழந்து மண்ணைக் கவ்வியிருந்த 'அகில உலகத் தமிழர் நலன் காக்கும் கழகம்' என்ற அமைப்பின் தலைவர் மாடசாமி, தம் கட்சியின் செல்வாக்கைப் பெருக்க, காவிரி நதி நீர்ப் பிரச்சினை உதவி செய்யும் என்ற நம்பிக்கையில் வேளாண் மக்களுக்கு ஆதரவாகப் போராட்டத்தில் குதிக்க முடிவு செய்தார்.
போராட்டத்தின் முதல் கட்டமாக ஒரு நாள் உண்ணாவிரதம் இருக்கலாம் என்ற முடிவுக்கு வந்தார்.
"கொலஸ்டிரால் எக்கச் சக்கமாக ஏறியிருக்குது. உடம்பைக் குறைக்கணும்னு டாக்டர் வற்புறுத்திச் சொல்லிக்கிட்டேயிருக்காரு. நீங்க என்னடான்னா இந்த வயசிலேயும் வாயைக் கட்டாம எதையாவது தின்னுக்கிட்டேயிருக்கீங்க",என்ற மனைவிமார்களின் இடைவிடாத முணுமுணுப்பு தான் அந்த முடிவுக்குக் காரணம்.
ஒரே கல்லில் இரண்டு மாங்காய்! உண்ணாவிரதம் இருப்பதால், வேளாண் மக்களின் ஆதரவு கிட்டும்; அதே சமயம், வயிற்றுக்குக் கட்டாய ஓய்வு கொடுப்பதால், உடம்பு எடையும் கொஞ்சம் குறையும்.
நிறைய செலவு பண்ணி மக்கள் கூட்டத்தைக் கூட்டி, பேரணிக்கு ஏற்பாடு செய்தவர், தமது ஒரு நாள் உண்ணாவிரதம் பற்றி அறிவிப்பதற்காக மேடை ஏறினார். கூடியிருந்த எழுச்சிமிக்க மக்கள் வெள்ளத்தைக் கண்டு உணர்ச்சி வசப்பட்டு, 'ஒரு நாள் உண்ணாவிரதம்' என்பதற்குப் பதிலாகச் 'சாகும் வரை உண்ணாவிரதம்' என்று வாய் தவறிச் சொல்லி விட்டார்.
"காவிரி மன்ற உத்தரவுப்படி 192 டி.எம்.சி. தண்ணீரைக் கர்நாடகா விடமிருந்து மத்திய அரசு பெற்றுத் தரவேண்டும்; இல்லையேல் சாகும் வரை உண்ணாவிரதம் இருக்கப் போகிறேன்" என்ற அவரது அதிரடி அறிவிப்பைக் கேட்டுக் கூடியிருந்த மக்கள் செய்த கரகோஷம் விண்ணைப் பிளந்தது. அப்போதுதான் தாம் செய்த தவறு, அவருக்குப் புரிந்து என்ன செய்வது என்று தெரியாமல் பேந்தப் பேந்த விழித்தார்.
"தமிழக விவசாய மக்களின் துயர் துடைக்கத் தம் இன்னுயிரை ஈவதற்கு முன் வந்திருக்கும் நம் தலைவரின் தியாகம் மகத்தானது," என்றும் 'தியாகச் செம்மல்'என்றும் அடுத்து வந்தவர்கள் அவரை வானளாவப் புகழ்ந்து பேச, வேறு வழியின்றி சாகும் வரை உண்ணாவிரதம் இருக்க வேண்டிய தாயிற்று.
இந்த அறிவிப்பைக் கேட்ட மற்றக் கட்சித் தலைவர்கள், ஏதோ நகைச்சுவை துணுக்கைக் கேட்டவர் போல் நகைத்து விட்டு, 'இது வெறும் அரசியல் ஸ்டண்ட்'என்று கிண்டல் செய்தனர்.
துவக்க நாளன்று மூக்குப் பிடிக்கத் தின்று விட்டு, மேலும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக