வியாழன், ஜனவரி 09, 2014

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 97 மானம்

மயிர்நீப்பின் வாழாக் கவரிமா அன்னார்
உயிர்நீப்பர் மானம் வரின். (969)
 
பொருள்: தனது உடலில் உள்ள உரோமக் கற்றையில்(மயிர்த் திரளில்) ஒரு முடியை(மயிரை) இழக்க நேர்ந்தாலும் உயிர் வாழ விரும்பாத கவரிமானைப் போன்று மானமுள்ள மனிதர்கள், மானம் அழிய நேர்ந்தால்(அவமானம் ஏற்பட்டால்) அதனைத் தாங்காமல் இறந்து விடுவர்.

1 கருத்து:

யோகன் பாரிஸ்(Johan-Paris) சொன்னது…

ஒரு மயிரை இழப்பதால் எந்த விலங்கும் இறப்பதில்லை. தயவு செய்து இவற்றையும் படிக்கவும்.
http://www.eegarai.net/t89573-topic

http://johan-paris.blogspot.fr/2006/10/blog-post_05.html -கவரிமா! வள்ளுவர்.......கவரிமான் நாம்......

கருத்துரையிடுக