வியாழன், ஆகஸ்ட் 02, 2012

நான் ஈ; சுட்டிக்கதைகளின் நீட்சி!


‘அம்புலிமாமா’ வகையறா சுட்டிக்கதைகளை பிடிக்காத குழந்தைகள் இருக்க வாய்ப்புக்கள் குறைவு. எங்களுக்கு திரைப்படங்கள் அறிமுகமாவதற்கு முன்னரே புனைவிலும், கதை சொல்லுகிற உத்தியிலும் பிரமாண்டமும்- பிரமிப்பும் ஒருங்கு சேர வைத்து எம்முள் ஆக்கிரமிப்புச் செய்தவை சுட்டிக்கதைகள்.

பாட்டியும், தாத்தாவும் சொல்லுகிற (வேதாளம்- விக்ரமாதித்தன் உள்ளிட்ட) கதைகளில் இருக்கிற ஏரண/தர்க்கவியல் (Logic) மீறல்களை குழந்தைகள் இலகுவாக கண்டுபிடித்துவிடும். ஆனாலும், குழந்தைகளுக்கு தாத்தா, பாட்டியின் கதையின் வழி வருகிற ஏழு மலை- ஏழு கடல் தாண்டியிருக்கிற இளவரசியும், வைரமும் இயல்பாகவே கற்பனைக் குதிரையை தட்டிவிட்டு ‘புதிய உலகத்தை’ படைப்பவை. வளர்ந்து விட்ட பின்னரும் இன்னும் அம்புலிமாமா வகையறா கதைகளுக்குள் சிக்கிக் கொண்டிருக்கிறவர்கள் ஏராளம். நானும் இன்னும் அதிலிருந்து வெளிவரவில்லை.

விநோதங்களையும் வியப்புக்களையும் கற்பனையின் வழி கொடுத்து குழந்தைகளை வெற்றிபெறுகிற ‘யுத்தி’ காலம் காலமாக இருப்பதுதான். ‘வேதாளம்- விக்ரமாதித்தன்’ கதைகளிலிருந்து அண்மைய நாட்களில் உலகெங்கும் சக்கை போடுபோடும் ஜே.கே.ரௌலிங்கின் ‘ஹரிபோட்டர்’ வரை புனைவுகளின் பிரமாண்டங்கள் ரசிக்கப்பட்டுத்தான் வருகின்றன. அது, வாய் வழியிலிருந்து குட்டிக் குட்டி புத்தகங்களுக்குள் சென்று பின்னரான காலத்தில் தொலைக்காட்சி, சினிமா என்கிற பெரிய நவீன கதை சொல்லிகளினூடு பாய்ச்சல் பெற்றிருக்கிறது. இவ்வாறான கதைகளின் முக்கிய இலக்கு குழந்தைகளும்- சிறுவர்களும். அப்புறமாக, குழந்தையாக மாறத்தெரிந்த பெரியவர்களும்.

இராமாயணம், மகாபாரதம் என்கிற வடிவில் உலகத்துக்கு மிகப்பெரிய புனைவுகளை கொடுத்த நாடு இந்தியா. இராமாயணமும்- மகாபாரதமும் கூட வாய்வழி ஆரம்பித்து தெருவேர நாடகங்கள், புத்தகங்கள், தொடர்கள், சினிமாக்கள் என்கிற அனைத்து வழிகளிலும் எம்முடைய வாசல் வந்துவிட்டது. புதிய புதிய வடிவங்களில் மீண்டும் மீண்டும் வந்துகொண்டுமிருக்கிறது. இயக்குனர் மணிரத்னம் மகாபாரதத்தின் ஒரு பகுதியை ‘தளபதி’யாகவும், இராமாயணத்தை ‘இராவணன்’ என்கிற பெயரிலும் படமாக எடுத்துவிட்டார். அதில், ரஜனி நடித்த ‘தளபதி’ குறிப்பிட்டளவு வெற்றியையும், விக்ரம் நடித்த ‘இராவணன்’ மிக மோசமான சினிமா பிரதியாகவும் வந்தது. 

தமிழில் வெளிவந்த (குறிப்பிட்டளவு உண்மைகளையும் உள்ளடக்கிய) மிகவும் பிரமாண்டமான புனைவு என்றால் எழுத்தாளர் கல்கியின் ‘பொன்னியின் செல்வனை’க் குறிப்பிட முடியும். தமிழ் இலக்கிய சூழலில்(?) அல்லது புனைவு எழுத்துலகில் பொன்னியின் செல்வனின் வீச்சம் இன்னும் தொடர்ந்து கொண்டேயிருக்கிறது. பெரியவர்களை(?) இலக்காக கொண்டு கல்கி, பொன்னியின் செல்வனை எழுதியதாக சொல்லிக் கொண்டாலும், அதன் வெற்றி என்பது பெரியவர்களுக்குள்ளும் இருக்கிற சுட்டி- குட்டி மனநிலையிலிருந்தும் ஆரம்பித்தது.

பல நாட்டு இதிகாசங்களும்- புனைவுக்கதைகளும் சினிமாவாகி உலகளாவிய ரீதியில் வெற்றிபெற்ற போதிலும் ‘பொன்னியின் செல்வன்’ இன்னும் சினிமாவாகிவிடவில்லை.  எம்.ஜி.ஆரில் இருந்து பலரும் பொன்னியின் செல்வனை திரை வடிவத்துக்குள் கொண்டு வரவேண்டும் என்று முயற்சித்தார்கள். இறுதியாக இயக்குனர் மணிரத்னமும் முயற்சிகளில் இறங்கிவிட்டு அப்படியே விட்டுவிட்டார். 

எம்.ஜி.ஆர் காலத்தில் ‘பொன்னியின் செல்வம்’ திரைப்படமாவது என்பது மிகவும் அதீத பணமுதலீடுகளை கொண்டவை. ஆனால், தற்போதுள்ள நவீன தொழிநுட்ப யுகத்தில், குறிப்பாக கணனி வரைகலை மேலும் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக