ஆக்கம்: வேதா இலங்காதிலகம், டென்மார்க்
புளொறன்ஸ் நைற்றிங்கேல்
(விளக்கேந்திய சீமாட்டி)
செல்வந்தத் தம்பதி வில்லியம் எட்வேட்
இல்லாள் பிரான்சிஸ் நைட்டிங்கேல் தவத்தால்
இல்லத்தில் ஆயிரத்தி எண்ணூற்றி இருபதில்
செல்வமகள் உதித்தாள், வைகாசி பன்னிரண்டில்.
மனிதநேயம் தவமிருந்த காரணத்தால் ஒரு
இனிய பெண்ணாய் சேவையை முத்தமிட்டு
மனிதநேயத்தில் வாகை சூட, கோதை
புனித சேவாமிர்த மகுடியோடு பிறந்தார்.

இத்தாலி புளொறன்ஸ் நகரில் உதித்ததால்
சொத்தானது பிறந்த நகரத்து நாமம்.
உத்தம உயர் குடும்பப் பெண்ணிவருக்கு
திருமணம், துயரற்ற வாழ்வு பெற்றவராசை.
இருபத்தி நான்கு அகவையில் பூந்தோட்டத்தில்
‘நிறைபணியாக்கு!’ இறையழைப்புக் கேட்டதாம்.
குறையற்ற பணி எதுவெனச் சிந்தனை….
துறையாம் தாதிப் பணியிலார்வமாய்ப் புகுந்தார்.

முறையோடு வைத்தியசாலை மேலதிகாரியாய் உயர்ச்சி.
போர்வீரரிற்குத் தாதியாக பிரபலமாய் ஊன்றினார்.
கிறிமியன் போரால் துருக்கியிலும் தொடந்தார்.
தாதிப் பணிக்கு நவீன அத்திவாரம்
ஆதியில் உருவாக்கிய சாதனை ஏந்திழையாள்.
தாதித் தொழில் பெண்மைக்கு மதிப்பெனும்
தகுதி உருவாக்கிய முதல் வனிதாமணி.
தாதியாய் கௌரவமடைந்த உலக முதற்பெண்.
தன் பாதையில் நடக்க, ஒளியூட்ட
சோதியாம் விளக்கேந்திய சீமாட்டிக்கு
ஏந்திய காரணப் பெயரோடு புகழொளி!
பிரித்தானிய தபால்தலையில் கௌரவ முகமானார்.
பிரித்தானிய மகாராணி விக்டோரியாவிடம்
பரிசை செஞ்சிலுவைச் சங்கத்தால் பெற்றார்.
விரிவான திட்டங்களை மகாராணியிடம் உரையாடினார்.

நைட்டிங்கேல் தாதிப் பயிற்சிக் கல்லூரியை முதன்முதலில்
பிரித்தானிய சென்தோமஸ் வைத்தியசாலையில் ஆரம்பித்தார்.
பரந்த சேவையால் மனிதத்திற்கு நிழல் கொடுத்தவருக்கு
விரிந்தது தொண்ணூறாம் வயதில் மரணசாசனம்.
உறவுமலர்க் காடெனும் உலகில் தன்னலமற்று
உகந்த சேவைப் பாலூட்டிய ஒப்பில்லா மாதா.
உதாரணமாக நிலமிசை வைத்தியசாலைகளில் இன்றும்
நிழற்படமாய் நீடுவாழும் ஆராதானைக்குரிய அன்னை.

2 கருத்துகள்:
சின்ன வயதில் நாலாம் அல்லது ஐந்தாம் வகுப்பு தமிழ் பாடத்தில் விளக்கேந்திய சீமாட்டி பற்றி படித்தது ஞாபகம் .அப்படிப் படித்த பாடங்களில் பசுமரத்தாணி போல் என் மனதில் இன்றும் நிலைத்திருக்கும் ஒரு பாடம் தான் இந்த சீமாட்டியின் கதை .நல்ல விடயம் .நன்றி
mikka nanry vino and anthimaalai. god bless you all.
கருத்துரையிடுக