ஞாயிறு, ஜூலை 01, 2012

ஐஸ்கிரீம் நினைவுகள்!


நாக்கில் சில்லிடும் குளிர்தித்திக்கும் இனிப்பு’ என்றவுடன் நினைவுக்கு வருவதுஐஸ்கிரீம்வாயிலிட்டவுடன் கரைந்து காணாமல் போகும் ஐஸ்கிரீமைகுழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவரும் விரும்புகின்றனர்ஏழை-பணக்காரன் என்று அதிக தருணங்களில் அனைவருக்கும்கிடைக்கக்கூடியதாகவும் இருப்பது ஐஸ்கிரீம் சுவையுணவின் விசேடம்.

எம்முடைய சிறுவர் பராயத்தை ஐஸ்கிரீம் இன்றி எழுதிவிட முடியாது.அதுவும்யாழ்ப்பாணத்தில் 1970களுக்குப் பின்னர் பிறந்தவர்களின் வரலாற்றைஐஸ்கிரீம்கள் ஆக்கிரமித்துக் கொண்டிருக்கின்றனஇப்போதும் அதுவேதொடர்கின்றதுஇலங்கையில் அதிகளவு ஐஸ்கிரீம்கள் உற்பத்தியாவதும்-விற்பனையாவதும் யாழ்ப்பாணத்தில்தான் என்று நினைக்கிறேன்.

ஐஸ்பழம்(குச்சி ஐஸ்), ஐஸ்சொக்(ஐஸ்பார்), கோர்ண் ஐஸ்ஸ்பெஷல்நட்ஸ்ஸ்பெஷல்மெஹா ஸ்பெஷல்மிக்ஸ் புருட் என்று ஐஸ்கிரீம்களில் பலவகைகள்அத்தனையும் பிரபலமானதுமஞ்சள்சிவப்புசெம்மஞ்சள்நிறங்களில் வரும் ஐஸ்பழத்தின் அறிமுகத்துடன் சிறுவர்களுக்குதொற்றிக்கொள்ளும் ஐஸ்கிரீம் மீதான காதல் சாகும் வரையில் அநேகருக்குதீர்ந்து போவதில்லை.

எனக்கு நினைவு தெரிந்த வரையில் எங்களூர் கோவில் பனைமரத்தடியில்சைக்கிளில் மணியொலிக்க வந்த ஐஸ்கிரீம் வியாபாரியிடம் அப்பா ரூபாய்க்குவாங்கித்தந்த செம்மஞ்சள் நிற ஐஸ்பழம் இப்போதும் ஞாபகத்தில் இனிக்கிறது.கடந்த வாரத்தில் ஐஸ்பழத்தினைஅதே பனைமரத்தடியில் 20 ரூபாய்க்குவாங்கி சாப்பிட்டிருந்தேன். (சுமார் 15 வருடங்களுக்குள் ஐஸ்பழத்தின் விலைதாறுமாறாக அதிகரித்திருந்தாலும்மக்களுக்கு ஐஸ்பழத்தின் மீதான மோகம்குறைந்துவிடவில்லை.)

யாழ்ப்பாணத்தின் வெய்யில் காலங்களை நுங்கும்இளநீரும்ஐஸ்கிரீமுமேஆக்கிரமித்திருக்கும்அதுவும்நுங்கு குறிப்பிட்ட காலத்துக்குள் காணாமல்போய்விடும்இளநீரும்ஐஸ்கிரீமுமே அதிகளவில் வெய்யிலின் தாக்கத்தைகுறைக்கின்றனஅதிலும்ஐஸ்கிரீமே முன்னிலையில் இருக்கிறது.யாழ்ப்பாணத்து ஐஸ்கிரீம் வியாபாரிகள் அதிகம்பேர் மதியத்தை தாண்டியேவீதிகளில் வலம் வருகின்றனர்மதிய சாப்பாட்டுக்குப் பின்னர் மக்களைஐஸ்கிரீமின் மூலம் குளிர்விக்கின்றனர்அதிகளவு வியாபாரம் பார்க்கின்றனர்.

யாழ்ப்பாணம் உள்ளிட்ட வடக்குகிழக்கின் அதிக பகுதிகளில் கோவில்திருவிழாக்கள்பிறந்தநாள் கொண்டாட்டங்கள்நண்பர்கள் சந்திப்பு என்று அதிகஇடங்களில் ஐஸ்கிரீமுக்கு இடமுண்டுஅத்துடன்காதலர்கள்தங்களுக்கிடையிலான சந்திப்புக்களை இனிக்க இனிக்க முடித்துக்கொள்ளவும்இந்த ஐஸ்கிரீம்களே அதிகம் உதவுகின்றனஇதற்கான சாட்சிகள்யாழ்ப்பாணத்தின் முக்கிய ஐஸ்கிரீம் கடைகளில் காணமுடியும்.

கொழும்பின் நவீன பல்பொருள் அங்காடிகளில் (சுப்பர் மார்க்கெட்டுக்கள்)பெட்டிகளில் அடைக்கப்பட்ட விதவிதமான ஐஸ்கிரீம்களை வாங்கிசாப்பிட்டாலும்யாழ்ப்பாணத்தின் ஐஸ்கிரீம்களுக்கு முன்னால் அவைதோற்றுப்போய்விடுகின்றனஅப்படித்தான் எனக்குத் தோன்றுகின்றனஇது,என்னுடைய பிரதேசத்தின் மீதான ஈடுபாட்டால் அல்லசிறுவயதில் கிடைத்தஈர்ப்பினால் எழுந்ததாகக்கூட இருக்கலாம்.

வெய்யில் காலங்களில் உடலின் உஸ்ணத்தை குறைக்க விஞ்ஞானரீதியில்ஐஸ்கிரீம்கள் உகந்ததா தெரியவில்லைஆனாலும்ஐஸ்கிரீம்களின் குளிர்மைஎமக்கு சிறிய மேலும் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக