சனி, ஜூலை 21, 2012

லிச்சி பழம்


லிச்சி பழம் நாம் அதிகம் அறியப்படாத பழம், இருந்தாலும் பெரிய பழக்கடைகளில் இந்த சத்தான பழம் கிடைக்கிறது. சீனாவை  பூர்விகமாகக் கொண்ட இந்தப்பழம், இந்தியா, வங்கதேசம் போன்ற நாடுகளிலும் அதிகமாக விளைகிறது. இவை தவிர நெதர்லாந்து, ஐக்கிய அரபு நாடுகள், சவுதி அரேபியா, லெபனான், கனடா, ரஷ்யா மற்றும் ஏமன் நாடுகளில் இந்தப் பழம் விளைகிறது. லிச்சி மரங்களை தமிழ்நாட்டின் பல பகுதிகளில் வளர்ப்பதற்கான சூழ்நிலை இருக்கிறது  இந்தப் பழம் கொடைக்கானலில் கிடைக்கிறது. 'லிச்சிப் பழத்தில் ஒயின் தயாரிக்கப்படுகிறது.

   பலாப்பழம் போல வெளிப்புறம் பரபரவென கூர்மையான சிவப்பு நிற தோலைக் கொண்டிருக்கும். உள்புறம் நுங்கு போல கொழுகொழுவென இருக்கும் இந்தபகுதிதான் சாப்பிடக்கூடியது. இது இனிப்புச் சுவையுடன் இருக்கும். உடலுக்கு சக்தி அளிக்கக்கூடியது. பழத்தின் உள்ளே, 2-3 செ.மி., நீலத்தில் கொட்டை இருக்கும். அதை சாப்பிடக்கூடாது. லிச்சி பளத்திள் கொழுகொழு சதைப்பகுதிதான், சத்துகளின் இருப்பிடம்.

    இதில் வைட்டமின் சி சத்து அதிகம் உள்ளதால் தோல், எலும்புக்கு நல்லது. கோடை காலத்தில் நோய் மற்றும் அலர்ஜி எதிர்ப்பு சக்தி அளிக்கக்கூடியது. அதிக கலோரி இல்லாதது என்பதால், நீர்ச்சத்து மிகுந்தது முடியும் அளவு சாப்பிடலாம். இதில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. இதனால் மலச்சிக்களைப் போக்குகிறது.

   இதில் உள்ள நியாசிந், ரத்த அழுத்தம், கொலஸ்ட்ரால் போன்ற பிரச்சினைகளைக் குறைக்கும். கோடை காலத்தில் அதிகமாக விற்பனைக்கு வருகிறது.
குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடும் கண்ணைக்கவரும் ரோஸ் நிறத்திலான லிச்சி பழங்களை பழ வியாபாரிகள் தற்போது வடமாநிலங்களிலிருந்து கொண்டு வந்து தமிழ்நாட்டின் பல்வேறு நகரங்களிலும் விற்பனை செய்து வருகிறார்கள். ஏன் லிச்சி மரம் தமிழ்நாட்டில் வளர்க்க முடியாததா? லிச்சி மரங்களை தமிழ்நாட்டின் பல பகுதிகளில் வளர்ப்பதற்கான சூழ்நிலை இருக்கிறது.

லிச்சி பழத்தின் ஆரோக்கிய தன்மை

இதனை தோட்டம், வீடுகளில் வளர்த்தால் பருவத்தில் ருசியான லிச்சி பழங்களை ஏராளமாக பெறலாம் என்கிறார் விவசாயத்துறையில் ஆய்வு செய்து வரும் முனைவர் ராஜ்பிரவீண். 
லிச்சி மரங்கள் எந்த மண்ணில் வளரும்? எப்படி பராமரிப்பது என்பது பற்றிய சாகுபடிக்குறிப்புகளை அவர் கூறுகிறார். காலம்காலமாக  மண்ணில் ஒரே சாகுபடியை செய்து நொந்து நூலான விவசாயிகள் இந்த புதிய வரவை தங்கள் மண்ணில் பதித்து காசு பார்க்கலாம். இதோ....

" தற்போது சில தனியார் நிறுவனங்களும், விவசாயிகளும் லிச்சி பழ சாகுபடியில் இறங்கி வருகிறார்கள். காரணம், மாம்பழங்களுக்கு நல்ல ஏற்றுமதி வாய்ப்பு இருப்பது போல்,லிச்சிபழத்திற்கு உள்நாட்டில் பலத்த வரவேற்பிருக்கிறது. குறிப்பாக இந்த பழத்தை பயன்படுத்தி பதப்படுத்திய பழச்சாறு உள்ளிட்ட சில பொருட்களை தயாரித்து விற்பனை செய்கிறார்கள். தற்போது தமிழ்நாட்டில் லிச்சி பழத்திற்கான வரவேற்பு அதிகம். இதற்காக இந்த பழங்களை வியாபாரிகள் வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்கிறார்கள். ஆனால் இதற்கு அவசியமே இல்லை. தமிழ்நாட்டின் பல இடங்களில் லிச்சி மரங்களை வளர்க்க முடியும். 

பொதுவாக வடமாநிலங்களில் லிச்சி மரங்களை மரத்துக்கு மரம் 9 மீட்டர் இடைவெளியில் நடுகிறார்கள். ஆனால் இதனை 7 மீட்டர் இடைவெளியில் நடவு செய்வதன் மூலம் 1 எக்டரில் கூடுதலாக மரங்களை நடமுடியும். அதாவது எக்டருக்கு 200 முதல் 300 மரங்களை நடலாம். நடவு செய்யும் முன் தோட்ட நிலங்களை நன்றாக கொத்தி கிளறி உழுது விட்டு பின்னர் இந்த குழிகளில் இயற்கை உரங்களை கொட்டி வைக்க வேண்டும். பின்னர் அந்தந்த பகுதியின் சீதோஷ்ண நிலைக்கு தகுந்த லிச்சி மரக்கன்றுகளை வாங்கி குழிகளில் நடலாம். குறிப்பாக சீனா, பம்பாய், கொல்கத்தா, க்ரீன் போன்ற லிச்சி கன்று ரகங்கள் தமிழ்நாட்டின் தட்பவெப்பத்தை தாங்கி வளரக்கூடியவை. 

இந்த ரகங்களில் ஏதேனும் ஒன்றை தேர்வு தேர்வு செய்து நட்டபின் அவை வளரத் தொடங்கும் சூழ்நிலையில் ஒவ்வொரு மாத மேலும் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக