திங்கள், ஜூலை 02, 2012

கோடைக்காலம் வந்தாச்சு – வெயிலின் தாக்கத்தை தணிக்க


கோடைக்காலம் வந்தாலே அனைவரின்  வீட்டிலும் மின்சார  கட்டணம் அதிகரிக்கும். மின்விசிறி , குளிர்பதனப்  பெட்டி  மற்றும்  சில  சாதனங்கள் வீட்டில் மிக அதிகமாக உபயோகத்தில் இருக்கும்.வாடகைக்கு ஏசி வாங்கி வெயிலின் தாக்கத்தைக் குறைத்து கொள்ளும் நடுத்தர வர்க்கத்தினர் பலர் உள்ளனர். பக்கத்து வீட்டில் ஐஸ் கட்டி கேட்டு வாங்கி  எலுமிச்சம் சாறு செய்பவர்களும் உள்ளனர் . பிற்பகல் / இரவு வேலையில் மின்சாரம் துண்டிக்கப்பட்டால் ,  மின்சாரத் துறையையும் அரசாங்கத்தையும் வசை
பாடுபவர்கள் பலர். சமீபக்காலமாக மின் தடை மிக அதிகமாவே உள்ளது என்பதை நீங்கள் கூறுவது புரிக்கிறது.
சூட்டை தணிக்க இளநீர், தர்பூசனி, மோர், கூழ்,பழச்சாறு,குளிர்பானம் போன்றவற்றை மக்கள் விரும்பி எடுத்துக்கொள்வார்கள்.  இளநீர்  குடிப்பதால்  பல  நன்மைகள் உண்டு. அவற்றில் சில ,  *தூய  கலப்படமற்ற  சத்துகள்  நிறைந்த  இளநீர்  தாகத்தைத்  தீர்க்கும். *உடலுக்கு குளிர்ச்சி அளிக்கும்.   *தோல் நோய்கள்  மற்றும் சூரியக்கதிர் பாதிப்பினைப் போக்க மிகவும் உதவி புரிகின்றது.  *இளநீர் நவீன  மருத்துவத்தில்  வழக்கில் இருக்கும் குளுக்கோஸ் மற்றும் எலக்ட்ரோலைட் இவற்றுக்குச் சமமானது எனலாம். இதே போல் தர்பூசனி சாப்பிடுவதாலும் நன்மைகள் பல.அவற்றில் சில, *அதிக விழுக்காடு தண்ணீர் கொண்டுள்ளது . *வெயிலின் தாக்கத்தை    தணிக்க      உதவும். *கண் பார்வையை தர்பூசனியிலுள்ள வைட்டமின் A  மேம்படுத்தும்.  *இரத்த   அழுத்தத்தை குறைக்கும்.
மோர் குடிப்பதால், உடம்பின்  நோய் எதிர்ப்புத் திறன் அதிகரிக்கும்.  அது  மட்டுமின்றி, உடம்பில் உள்ள சுட்டை குறைக்க மிக அதிகமாக உதவும். வெயிலில் மேலும் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக