செவ்வாய், பிப்ரவரி 14, 2012

நாடுகாண் பயணம் - எத்தியோப்பியா

நாட்டின் பெயர்:
எத்தியோப்பியா(Ethiopia)
*எதியோப்பியா எனவும் தமிழில் உச்சரிக்கப் படுகிறது.

வேறு பெயர்கள்:
எத்தியோப்பியக் கூட்டாட்சி மற்றும் ஜனநாயகக் குடியரசு(Federal Democratic Republic of Ethiopia)

அமைவிடம்:
கிழக்கு ஆபிரிக்கா

தலைநகரம்:
அடிஸ் அபாபா(Addis Ababa)

அலுவலக மொழி:
அம்ஹாரிக்(Amharic)

ஏனைய மொழிகள்:
மொத்தம் 90 வெவ்வேறு பிராந்திய மொழிகள்.

இனங்கள்:
ஒரோமோ 34,5%
அம்ஹாரா 26,9% 
சோமாலி 6,2%
திக்ரே 6,1%
சிடமா 4%
குரேஜ் 2,5%
வேலேய்டா 2,3%
ஹடியா 1,7%
அவ்வர் 1,7%
காமோ 1,5%
கீடோ 1,3%
ஏனையோர் 11,3%


சமயங்கள்:
கிறீஸ்தவம் 62,8%
இஸ்லாம் 33,9%
ஆபிரிக்க மரபுச் சமயங்கள் 2,6%
ஏனையோர் 0,6


கல்வியறிவு:
42%
*ஆபிரிக்காவில் கல்வியறிவு குறைந்த நாடுகளில் ஒன்று.


ஆயுட்காலம்:
ஆண்கள் 53 வருடங்கள் 
பெண்கள் 58 வருடங்கள்
*ஆயுட்காலம் குறைவாக இருப்பதற்கு எயிட்ஸ் நோயினால் இறப்போரின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதும் ஒரு காரணம் ஆகும். 


ஆட்சிமுறை:
பாராளுமன்ற ஒற்றையாட்சிக் குடியரசு


ஜனாதிபதி:
கிர்மா வோல்தே ஜியோகிஸ் (Girma Wolde-Giorgis)*இது 14.02.2012 அன்று உள்ள நிலவரமாகும்.

பிரதமர்:
மெலிஸ் ஸினாவி (Meles Zenawi)*இது 14.02.2012 அன்று உள்ள நிலவரமாகும்.

பரப்பளவு:
1,104,300 சதுர கிலோ மீட்டர்கள்.(உலகில் 27 ஆவது பெரிய நாடு)


சனத்தொகை:
82,101,998(2011 மதிப்பீடு)*சனத்தொகை அடிப்படையில் உலகின் 14 ஆவது பெரிய நாடு.


நாணயம்:
பிர்(Birr /ETB)


இணையத் தளக் குறியீடு:
.et


சர்வதேசத் தொலைபேசிக் குறியீடு:
00 + 251


வேலையில்லாத் திண்டாட்டம்:
24%


வறுமைக் கோட்டிற்குக் கீழே வாழ்வோர்:
38%


பணவீக்கம்:
28%


விவசாய உற்பத்திகள்:
தானியங்கள், பருப்பு வகைகள், எண்ணெய் வித்துக்கள், கோப்பி(காப்பி), பருத்தி, கரும்பு, உருளைக் கிழங்கு, கற்(வெற்றிலையைப் போன்ற சுவையுடைய ஒரு போதைப் பொருள்), பூக்கள், கால்நடைகள்(ஆடுகள், செம்மறி ஆடுகள்), மீன்.


வருமானம் தரும் தொழில்கள்/உற்பத்திகள்/தொழிற்சாலைகள்:
உணவு பதனிடல், மதுபானம், துணிவகை, தோல் பதனிடல், தோல் பொருட்கள் தயாரிப்பு, இரசாயனப் பொருட்கள், உலோகங்களை உருக்கும் தொழிற்சாலைகள், சீமெந்து.


ஏற்றுமதிகள்:
கோப்பி(காப்பி), கற்(வெற்றிலையைப் போன்ற சுவையுடைய ஒரு போதைப் பொருள்), தங்கம், தோலினால் ஆன பொருட்கள், கால்நடைகள், எண்ணெய் வித்துக்கள்.


நாட்டைப் பற்றிய சிறு குறிப்புகள்:

  • கல்வியறிவின்மை, வேலைவாய்ப்பின்மை, வரட்சி ஆகியவற்றால் நாடு மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளது.
  • நாட்டின் மொத்தத் தேசிய வருமானத்தில் அரைப் பங்கினைப் பெற்றுத் தரும் விவசாயம் கடும் வரட்சியினால் மிகவும் பாதிப்புக்கு உள்ளாகியிருக்கிறது.
  • ஒரு லட்சம் நோயாளிகளுக்கு 1 மருத்துவர் என்ற நிலை காணப்படுகிறது.
  • நாட்டிலுள்ள குழந்தைகளில் ஐந்து வயதிற்கு உட்பட்டவர்களில் 34% பேர் போஷாக்குக் குறைவினால் அவதியுறுவதோடு இவர்களில் பலர் ஐந்து வயதிற்குள்ளாகவே இறந்து போகின்றனர்.

2 கருத்துகள்:

vetha (kovaikkavi) சொன்னது…

வறுமை நாடு பற்றி அறிவோம். மேலே முகப்புப் படம் அழகு. சுட்டு வைத்திருக்கிறேன். வாழ்த்துகள்.

sariya Chandrasekaran சொன்னது…

இப்பியா என சொல்லொன்று உள்ளது. அது எத்தியோப்பியாவைக் குறிக்கக்கூடும். இணையத்தில் தேடினால் இச்சொல் குறித்துப் பல தகவல்கள் கிடைக்கின்றன.

கருத்துரையிடுக