தீவுக் கூட்டங்களின் பெயர்:
பாரோயே தீவுகள்(Faroe Islands)
*'பாரோயே தீவுகள்' என்பது ஆங்கில உச்சரிப்பாகும். தமிழில் 'பரோயே தீவுகள்' எனவும் உச்சரிக்கப் படுகிறது. டென்மார்க்கின் தேசிய மொழியாகிய டேனிஷ் மொழியில் 'பெயா ஊயென'(Færeøerne) எனவும், பாரோயே தீவுகளின் ஆட்சி மொழிகளில் ஒன்றான 'பெயா ஊஸ்க்' மொழியில் 'போரூயர்(Føroyar) எனவும் அழைக்கப் படுகிறது.
அமைவிடம்:
மேற்கு ஐரோப்பாவில் வட அத்திலாந்திக் சமுத்திரத்தில் உள்ள நோர்வீஜியக் கடலில்/ஸ்கன்டிநேவியாவில் உள்ளது.
ஆட்சி இறைமையைக் கொண்டுள்ள நாடு:
டென்மார்க்
தீவுகளின் சர்வதேச அரசியல் தகுதி:
டென்மார்க் நாட்டின் கடல் கடந்த ஆட்சிப் பிரதேசம்.
எல்லைகள்:
தீவுகள் என்பதால் நான்கு பக்கமும் வட அத்திலாந்திக் சமுத்திரம்(நோர்வீஜியக் கடல்), இருப்பினும் கடலுக்கு அப்பால் உள்ள நாடுகளாக வட மேற்கில் ஐஸ்லாந்தும், தெற்கில் பிரித்தானியாவின் ஸ்கொட்லாந்தும் உள்ளன.
தலைநகரம்:
டோர்ஸ்ஹாவ்ன்(Torshavn)
அலுவலக மொழிகள்:
பெயாஊஸ்க்(Faroese), டேனிஷ்(டென்மார்க்கின் தேசிய மொழி)
இனங்கள்:
பெயா ஊரர்கள் 91%
டேனிஷ் இனத்தவர்(டென்மார்க் நாட்டு வம்சாவளியினர்) 5,8%
பிரித்தானியர் 0,7%
ஐஸ்லாந்துக் காரர்கள் 0,4%
நோர்வீஜியர்கள் 0,2%
போலந்து இனத்தவர் 0,2%
அரசாங்க முறை:
சம்பிரதாய பூர்வமான அரசியின் ஆட்சிக்குட்பட்ட பாராளுமன்ற ஜனநாயக ஆட்சி.
நாட்டின் தலைவி:
இரண்டாவது மார்கிரெத(டென்மார்க் அரசி)
டென்மார்க்கின் தூதுவர்/உயர் ஸ்தானிகர்:
டன் எம்.குனுட்சன் (Dan M.Knudsen) *இவர் மேற்படி தீவுகளில் டென்மார்க் அரசியின் பிரதிநிதியாகப் பதவி வகிப்பதுடன், ஒவ்வொரு வருடமும் இத் தீவு மக்களின் வாழக்கை நிலவரம் பற்றி டென்மார்க் பிரதமருக்கு அறிக்கை ஒன்றைச் சமர்ப்பிப்பார். இது 28.02.2012 அன்று உள்ள நிலவரம் ஆகும்.
தீவுகளின் பிரதமர்:
காய் லியோ ஜொஹன்னெஸ்சன்(Kaj Leo Johannesen) *இது 28.02.2012 அன்று உள்ள நிலவரம் ஆகும்.
நோர்வேயுடன் இணைக்கப்பட்ட ஆண்டு:
கி.பி.1035
டென்மார்க்குடன் சேர்த்துக் கொள்ளப்பட்ட தேதி:
14.01.1814
சுயாட்சி பெற்ற தேதி:
01.04.1948
பரப்பளவு:
1,399 சதுர கிலோ மீட்டர்கள்.
சனத்தொகை:
49,267 (2011 மதிப்பீடு)
நாணயம்:
பாரோயே தீவுகளின் குரோனா (Faroese Krona)
*இது டேனிஷ் நாணயத்திற்கு இணையான பெறுமதி கொண்டதும், டேனிஷ் மத்திய வங்கியால் வெளியிடப் படுவதும் ஆகும்.
இணையத் தளக் குறியீடு:
.fo
சர்வதேசத் தொலைபேசிக் குறியீடு:
00 + 298
இயற்கை வளங்கள்:
மீன்கள், திமிங்கிலம், நீர் மின்சாரம், சிறிய அளவில் பெற்றோலியம் மற்றும் எரிவாயு.
தீவுகளைப் பற்றிய சிறு குறிப்புகள்:

- முழுமையான சுயாட்சி பெற்ற ஆனால் டென்மார்க் இராச்சியத்தின் ஆட்சிக்குள் தங்கியிருக்கும் சுயாட்சிப் பிரதேசம்.
- இத் தீவுகளுக்கு என ஒரு பாராளுமன்றம்(தீவு மக்களின் மொழியில் 'லொக்டிங்' Logting என அழைக்கப் படுகிறது) உள்ளது. இருப்பினும் இப் பாராளுமன்றம் தீவின் உள்ளக விவகாரங்களில் மட்டுமே முடிவுகள் எடுக்கும் வல்லமை கொண்டது. ஒவ்வொரு தடவையும் டென்மார்க் பாராளுமன்றத்திற்குத் தேர்தல் நடைபெறும்போது இத் தீவுகளின் சார்பாக மொத்தம் 2 பாராளுமன்ற உறுப்பினர்கள் இத் தீவு மக்களால் தெரிவு செய்யப் படுகின்றனர்.
- நீதித்துறை(காவல்துறை உட்பட), பாதுகாப்பு, மற்றும் வெளியுறவுத் துறை ஆகியன டென்மார்க் நாட்டின் வசம் உள்ளன. ஏனைய துறைகளில் இத் தீவு மக்களும், அவர்களது பாராளுமன்றமும் சுயமாக முடிவுகளை எடுப்பர்.
- முழுமையான சுயாட்சிப் பிரதேசமாக இருந்தாலும் டென்மார்க் நாட்டின் ஒரு பகுதியாக இருப்பதால் இத் தீவிற்கென ஐரோப்பிய ஒன்றியத்தில் தனியான உறுப்புரிமை கிடையாது.
தொடரும்
1 கருத்து:
our island....thanks.
கருத்துரையிடுக