புதன், ஜனவரி 02, 2013

இன்றைய பொன்மொழி

கவிப்பேரரசு வைரமுத்து 

துன்பத்தில் வாழ்பவனிடம் சிரிப்பு இருக்காது; சிரிப்பவனிடம் துன்பம் இருக்காது. ஆனால் துன்பத்திலும் சிரிப்பவனிடம் தோல்வி இருக்காது. ஒவ்வொருமுறை சிரிக்கும்போதும் இருதயம் ஒட்டடையடிக்கப் படுகிறது(சுத்தம் செய்யப் படுகிறது) சிரிக்கும் உதடுகள் வழியே துன்பம் வெளியேறிவிடுகிறது. சிரிக்கத் தெரியாதவர்களுக்கு வாழ்க்கை ஒரு சுமை. சிரிப்பவர்களின் வீட்டுத் திண்ணையில் மரணம் வந்து உட்கார்வதில்லை. உலகின் எல்லா மனிதரும் பேசத்தெரிந்த சர்வதேச மொழி சிரிப்பு.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக