சனி, ஜூலை 14, 2012

மூட்டு வலியை போக்கும் நாவல் பழம்!


மூட்டு வலி, சிறுநீரக கல் உட்பட பல பிரச்சனைகளை நாவல் பழச்சாறு குணப்படுத்தும் என்று நியூசிலாந்து ஆராய்ச்சி விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
நியூசிலாந்தில் உள்ள ப்ளான்ட் அண்ட ரிசர்ச் இன்ஸ்டிடியூட்டை சேர்ந்த விஞ்ஞானி ரோஜர் ஹர்ஸ்ட் தலைமையிலான குழுவினர், மனித உடலுக்கு நாவல் பழம் அளிக்கும் நன்மைகள் பற்றி விரிவான ஆராய்ச்சி செய்தனர். நாவல் பழச்சாறை தொடர்ந்து 10 பேருக்கு அளித்து வந்து பல்வேறு பரிசோதனைகளை செய்தனர்.

உடற்பயிற்சி செய்வதற்கு முன்பும், செய்த பிறகும் நாவல் பழச்சாறு சில சொட்டுகள் மட்டும் சாப்பிட்டவர்களுக்கு தடைகளில் சேதம் ஏற்படுவது தவிர்க்கப்பட்டது. தசைப்பிடிப்பு, அழுத்தமும் ஏற்படவில்லை. தவிர, உடற்பயிற்சி செய்த பிறகு ஏற்படும் உடல்வலி துளியும் இல்லாதது தெரிய வந்தது. தவிர, நாவல் பழச்சாறை 3 வாரங்களுக்கு சிறிதளவு சாப்பிட்டு வந்தவர்களுக்கு மூட்டு வலி குணமானதும், சிறுநீரக கல் கரைந்து போனதும் சோதனையில் தெரிந்தது. மேலும், உடல் சோர்வு, வலிகளையும் நாவல் பழம் குறைக்கும் என்று விஞ்ஞாநிகள் தெரிவித்தனர்.
இதுபற்றி ஹர்ஸ்ட் கூறுகையில், மூட்டு வலி, உடல் வலி, சோர்வு, சிறுநீரகக் கல், நுரையீரல் பாதிப்புகளை நாவல் பழச்சாறு அற்புதமாக குறையச் செய்கிறது. எனினும், இதற்கு அந்தப் பழத்தில் இருக்கும் வைட்டமின் சி காரணமல்ல. அதில் உள்ள பளேவனாய்டு என்ற பொருள்தான் இந்த அற்புதங்களை செய்கிறது. ஆந்தோசயனின்ஸ் என்ற பொருள்தான் நாவல் பழத்தின் ஊதா நிறத்தை அளிக்கிறது. அதுவும் பல்வேறு பிரச்சனைகளை தீர்ப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது என்றார். தசைகளில் ஏற்படும் எரிச்சலை நாவல் பழம் குறைப்பதாக ஏற்கனவே பல ஆய்வு முடிவுகளில் தெரிய வந்ததுள்ளது குறிப்பிடத்தக்கது.
நன்றி: stharsha.blogspot.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக