வியாழன், ஜூன் 28, 2012

கோடையில் எச்சரிக்கை!

கோடைகாலம் தவிர்க்க முடியாதது. ஆனால், கோடை வெப்பத்தை நம்மால் தவிர்க்க இயலும். நாம்  கையாளும் இயற்கை வழிமுறைகள் நம் உடலையும் கோடை வெப்பத்தில் இருந்து பாதுகாக்க உதவும்.

கோடை வந்துவிட்டாலே உடம்பில் அயற்சியும் ஆயாசமும் கூடவே தண்ணீர் தாகமும் ஏற்படுவது  இயற்கை. கோடை காலத்தில் உடம்பில் உள்ள நீர்ச்சத்து அதிகமாக வெளியேறுவதால் நமக்கு தாகமும்  வறட்சியும் ஏற்படுகிறது.

இது போன்ற நேரங்களில் இளநீர், மோர், எலுமிச்சைச்சாறு, தர்ப்பூசணி சாறு போன்றவற்றை அருந்துவது  மிகவும் நல்லது. இளநீர், மோர் சாப்பிட்டால் சிலருக்கு ஜலதோஷம் பிடிக்கும்.

அவ்வாறு இருப்பவர்கள் அவற்றுடன் சிறிது மிளகுத் தூளை சேர்த்துக் கொண்டால் போதும். எலுமிச்சை  சாற்றுடன் சர்க்கரைக்குப் பதிலாக தேன் சேர்த்துக் கொள்ளலாம்.

நாம் அருந்தும் குளிர்பானங்கள், காபி, டீ போன்றவற்றில் சர்க்கரைக்குப் பதிலாக பனைவெல்லம் சேர்த்துக்  கொள்வது நன்மை தரும்.

எந்த பழம் சாப்பிடுவதாக இருந்தாலும் ஜூஸாக எடுத்துக் கொள்வதைவிட சுவைத்துச் சாப்பிட்டால் அதன் பலன் இரட்டிப்பாகும்.
பனைநுங்கு சாப்பிடலாம். சுத்தமான மோரில் உப்பு போட்டு அதிக அளவு அருந்தலாம். புதுப்பானையில் இரண்டு கிராம் முருங்கைப் பிசினை போட்டு சில மணி நேரம் ஊறிய பின் தாகம் எடுக்கும்போது குடித் தால் தாகம் தணியும். இளநீர் சாப்பிடலாம்.

அகத்திக்கீரை, நல்லெண்ணெய், வெந்தயம் முதலியவற்றைக்கொண்டு தலை முழுகி வந்தால் உடல் உஷ்ணம் முற்றிலும் நீங்கும்.

கோடையில் மஞ்சள் காமாலை நோய் ஏற்படும் வாய்ப்பு அதிகம். எனவே மோருடன் கீழாநெல்லியைக் கலந்து காலை வேளையில்,வெறும் வயிற்றில் சாப்பிடுவது மிகவும் நல்லது.

இதேபோல் மூலநோய் உள்ளவர்களுக்கும் கோடைகாலத்தில் அவஸ்தை ஏற்படும். இவர்கள் மாங்காயில் உள்ள பருப்பை அரைத்து மோரில் கலந்து சாப்பிடலாம். அத்திப்பழம் நிறைய சாப்பிடுவது நல்ல  பலனளிக்கும்.

முள்ளங்கி, காரட், பீட்ரூட், வெள்ளரிக்காய், வாழைத்தண்டு, வெள்ளைப்பூசணி, சௌசௌ, புடலங்காய், பீர்க்கங்காய் போன்ற நீர்க்காய்களை சாலட்டாக மிளகுத்தூள், சிறிதளவு உப்பு சேர்த்து சாப்பிடலாம்.

கோடைகாலங்களில் கனரக ஆலைகளில் வாகனங்களில் பணிபுரிபவர்களுக்கு உடல் அதிக உஷ்ணம் அடைந்து அநேகப் பிரச்னைகள் ஏற்படும்.

இதற்கு சீரகம், வெந்தயம் இரண்டையும் சேர்த்து பொடி செய்து வைத்துக் கொண்டு மோரில் கலந்து சாப்பிட்டால் உடல் குளிர்ச்சியடையும்.

அஜீரணக்கோளாறுகள், மலச்சிக்கல் மேலும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக