திங்கள், ஆகஸ்ட் 13, 2012

புது மனைவி


கையில் கலக்கிக் கொடுத்த பானம்
இன்னதென்று யூகிக்க இயலாவிடினும்
ஏதோ ஓர் அனுமானத்தில்
புது மனைவியைக் குளிர்விக்க எண்ணி
தேநீர் மிகப் பிரமாதம், என்றேன்;.
அது புரூ காபிப்பா, என்றாள் அவள்,
இது கூடத் தெரியவில்லையே என்ற
ஏளனத்தை முகத்தில் தேக்கியபடி!

உப்பும், மிளகாய்த் தூளும்
வஞ்சனையின்றி வாரி வழங்கி
அம்மணி சமைத்த சாப்பாட்டை
விழுங்கவும் முடியாமல்
துப்பவும் முடியாமல் நான் தவிக்க,
சிரமப்பட்டு நான் செஞ்ச சமையலை
வாயைத் தொறந்து,  ரெண்டு வார்த்தை
பாராட்டினா  முத்தா விழுந்துடும்?
பாராட்டவும் ஒரு மனசு வேணும்,
அது ஒங்கக்கிட்ட இல்லை, என்றாள்
முகத்தை ஒன்றரை முழம்
தூக்கி வைத்துக் கொண்டு!

வேறொரு நாள்... 
சமையலில் கை தேர்ந்து விட்டாய்;
இன்று உன் சமையல் அருமை என்றேன்;
சமைத்தது உங்க ளம்மா;
தெரிந்து கொண்டே, வேண்டுமென்று
என்னைக் வெறுப்பேற்றுகிறீர்என்றாள்,
கடுகு வெடிக்கும் முகத்துடன்!

மனைவியின் பிறந்த நாளை
அரும்பாடுபட்டு நினைவில் நிறுத்தி
பத்துக் கடை ஏறி இறங்கி
ஆசையாய் வாங்கிப் பரிசளித்த
பச்சை வண்ணப் புடவையைத்
தூக்கி ஓரத்தில் மேலும் 

2 கருத்துகள்:

vetha (kovaikkavi) சொன்னது…

''...வெட்ட வெளியில் நின்ற வண்ணம்
”என்னைப் பிடிக்காதவளாக
இருந்துவிட்டுப் போடி!” என்று
வாய் விட்டுக் கத்தினேன்,
அவள் பக்கத்தில் இல்லையென்பதை
உறுதி செய்து கொண்டு!....''
ha...ha..!!!I am laughing....!!!
Thank you Best wishes..
Vetha.Elangathialkam.
(From anthimaalai web)

Seelan சொன்னது…

Very good story

கருத்துரையிடுக