வெள்ளி, ஜூன் 15, 2012

பாக்கை மென்று பெறும் வாய் புற்றுநோய்..




வெற்றிலைப் பாக்கு, பான் பராக் உள் ளிட்ட புகையிலையுடன் கூடிய பாக்கு கலப்புகளை சதா மென்றுக் கொண்டிருப்பவர்களுக்கு வாய் புற்று நோய் ஏற்படும் வாய்ப்பு மிக அதிகமாகும்.

சுயிங்கத்தில் ஆரம்பித்து நாள் முழுவதும் மெல்லும் இப்பழக்கம் உள்ளவர்கள், பின்னாளில் பான் பராக் போன்ற புகையிலை கலந்த பாக்கை மெல்லத் தொடங்குகின்றனர். இவைகளை மெல்லும் போது சுரக்கும் உமிழ் நீருடன் கலக்கும் பாக்குச் சாறு, வாய்க்குள் உள்ள கண்ண உள் சுவர்களை பாதிக்கிறது.
வாய் உள் சுவர்களில் உள்ள தசை நார்கள் நாளடைவில் இறுகத் தொடங்குகின்றன. ஒரு கட்டத்தில் அவை மிக இறுக்கமாக ஆகிவிடும் போது, வாயை அசைக்க முற்படும்போது சதை நார்கள் ஒத்துழைக்காது. மாறாக, அவை கடினப்பட்டு, வாயில் இருந்து எச்சில் சுரந்து வெளியே வழியும்போது கூட ஒன்றும் செய்ய முடியாத நிலை உருவாகிறது.

இப்படிப்பட்ட கடினப்பட்ட வாய் உள் தசை நார்களில் புற்று நோய் உருவாகிறது. அது மிகக் குறுகிய காலத்தில் வாய் புற்று நோயாக ஆகி, பேச்சுக்கும் பிறகு உயிருக்கும் உலை வைத்து விடுகிறது. இந்த வாய் புற்று நோயை ஆங்கிலத்தில் ஓரல் சப்மியூக்கஸ் ஃபைரோசிஸ் (Oral Sub mucous fibrosis - OSF) என்று கூறுகின்றனர்.

வெற்றிலை பாக்கு போடுவோரில் நாள் முழுவதும் அதனை குதப்பிக்கொண்டிருப்பவர்களைத் தவிர, அது பெரிதாக யாரையும் பாதிப்பதில்லை. ஆனால், பான் பராக் போன்ற புகையிலையுடன் கலந்த பாக்கை குதப்புபவர்களுக்கு நிச்சயம் கடும் பாதிப்பை ஏற்படுத்துகிறது.

இந்தியா உள்ளிட்ட தெற்காசிய நாடுகளைச் சேர்ந்த ஒன்றரை இலட்சம் பேர் ஒவ்வொரு ஆண்டும் இந்த நோயால் பாதிக்கப்படுகின்றனர். இவர்களில் 50 விழுக்காட்டினருக்கு வாய் புற்று நோய் ஏற்படுவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது 2004ஆம் ஆண்டுக் கணக்கு, இப்போது இரண்டு மடங்காகியிருக்கலாம்.
2004ஆம் ஆண்டில் இது தொடர்பாக நடத்தப்பட்ட ஆய்வில், சில மரபணுக் கூறுகள் கொண்டவர்களை இந்த நோய் மிக வேகமாகப் மேலும் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக