மரங்களுக்கு குப்பைகளை போடுவது நல்லது என்பது பலரது தவறான அபிப்பிராயம்.
குப்பைகளை தோட்டம் அமைக்கிறபோது பாத்திகட்டி, அதை நான்காக, எட்டாக,
பதினாறாக பிரித்துக்கொள்ளவும். கடைசி இரண்டு பங்கில் பப்பாளி, தவசிக்கீஐ
(மல்ட்டி வைட்டமின் கீரை), கறிவேற்பிலை, எலுமிச்சை போன்றவற்றை வைக்கலாம்.
அடுத்து ஒரு பாத்தியில் தக்காளி, வெண்டை, கத்திரி போடலாம். வெண்டை, பூசணி
போன்றவற்றை விதையாக விதைக்கலாம். தக்காளி, கத்திரி, மிளகாய் போன்றவற்றை
நாற்றுகளாக வாங்கி நடலாம். எப்போதும் செடிகளுக்கு இயற்கை உரம் போடுவது
மண்ணுக்கும், நமக்கும் பாதுகாப்பு.
அடுக்குமாடி குடியிருப்பில் இருப்பவர்கள் பூக்காத, குறைந்த ஒளிதேவைப்படுகிற
இலைகளே அழகு சேர்க்கும் செடிகளை வளர்க்கலாம். பிலோடென்ட்ரான்,
பெப்பரோமியா, அரேபியா, மணிபிளான்ட், இந்தியன் ரப்பர் பிளான்ட் போன்றவை இந்த
ரகம். வீட்டிற்குள் வளர்கிற செடிகளுக்கு தண்ணீரை அளந்துவிட வேண்டும்.
இர்ண்டு செட் செடிகளை வைத்திருந்து ஒரு செட் வீட்டின் வெளியேயும், இன்னொரு
செட் வீட்டிற்குள்ளேயும் இருக்கட்டும். வாரத்துக்கு ஒருமுறை உள்ளே
உள்ளவற்றை வெளியேயும், வெளியே உள்ளவற்றை உள்ளேயும் மாற்றி வைக்கலாம்.
வீட்டினுள் வளர்கிற செடிகளின் இலைகள் பழுப்பு நிறமாக இருந்தால் தண்ணீர்
அதிகம் என்றோ அல்லது ஒளி குறைவோ என்று அர்த்தம்.
செடிகளுக்கு மருந்தோ, உரமோ அவை வெளியில் இருக்கும்போதுதான் அடிக்க
வேண்டும். காற்றை சுத்தப்படுத்தும் பெரணி செடிகளை வீட்டினுள் வைக்கலாம்.
ஓரளவுக்கு சுமாராக வளர்ந்த இந்த ஒரு செடி 25 அடி சதுர அடி காற்றை மேலும்
2 கருத்துகள்:
எவ்வளவு அழகு... விளக்கங்களுக்கு மிக்க நன்றி...
padhivittamaikku nandri
surendran
கருத்துரையிடுக