சனி, பிப்ரவரி 18, 2012

பழைய ஜோக்

ஆக்கம்:இ.சொ.லிங்கதாசன்
தனது அறையில் ஏதோ மும்முரமான வேலையில் ஈடுபட்டிருந்த கிறீஸ்தவப் பாதிரியாரை நோக்கி மதுபோதையில் தள்ளாடியபடியே சென்றான் ஒரு 'பெருங்குடி மகன்'. அவனுக்கும் பாதிரியாருக்குமிடையில் நடந்த உரையாடல் இது.

பெருங்குடி மகன்: ஃபாதர்! எனக்கு ஒரு சந்தேகம்.

பாதிரியார்: சொல்லுப்பா, முடிஞ்சா தீர்த்து வைக்கிறேன்.

பெருங்குடி மகன்: ஃபாதர்! யாருக்கு இரத்தப் புற்றுநோய் வரும்?

(பெருங் குடி மகன் மீது கடுப்பில் இருந்த பாதிரியார் பின்வருமாறு பதிலளிக்கிறார்)

பாதிரியார்: ஒ, அதுவா? உன்னப் போல கண்மண் தெரியாமக் குடிச்சிட்டு, பொண்டாட்டி புள்ளைய போட்டு அடிக்கிறவனுக்குத்தான் 'இரத்தப் புற்றுநோய்' வரும். புரியுதா? சரி, இதை எதுக்குக் கேட்ட?

பெருங்குடி மகன்: வேறொண்ணும் இல்ல ஃபாதர், நம்ம 'போப் ஆண்டவருக்கு' இரத்தப் புற்றுநோய் எண்ணு பேப்பர்ல போட்டிருந்தாங்க அதுதான் கேட்டேன்.

பாதிரியார்: !!!!!!!!!!??????????

('போப் ஆண்டவர்' என்ற பதவி கத்தோலிக்கர்களின் மத குருக்களில் அதி உயர் தலைமைப் பதவி)

நன்றி: வெரித்தாஸ் வானொலி, 'தமிழ்ப் பணி', மணிலா, பிலிப்பைன்ஸ். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக