வியாழன், ஆகஸ்ட் 01, 2013

சுவாமி விவேகானந்தரின் பொன்மொழிகள்.


  • நீ எதை நினைக்கிறாயோ அதுவாகவே ஆகிறாய். நீ உன்னைப் பலவீனன் என்று நினைத்தால் பலவீனனாகவே ஆகி விடுகிறாய். நீ உன்னை வலிமையுடையவன் என்று நினைத்தால் வலிமை படைத்தவனாகவே ஆகி விடுகிறாய்.
  • மனிதன் தோல்வியின் மூலமே புத்திசாலி ஆகிறான்.
  • பிறரிடமிருந்து நல்லனவற்றைக் கற்றுக் கொள்ள மறுப்பவன் இறந்தவனுக்கு ஒப்பானவன்.
  • காயம்படாதவன்தான் அடுத்தவனின் தழும்பைக் கண்டு சிரிப்பான்.
  • எப்போதும் சுருங்கி, மலர்ந்து கொண்டு இருப்பதுதான் வாழ்க்கையாகும். சுருங்கி விடுவதை மட்டும் கவனித்துக் கொண்டு சோம்பல் வாழ்க்கை வாழும் சுயநலக் காரனுக்கு நரகத்தில் கூட இடம் கிடையாது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக