வெள்ளி, நவம்பர் 02, 2012

காலை உணவை தவிர்ப்பவரா நீங்கள்?


அவ‌னுக்கு வ‌ய‌து 22. மாநிற‌ம். . அதிர்ந்து பேச‌மாட்டான். மிக‌ அமைதியான‌வ‌ன்.
                                                                     சொந்த‌ ஊர் என்ன‌வோ திருவ‌ண்ணாம‌லைதான். ஆனால் வ‌சிப்ப‌து வ‌றுமைக்கோட்டுக்கு கீழே‌. இந்த‌ கோட்டிலிருந்து வில‌கி த‌ன் குடும்ப‌த்தை ஒரு ந‌ல்ல‌ நிலைமைக்குக் கொண்டுவ‌ந்துவிட‌ வேண்டும் என்கிற‌ வெறி.

பெரும் முய‌ற்சிக்குப் பின்ன‌ர், துபாயில்  ஒரு ப‌ன்னாட்டு நிறுவ‌ன‌த்தில் அவ‌னுக்கு வேலை கிடைத்த‌து. மாத‌ச் ச‌ம்ப‌ள‌ம் இந்திய ரூ.10000.

பிற‌ந்த‌து முத‌ல், அதிக‌ப‌ட்ச‌ம் இர‌ண்டு நாட்க‌ளுக்கு மேல் த‌ன் பெற்றோரை பிரிந்த‌தில்லை அவ‌ன். ப‌ணியில் சேர்ந்த‌ பின்
 2  வருடத்துக்கு  ஒரு முறைதான் வீட்டுக்குப் போக‌ முடிந்த‌து. இந்த‌ பிரிவு அவ‌னை வ‌ருத்த‌ம‌டைய‌ச் செய்தாலும், த‌ன் குடும்ப‌ம் ந‌ல்ல‌ பொருளாதார‌ நிலைமைக்கு உய‌ர‌ இது அவ‌சிய‌ம் என்று க‌ருதி த‌ன்னைத் தானே தேற்றிக்கொண்டான்.

ப‌ண‌ம்..ப‌ண‌ம்..ப‌ண‌ம்..இது ஒன்றே முக்கிய‌ம். குடும்ப‌த்தின் வ‌றுமை ஒழிய‌ த‌ன் க‌வ‌ன‌ம் முழுதும் ப‌ண‌ம் ச‌ம்பாதிப்ப‌திலேயே இருக்க‌ வேண்டும் என்ப‌து அவ‌னுடைய‌ ல‌ட்சிய‌ம், வெறி, சித்தாந்த‌ம், கொள்கை, கோட்பாடு எல்லாமே. .
காலை 6:30 ம‌ணிக்கு அவ‌னுடைய‌ ஷிஃப்ட் துவ‌ங்கும். ஆறு ம‌ணிக்கு முன்னே அலுவ‌ல‌க‌த்துக்குச் சென்றுவிடுவான்.

அன்று திங்க‌ள் கிழ‌மை. ப‌னி வில‌காத‌ காலை நேர‌ம். ஆறாவ‌து த‌ள‌த்தில் உள்ள‌து அலுவ‌ல‌க‌ம். த‌ரைத் த‌ள‌த்தில் லிஃப்ட்டினுள் நுழைந்து 6ஐ அழுத்தினான். ஆறாம் த‌ள‌ம் சென்ற‌டைந்த‌வுட‌ன் லிஃப்ட் க‌த‌வு திற‌ந்த‌போது கீழே விழுந்த‌து அவ‌னுடைய‌ உயிர‌ற்ற‌ உட‌ல்!
 

அங்கிருந்த‌ செக்யூரிட்டிக‌ள் அவ‌னுடைய‌ மேலும் 

3 கருத்துகள்:

Srividhyamohan சொன்னது…

இதை படித்த உடன் மிகவும் பயமாக உள்ளது. வேலைப் பளுவால் நான் காலை உணவை பல நாட்கள் தவிர்த்திருக்கிறேன். சில naatkaL பால் மற்றும் ஓட்ஸ் அல்லது கேழ்வரகு கஞ்சி குடிப்பேன். அது போதுமா என்பதை எனக்கு தயவு செய்து விளக்கவும். நன்றி.

Suthan சொன்னது…

We are traying to help to ours sister and brothar, never thinking my God gave to me first like my sister and brothars are poor, pls help to tham. God can give to you more happy life.

Lingathasan சொன்னது…

சகோதரி ஸ்ரீவித்யாமோகன் அவர்களுடைய கேள்விக்கான பதில் ஒரு ஆங்கிலப் பழமொழியே. நீங்கள் அமெரிக்காவில் வசிப்பவர் என்பதால் ஆங்கிலத்தை இலகுவாகப் புரிந்து கொள்வீர்கள் என்பது எமது நம்பிக்கை. "Something is better than nothing" என்பதே அப்பழமொழி. அதாவது காலையில் எதுவுமே சாப்பிடாமல் தவிர்ப்பதை விட நீங்கள்மேலே குறிப்பிட்ட பால் மற்றும் ஓட்ஸ், கேழ்வரகுக் கஞ்சி போன்றவை மிகவும் சிறந்தது. ஆனால் அதுவே சிறந்த திட உணவு ஆகாது. ஏனென்றால் உங்கள் இரைப்பை முதல்நாள் இரவு தொடக்கம் சுமாராக 10 மணி நேரங்கள் வெறுமையாக இருந்துள்ளது. ஆகவே அந்த இரைப்பையையும், குடலையும் காலையில் நீங்கள் பட்டினி போட்டால் மதிய உணவு நேரம் வரையான சுமார் 16 மணி நேரங்கள்(முதல் நாள் இரவு நீங்கள் உணவு உண்ட நேரம் தொடங்கி அடுத்த நாள் மதிய உணவு உண்ணும் நேரம் வரையான இடைவெளி)உங்கள் உடலுக்குத் துன்பம் செய்கிறீர்கள். நீங்கள் ஒரு நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இயங்குவதை உங்கள் 'காலை உணவே' தீர்மானிக்கிறது. உங்கள் காலை உணவு மாச்சத்து, புரதச்சத்து, சிறிதளவு கொழுப்பு, வைட்டமின்கள் கொண்டதாக இருப்பது மிகவும் சிறந்தது. காலையில் உணவு உண்பதற்கு நேரம் இன்மையால் பால் கலந்த காபி அல்லது தேநீர் அருந்துபவர்கள் தமது உடலைக் கெடுத்துக் குறைந்த ஆயுளைப் பெறுகிறார்கள். காலை உணவாக தனியே பால் மட்டும் அருந்துவதும் நல்லதல்ல. நீங்கள் கூறியது போல் பாலுடன் ஓட்ஸ் கலந்து உண்பது ஓரளவு சக்திதரும் உணவு என்றாலும் அதற்குள் பழங்கள் அல்லது காய்ந்த பழங்கள் கலப்பது நன்று.

"ஒன்றுபட்டு உயர்வோம்"

அந்திமாலையின் சார்பில்
இ.சொ.லிங்கதாசன்

கருத்துரையிடுக