திங்கள், பிப்ரவரி 20, 2012

"நைட்டியை கழற்றவே மாட்டாங்களா...?"

ஆக்கம் : தோழன் மபா, சென்னை,தமிழ்நாடு .
பெண்களுக்கு இரவு உடையாக  இருக்கவேண்டும் என்று கண்டுபிடித்ததுதான் இந்த 'நைட்டி'. ஆனால்,  இன்று அது படும்பாடு சொல்லிமாளாது.  என்னமோ... நைட்டிதான் நமது பெண்களின் தேசிய உடை என்று,  நமது பெண்கள் நினைத்துவிட்டார்களோ என்னவோ...?  அந்த அளவிற்கு இந்த நைட்டி அவர்கள் உடலிலிருந்து இறங்குவதே இல்லை. 


வூட்ல இருந்தாலும் நைட்டிதான், தெருவில் நடந்தாலும் நைட்டிதான், கடைக்கு போனாலும் நைட்டிதான், பக்கத்தில இருக்கிற பள்ளிக்கூடத்துக்கு போனலும் நைட்டிதான் என்று நைட்டியை தமது ஒரு அங்கமாகவே பெண்கள் நினைத்துவிட்டார்கள். 

வீட்ல ஆம்பிளைங்க  என்னதான் காட்டு கத்தலா கத்தினாலும், அது 'செவிடன் காதில ஊதுன சங்குதான்'. வீட்டில் இருக்கும்போது நைட்டியை விட்டு பெண்கள் வேறு உடைக்கு  மாறுவதில்லை. 


உடலை பெருக்க வைக்கும் நைட்டி!


தொடர்ந்து நைட்டியை அணிவதால், அது பெண்களின் உடலை கட்டுக் கோப்பாக வைத்துக் கொள்வதில்லை. இடுப்பு, பின்பக்கம், அடிவயிறு  போன்ற இடங்களில் எந்தவித இறுக்கமும் இல்லாததால் சதை அதன் போக்கில் பெருக்கத் தொடங்கிவிடுகிறது.  இதனால் சிறிய வயதினிலேயே பெண்கள் அதிக வயதானவர்கள் போல் தெரியத்தொடங்கிவிட்டனர். 

மார்பு  தொங்கிவிடாமல் இருக்கவும்,  பார்க்க (?) எடுப்பாக இருக்கவும், பழங்காலங்களில் பெண்கள் துணியை (கச்சை) வைத்து தங்கள் மார்பை இறுக்கமாகக் கட்டிக் கொள்வார்கள்.  

"கச்சை அணிந்த கொங்கை மாந்தர் 
கண்கள் வீசு போதிலும் அச்சமில்லை அச்சமில்லை
அச்சமென்பதில்லையே"  என்றார் பாரதி. 

உடலில் தேவையான இடங்களில் எப்போதும்  இறுக்கம் இருக்கவேண்டும். அப்போதுதான் அதனதன் அளவில்'அது' இருக்கும்.  இல்லையென்றால் பெருக்கவும் வழியுண்டு, சிறுக்கவும் வழியுண்டு.


நைட்டி இரவு உடைதானே...? 


நைட்டி இரவு உடைதான் என்பதை  மறந்து பல நாள் ஆயிற்று. பகல் முழுவதும் உழைத்து களைத்துப் போகும் பெண்கள் இரவிலாவது தங்களைச் சுற்றி பின்னிப் பிணைத்திருக்கும் ஆடைகளுக்கு விடை கொடுத்து,   கொஞ்சம் சுதந்திரமாக இருக்கவேண்டும்,  என்ற எண்ணத்தில்தான் இந்த நைட்டி வந்திருக்கும் என்பது எனது எண்ணம்.

"ஆமா,   வீட்டுக்கார ஐயா, நடுக்கூடத்தில் மேலாடை அணியாமல் உக்காந்து டி.வி பாப்பாரு. ஆனா,  அந்த வீட்டுக்கார அம்மா மட்டும் சமையல் கூடத்தில்,  எட்டு முழம் சேலையை சுத்திக்கொண்டு  புழுங்கிச் சாகவேண்டுமா?  நல்லா இருக்குங்க உங்க டீலிங்கு"

ஆனால், எது சொளகரியமாக இருந்ததோ.... அதுவே  இன்று நமது கலாச்சாரத்தை பதம் பார்த்துக் கொண்டு இருக்கிறது.  பேருந்து செல்லாத சிறு சிறு மலைக் கிராமங்களில் கூட,  நமது பெண்கள் நைட்டி அணிகிறார்கள்.  குச்சி ஊன்றி நடக்கும் ஆயாக்கள் கூட நைட்டி அணிந்திருப்பதை பார்த்திருக்கிறேன். 

நைட்டியை பகலில் கூட கழற்ற மறுக்கிறார்கள். 

ஐரோப்பியர்கள்தான்  சூழ் நிலைக்கேற்ப ஆடை அணியும் பழக்கத்தை கொண்டுவந்தனர்.  பகலில் ஒரு ஆடை, இரவினில் ஒன்று, வாரயிறுதிக்கு ஒன்று, அலுவலகத்திற்கு ஒன்று  என்று ஒரு நாளில் இரண்டு மூன்று செட் ஆடைகளை அணிகின்றனர்.  

பல வழிகளில் அவர்களை காப்பி அடிக்கும் நாம்,  இனியாவாது அந்தந்த ஆடைகளை  அந்தந்த சீதோஷ்ண(காலநிலை) நிலைகளில் அணியவேண்டும். 

அதனால், இனியாவது இல்லத்தரசிகள் தங்கள் இரவு உடையான 'நைட்டியை' இரவில் மட்டுமே,  அணிய வேண்டுமாய் வேண்டி விரும்பி கேட்டுக்கொள்கிறேன். 

8 கருத்துகள்:

ப.கந்தசாமி சொன்னது…

செவிடன் காதில் ஊதின சங்கு.

Ponniyinselvan/karthikeyan(1981-2005 ) சொன்னது…

Britishers dress will be different.Their 'gown 'will be laced with crocodile bones.You would have seen them wearing loooong gowns which will be trailing .And it will be very tight on the chest and hip part.So with this dress they cannot sleep.So they used different design attire for the night .But our traditional dress is very comfortable and needs no substitute.
our women have ceased to be women.They have emerged as some ''special species''and have forgotten their roles as mothers, sisters,and wives.

பெயரில்லா சொன்னது…

அய்யோ நைட்டி கூட இல்லாட்டி எப்டிங்கன்னா? அசி(ன்)ங்கமா இருக்காதுங்களான்னா?

சஞ்சயன் சொன்னது…

நானும் ஏதோ சந்தோசமான விசயம் என்டு எட்டிப்பார்த்தன் ... மவனே ... கொன்னுபுடுவன் கொண்ணு .. ஆமா

பெயரில்லா சொன்னது…

அதே நைட்டின்னா கொஞ்சம் கப்பு அடிக்கத்தான் செய்யும்...-:)

வேகநரி சொன்னது…

நைட்டி பெண்கள் தாங்களாகவே விரும்பியணிகிறாங்க. மதவாதிகள் பெண்கள்மீது திணிக்கும் பர்தா போன்றதல்ல. பெண்களை தங்கள் விருப்பபடி நைட்டி அணிய விடுங்கள்

மன்னார்குடி இராஜகோபாலன்.க சொன்னது…

அருமை ! அருமை! அழகாக எடுத்துச் சொன்னீர்கள்! அர்த்தமுள்ள ஆதங்கம்.

Selvam சொன்னது…

Thanks for wrieting tha time. God will be help to them(women)

கருத்துரையிடுக