ஞாயிறு, நவம்பர் 25, 2012

இசைக்கு மொழியில்லை

ஆக்கம்:இ.சொ.லிங்கதாசன் 
பாடல்: கடலின் அக்கர போனோரே
பாடியவர்: கே.ஜே.ஜேசுதாஸ்
இசை:சலீல் சௌத்ரி (பாலு மகேந்திராவின் "அழியாத கோலங்கள்" திரைப்படத்திற்கு இசையமைத்தவரும் இவரே)
பிராந்திய மொழி: மலையாளம்
நாடு: இந்தியா

நடிகர்:சத்தியநேசன்
பாடல் இடம்பெற்ற திரைப்படம்:செம்மீன் 
பாடலாசிரியர்: வயலார் ராமவர்மா 
இயக்கம்: ராமு கரியத்

பாடலைப் பற்றிய குறிப்பு: பாடல் வரிகள் தமிழுக்கு மிகவும் நெருக்கமான மலையாள மொழியில் அமைத்திருப்பதால் பெரும்பாலானவர்களால் புரிந்து கொள்ள முடியும். "கடலைத் தாண்டிச் செல்பவர்களே, திரும்பி வரும்போது எதைக் கொண்டு வருவீர்கள்? என்பதே பாடலின் அடிப்படைக் கருத்தாகும். 'செம்மீன்' என்ற இத்திரைப்படம் 1965 இல் வெளியாகியபோது கேரள மாநிலத்தில் மட்டுமல்லாது தமிழ்நாட்டிலும், இலங்கையில் மீனவர்கள் வாழும் பகுதிகளிலும் மிகப்பெரும் வெற்றி பெற்றது. இரண்டு உள்நாட்டு விருதுகளையும், இரண்டு வெளிநாட்டு விருதுகளையும் இப்படம் பெற்றது. இப்பாடல் மிகப்பெரிய அர்த்தங்களைக் கொண்டிருக்காவிட்டாலும் 47 வருடங்கள் கடந்த நிலையில் இன்றும் கேரளாவில் பாடல் போட்டிகளிலும், இசை நிகழ்ச்சிகளிலும் பாடகர்களால் விரும்பிப் பாடப்படும் பாடலாக உள்ளது.

பாடலின் சிறப்பு:மேற்படி பாடலை இருவர் மட்டுமே  YouTube இணையத்தில் இணைத்திருந்த போதும் இன்றுவரை இப்பாடலை 190,000(ஒரு லட்சத்து தொண்ணூறாயிரம் பேர்) பார்வையிட்டு உள்ளனர்.

காணொளி உதவிக்கு நன்றி:Neelathamara
47 வருடங்கள் பழமையான காணொளி என்பதால் காட்சியின் தரக் குறைவிற்கு வருந்துகிறேன்.

மலையாள மொழி பற்றிய குறிப்பு: சங்க இலக்கியங்களில் குறிப்பிடப்படும் சேர நாடு தற்போதைய கேரள மாநிலம் எனவும், மூவேந்தர்களில் சேரர்கள் ஆண்ட பூமி இது எனவும் நம்பப் படுகிறது. காலப்போக்கில் தமிழ் மொழியுடன் சமஸ்கிருதம் கலந்ததால் மலையாள மொழி உருவானது எனவும் மொழியியலாளர்கள் கூறுவர். இலங்கையில் யாழ்ப்பாணத் தமிழில் மலையாள மொழியின் தாக்கம் தென்படுகிறது.யாழ்ப்பாண இராச்சியம் சேர நாட்டுடன் மிக நெருங்கிய தொடர்புகளைக் கொண்டிருந்தது அல்லது யாழ்ப்பாண இராச்சியத்தை சேரர்கள் கைப்பற்றி ஆண்டது காரணமாக இருக்கலாம் என நம்பப் படுகிறது.
யாழ்ப்பாணத் தமிழில் புழக்கத்தில் உள்ள மலையாள வார்த்தைகள்: பர்த்தா(பத்தா), பாரியா(பாரியார்), மோன்(மகன்), மோள்(மகள்), அங்ஙன(அங்கே) இங்ஙன(இங்கே), தனது பிள்ளையை "என்ர குஞ்சு" எனச் செல்லமாக விளித்தல் போன்ற நூற்றுக் கணக்கான உதாரணங்களைக் கூறலாம். 

உங்கள் கருத்துக்களும் வரவேற்கப் படுகின்றன.

4 கருத்துகள்:

vetha (kovaikkavi) சொன்னது…

ஆம் உண்மை தான்.....பாடலும் நல்லதே!....

Paransothinathan சொன்னது…

ஆஹா.. இனிமையான பாடல். நன்றி.

vinothiny pathmanathan dk சொன்னது…

இனிமையான பாடல். tak thasan

யோகன் பாரிஸ்(Johan-Paris) சொன்னது…

இப்பாடல் வந்த காலத்தில் இலங்கையில் தமிழ்பேசுமெங்கும் ஒலித்தது என்றால் மிகையில்லை.
இசைக்கு மொழியில்லை என்றெ பலர் கூறுகிறார்கள். இப்பாடல் மொழி ஓரளவு புரிந்ததும் அதன் வெற்றிக்குக் காரணமெனலாம்.
நமது பாரம்பரிய இசையில் பாடப்படும்,தெலுங்குத் தியாகராஜ கீர்த்தனை ,இன்னும் பல சமஸ்கிருதம் கீர்த்தனைகள்
இவற்றை நான் ரசிப்பேன். ஆனால் கோபாலகிருஸ்ண பாரதி, முத்துத் தாண்டவர், பாவநாசம் சிவன் பாடல்கள்
தமிழில் உள்ளதால் சொல்,சொல்லாக வரி வரியாக எவரின் உதவியுமின்றி இசையுடனே ஒன்றி என்னால் அனுபவித்துப் பயணிக்க முடிகிறது.
ரசித்து கசித்து உருக முடிகிறது. அதனால் இசையின் பரிமளிப்பை உணர
அப்பாடலின் இசையுடன் அப்பாடல் மொழி புரிந்தால் மேலும் சுவைக்குமென்பதே என் கருத்து.


கருத்துரையிடுக