ஐஸ்கிரீமில் தங்கம் என்றவுடன் எடுத்து நகை செய்யலாம் என யோசித்து விடாதீர்கள். இந்த தங்கத்தை சாப்பிட மட்டுமே முடியும். நியூயார்க்கில் உள்ளது 'செறேண்டிபிட்டி' என்ற உணவகம். இந்த உணவகத்தில் உணவுகள் அனைத்துமே விலை உயர்ந்தவை என்பதால் கின்னஸ் புத்தகத்திலும் இடம் பிடித்துள்ளது. தங்கள் உணவகத்தின் பொன்விழா ஆண்டை குறிப்பிடும் வகையில் தங்கத்தால் ஆன இந்த ஐஸ்கிரீமை அறிமுகப்படுத்தியுள்ளது 'செறேண்டிபிட்டி'. இந்த ஐஸ்கிரீம் ஒன்றின் விலை 15,730 பவுண்டுகள் அதாவது 29,10050.00 இலங்கை ரூபாய்கள்.
உலகத்திலேயே இது தான் தற்போது விலையுயர்ந்த ஐஸ்கிரீமாக கருதப்படுகிறது. இதற்கென தனியாக கைதேர்ந்த சமையல் நிபுணர்களைக் கொண்டு இந்த ஐஸ்கிரீம் தயாரிக்கப்படுகிறதாம். இந்த ஐஸ்கிரீமில் இரண்டு வகைகள் உள்ளன. "கிராண்ட் ஒபுலேன்ஸ் சண்டே" என்ற ஐஸ்கிரீம் வேண்டுமானால் 48 மணி நேரத்திற்கு முன்னதாகவே அறிவித்து விட வேண்டும்.
அதேபோல் "பிர்ர்ரோசன் ஹவுட் சாக்லேட்" வகைக்கு இரு வாரத்திற்கு முன் உணவகத்திடம் கூறி விட வேண்டுமாம். இந்த ஐஸ்கிரீமில் விலையுயர்ந்த வெண்ணிலா ஐஸ்கிரீமில் பலவித விலையுயர்ந்த பழங்களும் சேர்க்கப்பட்டு அதன் மேலே 24 காரட் சுவிஸ் தங்கம் இலைகளாக துருவப்பட்டு தூவப்பட்டுள்ளது. இதை சாப்பிடுவதற்கு தங்கத்தாலான ஸ்பூன் தரப்படுமாம்.
பணக்கார ஆண்கள் தங்கள் பெண் நண்பிகளிடம் பந்தா காட்டிக் கொள்வதற்காக இந்த ஐஸ்கிரீம்களை அதிகம் வாங்குகின்றனராம். இதற்கு தேவைப்படும் சில பொருட்களை பிற நாடுகளில் இருந்து அவ்வப்போது வரவழைக்க வேண்டியிருப்பதால் முன்கூட்டியே கூறி விட வேண்டும் என்கிறது 'செறேண்டிபிட்டி'. சாப்பாட்டிற்கு பிறகு பலர் சாப்பிடக் கூடிய ஐஸ்கிரீம் இந்த விலை என்றால் அந்த உணவகத்தில் இருக்கும் உணவு வகைகள் விலை எப்படி இருக்கும். யோசித்துப் பாருங்கள்!!!
நன்றி: paadumeen.blogspot.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக