சனி, செப்டம்பர் 13, 2014

ஆண்மை வீரியத்தை அதிகரிக்கும் உணவுகள்!

உணவுகள் காதல் செயல்பாடுகளை தூண்டுமா? என்ற கேள்விக்கு விஞ்ஞானத்தில் பதில் ‘ஆமாம்’! என்றுதான் சொல்லப்பட்டுள்ளது.
அந்தந்த ஊருக்கு ஏற்றபடி காதல் உணவுகள் மாறுகின்றன.
அரேபியருக்கு ஒட்டக திமிலும், ஸ்பெயின் நாட்டவருக்கு குங்குமப்பூவும்,சீனர்களுக்கு பறவைக்கூடு சூப்பும் பாலுணர்வை தூண்டும் உணவாக குறிப்பிடப்பட்டுள்ளன.

வைட்டமின்களும் தாது உப்புகளும்
ஆண்மை வீரியத்தை அதிகரிக்க துத்தநாகம் இன்றியமையாதது.
எல்லா பழங்களிலும் காய்கறிகளில் இருக்கும் பொட்டாசியம் ஆண்மை வீரியத்தை அதிகரிக்கும்.
செலினியம் உள்ள வெண்ணெய், மீன்கள், முழுக்கோதுமை, எள் முதலியவைகளும் காதல் உணவுகள்
மங்கனீஸ் அடங்கிய கொட்டைகள், விதைகள், முழுத்தானியங்கள் முதலியவைகளும் பாலியல் ஆற்றலுக்கு உதவும்.
பாஸ்பரஸ், தாதுப்பொருளும் ‘தாது விருத்திக்கு’ உதவும். வைட்டமின் ‘இ’(E),‘சி’(C),‘ஏ’(A),‘பி’ காம்ப்ளெக்ஸ்(B Complex), ஃபோலிக் அமிலம்(B9), விட்டமின் பி 6, பி 12, இருக்கும் உணவுகள்.

பிரசித்தி பெற்ற உணவுகள்
பாதாம் பருப்பு – தொன்று தொட்டு ஆண்மையையும், மக்களைப் பெற சக்தி அளிக்கும் உணவாக கருதப்படுகிறது.
கருமிளகு, தேன், மிளகாய் முதலியன பாலுணர்வை தூண்டும் உணவாக கூறப்படுகின்றன.
ஆயுர்வேதத்தின் படி கோதுமை அரிசி, உளுத்தம் பருப்பு இவை ஆண்மையை ஊக்குவிக்கும், விந்துவின் தரத்தை உயர்த்தும்.
சோம்பு சமையலிலும் பயன்படுகிறது. மையலிலும் பயனாகிறது!

வாழைப்பழம்
பொட்டாசியமும் ‘பி’ விட்டமின்களும் செக்ஸ் ஹார்மோனை தயாரிக்கத் தேவை.
எனவே வாழைப்பழம் ஒரு ஆண்மையை பெருக்கும் முக்கியமான பழமாக கருதப்படுகிறது.
உடல் ஆரோக்கியத்தை பாதுகாக்கும் துளசி ஆண்களின் பாலுணர்வு ஆர்வத்தை தூண்டுகிறது.
வாழைப்பழத்தில் உள்ள ஒரு வேதிப்பொருள் செக்ஸ் உணர்வை அதிகரிக்கும்.
பப்பாளி, மாம்பழம், கொய்யாபழம் இவைகளும் சிறந்த இளமை காக்கும் பழங்கள்.
கொய்யாப்பழம் பெண்களின் ஜனனேந்திரிய உறுப்புக்களின் தசைகளை வலுப்படுத்தும்.

சாக்லேட்
சாக்லேட் ஒரு ஆன்டி – ஆக்சிடான்ட். இதில் உள்ள தியோப்ரோமைன் வேட்கையை பெருக்கும்.
பால் அதுவும் எருமைப்பால், தயிர்(பகலில்) மோர், வெண்ணை, நெய் இவை இல்லாமல் இந்திய உணவுகள் இல்லை.
இவையெல்லாம் உடலுறவுக்கு வலிமை ஊட்டும் உணவுகள்.

காதல் ஆப்பிள்
வெங்காயம் தொன்றுதொட்டு  இந்தியாவில், எகிப்தில், அரேபியாவில் ஆண்மை ஊக்கியாக பயன்படுத்தப்பட்டு வரும் காய்கறியாகும்.
அதுவும் வெள்ளை வெங்காயம் சிறந்தது. வெள்ளை வெங்காயத்தை நெய்யில் வதக்கி உண்ண வேண்டும்.
“ஆனியன் சூப்” புத்துணர்ச்சி ஊட்டும். இவை தவிர குடமிளகாய், இஞ்சி, செலரி, வெள்ளரி, தனியா இவைகளும் உதவும்.
பூமிக்கு அடியில் விளையும் கிழங்குகள், பூமியின் சக்தியை உறிஞ்சி, அதை நமக்களிக்கும்.
கேரட், முள்ளங்கி போன்றவை ஆண்மையை பெருக்கவல்லவை.
தக்காளியும் சிறந்த பாலுணர்வு ஊக்கி. பிரான்சில் இதை ‘காதல் ஆப்பிள்’ என்பார்கள்.


மாமிச உணவுகள்
மாமிச வகைகளில் நீர் வாழ் பிராணிகளின் மாமிசம் உண்பது நல்லது.
கடல் மீன்களை விட நதிமீன்கள் பாலியல் உணர்வை தூண்டுபவை. கடல் முத்துசிப்பி, சிறந்த ஆண்மை பெருக்கியாக கருதப்படுகிறது.

வெற்றிலை
 உணவுக்கு பின் தாம்பூலம் தரிப்பது உடலுறவு ஆசையை தூண்டும்.
ஆனால் பாக்கு, புகையிலை, ஆல்கஹால்(மதுபானங்கள்) இவை எதிர்மாறான விளைவுகளை உண்டாக்கும்.

தேன்
எகிப்தியர்கள் காலத்திலிருந்தே பல பழங்கால மருந்துகள் தேன் அடங்கியவை. மீட் என்ற பானம் தேனிலிருந்து தயாரிக்கப்பட்டது.
இது காதல் உணவை அதிகப்படுத்தும் மருந்தாக கருதப்படுகிறது.

வாசனை திரவியங்கள்
ஜாதிக்காய், ஏலக்காய், குங்குமப்பூ, இலவங்கப் பட்டை இவைகளும் ஆசையை அதிகரிக்கும் குறிப்பாக ஜாதிக்காய் “விந்து முந்துதலை” தடுக்கும்.
இந்த வாசனை திரவியங்களை பாலுடன் சேர்த்து உட்கொள்ள வேண்டும்.
இலவங்கப்பட்டை தான் ஆசைய ஊக்குவிக்கும். அதன் இலைகள், எதிர்மாறாக ஆண்மை ஆசையை குறைத்து விடும்.

பாலுணர்வை குறைக்கும் உணவுகள்
ஒரு சராசரி மனிதனுக்கு தேவையான புரதம், கார்போஹைடிரேட், கொழுப்பு, வைட்டமின்கள், தாதுப்பொருட்கள் செறிந்த உணவுகளை தேவையான கலோரிகளில் எடுத்துக் கொள்ளாவிட்டால், உடல் ஆரோக்கியத்துடன் பாலியல் திறனும் சிதைந்து விடும்.
சர்க்கரை, மதுபானங்கள், காப்பியில் உள்ள காஃபின்(Caffeine) முதலியவை, ஊட்டச்சத்து உணவை, உடல் உட்கிரகிக்க விடாது.
இதனால் ஆரோக்கியம் குன்றினால் ஆண்மையும் குறையும்.
எனவே அதீத காதல் உணர்வுகளால் கஷ்டப்படுபவர்கள் இனிப்பு, சோயா நிறைந்த உணவுகளால் இச்சையை ஒரளவாவது கட்டுப்படுத்திக் கொள்ளலாம்.
பாலியல் ஆசையை கட்டுப்படுத்த உதவும் உணவுகளில் ஒன்று சோயாவிலிருந்து தயாரிக்கப்படும் “டோஃபு”.(Tofu/ Soya meat)
சோயா பால் மற்றும் டோஃபூ, உடல் துத்தநாகத்தை கிரகிப்பதை தடுக்கிறது.
வெள்ளரிக்காய், டர்னிப், முட்டைக்கோஸ் போன்றவைகளும் செக்ஸ் ஆசையை குறைக்கிறது.
இந்த உணவுகள் தைராய்டு செயல்பாடுகளை குறைக்கும். தைராய்டு தான் பாலியல் உணவுகளை கன்ட்ரோல் செய்கிறது.
நன்றி:tamilcinematv.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக