சனி, ஜூன் 09, 2012

முந்திரியின் மகத்துவம்

எதையாவது துடுக்குத் தனமாகவோ அல்லது முந்திக் கொண்டோ செய்பவர்களை முந்திரிக் கொட்டை என்று திட்டுவார்கள். அதற்குக் காரணம் முந்திரிப் பழத்தைப் பார்த்தாலே புரிந்து விடும்.


பொதுவாக ஒரு பழத்தின் கொட்டை பழத்திற்குள்தான் இருக்கும். ஆனால் முந்திரி கொட்டை மட்டும் பழத்திற்கு வெளியே நீட்டிக் கொண்டிருக்கும்.

சரி இந்த முந்திரியின் பூர்வீகம் எது தெரியுமா? பிரேசில். முந்திரிப் பழம் ஒரு பொய்க்கனியாகும். பழம் போலத் தோன்றினாலும் அது உண்மையில் பழம் இல்லை. இந்த பழத்தின் வெளியே முந்திரிக் கொட்டை உருவாகும். முந்திரியைப் பாதுகாக்கும் வகையில் அமைந்திருக்கும் இந்த பழத்தின் திரவம் தோலில் பட்டுவிட்டால் எரிச்சலையும், கொப்புளத்தையும் ஏற்படுத்திவிடும்.


பிரேசில் பூர்வீகமாக இருந்தாலும் உலகளவில் முந்திரி அதிக பரப்பளவில் பயிரிடப்படுவது இந்தியாவில்தான். ஆனால் இங்கு மகசூல் குறைவாகவே உள்ளது. இந்தியாவில் கேரளா மாநிலம்தான் முந்திரி உற்பத்தியில் முதலிடம் வகிக்கிறது.

முந்திரி பழத்தில் இருந்து முந்திரிக் கொட்டையை மனிதர்களால் பிரிக்க முடியாது. எனவே, மூடப்பட்ட சிலிண்டருக்குள் முந்திரிக் கொட்டைகளைப் போட்டு, சிலிண்டரை சூடுபடுத்துவார்கள். அப்போது அந்த பழம் வெடித்து முந்திரி தனியாக பிரியும்.

முந்திரிக் கொட்டை திரவமும் பல்வேறு விதங்களில் பயன்படுத்தப்படுகிறது.

உண்மையில் முந்திரியும் நச்சுத்தன்மை வாய்ந்த ஜவி என்ற தாவரமும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவைதான்.

பலருக்கும் முந்திரிக் கொட்டையால் ஒவ்வாமை ஏற்படுகிறது. ஆனாலும், எல்லா கொட்டை வகைகளையும் எடுத்துக் கொண்டால் முந்திரிக் கொட்டை குறைந்த அளவு ஒவ்வாமை கொண்டதாக உள்ளது. நிலக்கடலைதான் அதிக ஒவ்வாமை தன்மை கொ‌ண்ட பரு‌ப்பு வகையாகும்.

நன்றி: stharsha.blogspot.com

1 கருத்து:

vetha (kovaikkavi) சொன்னது…

நாம் கழுத்துறை மாவட்டம் கொறணயில்(எஸ்டேட்டில்) இருந்து போது வீட்டில் கசு மரம் இருந்தது. பழம் நன்கு பழுத்தால் மிக ருசியாக இருக்கும். பால்படாமலேயே கவனமாகக் கையாளுவோம். உடலில் பட்டால் எரியும். தோலை அள்ளிவிடும். இதைப் பார்க்கும் போது பழைய நினைவு வந்தது. நன்றி. அந்தி மாலைக்கும் வாழ்த்து.

கருத்துரையிடுக