செவ்வாய், நவம்பர் 06, 2012

விவசாயிகளுக்கு தக்க சமயத்தில் உதவும் நண்பன் ''சௌசௌ''

ஏலக்காய், மிளகு, வாழை, கொய்மலர் என்று இடத்துக்கு ஏற்ப மலைப்பிரதேசங்களில் பயிரிடப்பட்டாலும், பெரும்பாலான மலைத்தோட்ட விவசாயிகளுக்கு தக்க சமயத்தில் உதவும் நண்பனாக இருப்பது 'சௌசௌ' காய்தான்.
ஒரு ஏக்கர் நிலமும், தண்ணீர் வசதியும் இருந்தால் நடவு செய்த நான்காவது மாதத்திலிருந்து வாரம்தோறும் வருமானம் பார்க்கலாம்.  நோய் தாக்குதல் அதிகம் இருக்காது என்பதோடு, மலைத்தோட்டப் பயிர்களில் அதிக பராமரிப்பு தேவைப்படாத ஒன்றாக இருப்பதாலும் முக்கியப் பயிராக விளங்குகிறது சௌசௌ.
திண்டுக்கல்லை சுற்றியுள்ள மலைப்பகுதிகளான சிறுமலை, பண்ணைக்காடு, தாண்டிகுடி, ஆடலூர், பகுதிகளில் அதிகளவில் பயிர் செய்யப்படுகிறது.  


சௌசௌ காயைப் பொறுத்தவரை ஒவ்வொரு மலைப்பகுதியிலும் ஒவ்வொரு பருவத்தில் நடுவார்கள்.  சமவெளி பகுதியைப் போல இங்கே உழவு செய்யமுடியாது.  நிலத்தில் இருக்கும் புதர்களை நீக்கிவிட்டு, 15 அடிக்கு 15 அடி இடைவெளியில் இரண்டடி ஆழ, அகலத்தில் குழி எடுத்து, பத்து நாளைக்கு ஆறப்போட வேண்டும்.  ஒரு ஏக்கருக்கு கிட்டத்தட்ட 200 குழிகள் வரும்.  குழி எடுப்பதற்கு ஐந்து நாட்களுக்கு முன்பாகவே விதைக்கான காய்களை கொடியிலிருந்து காய்களை எடுத்து பதியம் போட்டு வைக்க வேண்டும்.  முற்றிய காய்களை பறித்து, மேடான இடத்தில் பாத்தி அமைத்து, மண்ணைப்போட்டு மூடிவிட்டால் இதுதான் பதியம்.  நான்காவது நாள் முறை விட்டுவிடும்.  பத்து நாட்களுக்குள் வசதிக்கு ஏற்றாற்போல அவற்றை எடுத்து நடவு செய்யலாம்.  
காயை உரிய நேரத்தில் அறுவடை செய்யாமல் கொடியிலேயே விட்டுவிட்டால் சில தினங்களில் தானாக முளைப்புத் தோன்றும்.  அவற்றை அப்படியே எடுத்தும் நடவு செய்யலாம்.  குழிக்கு நான்கு காய்கள் வீதம் நடவேண்டியிருக்கும்.  ஆனால், பதியம் போடும்போது, மூன்று காய்களை நடவு செய்தாலே போதும்.  அத்துடன் முளைப்புத் திறனும் அதிகமாக இருக்கும்.
தோண்டி வைத்த குழி நன்கு ஆறிய பின், ஐந்து கிலோ வீதம் எருவைப் போட்டு, பிறகு விதைக்காயை போட்டு மூடி தண்ணீர் விடவேண்டும்.  மூன்று நாட்களுகொரு தடவை தண்ணீர் அவசியம்.  நடவு செய்த ஐந்தாவது நாளில் முளைவிடும்.  பத்து நாளில் கொடி தரையில் படர ஆரம்பிக்கும்.  குச்சிகளை ஊன்றி கொடியை அதில் ஏற்றி விடவேண்டும்.  அதன் பிறகு மேலும் 

2 கருத்துகள்:

Shan Sub, Denmark சொன்னது…

வணக்கம்
செள செள இது என்ன ஒரு வகை பழமா அல்லது சமைக்க பயன்படும் காயா விபரம் அறியத்தர முடியுமா

anthimaalai@gmail.com சொன்னது…

வாசகர் ஷண் அவர்களின் கேள்விக்கான பதில்: 'சௌசௌ' என்பது 'சுரைக்காய்' வகையைச் சேர்ந்த ஒரு சிறிய காய். இது காய்கறி வகையில் அடங்குகிறது. தமிழ்நாட்டில் இதனை 'பெங்களூர்க் கத்தரிக்காய்' என்றும் அழைப்பார்கள். ஆங்கிலத்தில் இதன் பெயர் 'Chayote Squash'. தாய்லாந்து, இந்தியா, மற்றும் கரீபியன் நாடுகளில் இருந்து ஐரோப்பாவில் உள்ள தமிழ்க் கடைகளுக்கு ஏற்றுமதியாகிறது. பருப்புடன் சமைத்து உண்ணும்போது சுவை மிகுந்ததாக ஆகிறது. இந்தக் காயில் சத்துக்கள் குறைவு என்றாலும், 'மலச்சிக்கல்' நோயினால் அவதிப்படுபவர்களுக்கு இது கண்கண்ட மருந்து ஆகிறது

"ஒன்றுபட்டு உயர்வோம்"
அன்புடன்
இ.சொ.லிங்கதாசன்
ஆசிரியர்
www.anthimaalai.dk

கருத்துரையிடுக