ஞாயிறு, செப்டம்பர் 07, 2014

ஒரே வாரத்தில் உடல் எடையை சுமார் 5 கிலோ வரை குறைப்பதற்காக ஆரோக்கியமான வழிமுறை.

ஏழு நாட்களும் தினசரி குறைந்தபட்சம் 10 குவளை தண்ணீர் கண்டிப்பாக குடிக்க வேண்டும்.

நாள் 1:
முழு நாளும் பழ வர்க்கங்கள் மட்டுமே சாப்பிட வேண்டும். வாழைப்
பழங்களுக்கு மட்டும் அனுமதியில்லை. எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிடலாம். melon(தர்ப்பூசணி/வத்தகைப்பழம்) ஐட்டம்ஸ் அதிகம் பயன்படுத்துங்கள். (பழச்சாறு கூடாது. பழ வகைகளை அப்படியே சாப்பிட வேண்டும்)

நாள் 2:
முழு நாளும் காய்கறிகள் மட்டுமே சாப்பிட வேண்டும். எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிடலாம்.
காய்கறிகளை சமைத்தோ சமைக்காமலோ விருப்பம் போல் சாப்பிடலாம். சமைக்கும்போது எண்ணெய், தேங்காய் இவைகளைக் கண்டிப்பாகப் பயன்படுத்தக்கூடாது.
காலை உணவுக்குப் பெரியதொரு உருளைக் கிழங்கைச் சமைத்து(அவித்து) சாப்பிட வேண்டும்.


நாள் 3:
பழ வகைகளும் காய்கறிகளும் சாப்பிட வேண்டும். வாழைப்பழம் கூடாது.
உருளைக் கிழங்கு கூடாது.(பழச்சாறு கூடாது)


நாள் 4: 

முழு நாளுக்கு 8 வாழைப் பழங்கள், 3 குவளை பால். தேவையெனில்
ஒரு குவளை காய்கறி சூப் சாப்பிடலாம். சூப்பிற்கு எண்ணெய் கண்டிப்பாகப் பயன்படுத்தக்கூடாது.


நாள் 5:
ஒரு குவளை(கப்) அரிசி சாதம் சாப்பிடலாம். 6 முழு தக்காளி சாப்பிட வேண்டும். இன்றைய நாளில் மற்ற நாட்களைவிட அதிகம் தண்ணீர் குடிக்க
வேண்டும் ஆகக் குறைந்தது 12 குவளை தண்ணீர் குடிக்க வேண்டும்.


நாள் 6: 

மற்றொரு காய்கறி நாள். காய்கறிகளை சமைத்தோ சமைக்காமலோ சாப்பிடலாம். சமைக்கும்போது கண்டிப்பாக தேங்காய், எண்ணெய்
போன்றவைகளை பயன்படுத்தக் கூடாது. காய்கறிகளுடன் ஒரு குவளை அரிசி சாதம்.

vegetables clip art
நாள் 7:
6 ஆம் நாளை போன்று அப்படியே செய்யவேண்டும். கூடுதலாக எல்லா வகை பழச்சாறுகளும் குடிக்கலாம். பழச்சாறு தயாரிக்கும்போது இனிப்பு(Sugar) பயன்படுத்தக்கூடாது.

தினசரி செய்யும் அலுவல்களில் எதையுமே நிறுத்தாமல், இந்த டயட்டை அப்படியே பின்பற்றினால் 8 ஆம் நாளில் 4-5 கிலோ எடை குறைந்திருப்பது உறுதி. அதிகப்படியாக குறைந்தது அரை மணி நேரம்
நடைப்பயிற்சியும் தினசரி எடுத்தால், குறைந்தது 6 கிலோ எடை குறைந்திருக்கும்.
இந்த டயட் நாட்களில் சோம்பல், உடல் களைப்பால்
தினசரி அலுவல்களில் எதையாவது செய்யாமல் நிறுத்தினால் 8 ஆம் நாளில் எதிர்பார்க்கும் 4-5 கிலோ குறைவு இருக்காது. ஆனால், குறைந்தது 3 கிலோ குறைவது உறுதி! மூன்றாம் நாளிலிருந்து உடல் களைப்பு அதிகம் இருக்கும். தினசரி அலுவல்களில் எதையுமே நிறுத்தாமல் தொடர்பவராக இருப்பின்
நான்காம் நாள் மதிய வேளைகளில் உடல் தளர்ந்து விடும். அன்றைய தினம் கடந்து விட்டால், 6-7 ஆம் தினங்களில் உடலின் சுறுசுறுப்பு திரும்பக்கிடைத்து விடும். உடல் எடை குறைந்து மிகவும் அழகாக ஆனால் சுறுசுறுப்பான மனிதராகி விடுவீர்கள். முயற்சித்துப் பாருங்கள், பலனை (Resulat) எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். 

 

நன்றி:சிவகுரு அரிகரன் மற்றும் World Wide Tamil People

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக