வியாழன், ஜூலை 12, 2012

திருப்புமுனை


அலுவலகம் முடிந்து வீடு திரும்புகையில் செல் ஒலித்தது.

"ஏங்க உங்க வைத்தி மாமா வந்திருக்கார்.  உங்களைப் பார்க்கணும்னு காத்திக்கிட்டுருக்கார்.  எப்ப வருவீங்க?" மனைவி தான் பேசினாள்.

"அந்த ஆளை நல்லா நாலு கேள்வி கேட்கணும்.  சரி.. சரி வை. பத்து நிமிஷத்தில் வந்துடுவேன்.  நேர்ல பேசிக்கிறேன்"

யாரைப் பார்த்து நாலு வார்த்தை நாக்கைப் பிடுங்கிக்கிற மாதிரி கேட்க வேண்டுமென்று இந்தப் பத்து வருடங்களாக நினைத்துக் கொண்டிருந்தேனோ,அந்த மனுஷனே வீடு தேடி வந்திருக்கார்.  அன்றைக்கு அவர் பேசின பேச்சை நான் இன்னும் மறக்கவில்லை.

பி.ஏ படித்து விட்டு சும்மா இருந்த நேரம். 

"என் ஒண்ணுவிட்ட அண்ணன்மந்திரிக்கு பர்சனல் செக்ரட்டரியா இருக்கான்.  அவன்கிட்ட ஒரு வார்த்தை சொன்னாப் போதும்.  உடனே உனக்கு வேலை வாங்கிக் கொடுத்துடுவான்"னு சொல்லி அம்மாதான் என்னை இந்த வைத்தி மாமா வீட்டுக்கு அழைத்துச் சென்றார்.

என்னை ஒரு புழுவைப் போலப் பார்த்து, "என்ன படிச்சிருக்கே?" என்றார் மாமா.

"பி.ஏ"

"பி.ஏ படிச்சிட்டா பெரிய மேதாவின்னு நெனைப்பா?  அந்தக் காலத்துல நாங்க படிச்ச எஸ்.எஸ்.எல்.சி.க்கு ஈடாகுமா ஒங்க பி.ஏ?  இந்தக் காலத்துப் பசங்க ஒடம்பு நோகாம யார் சிபாரிசுலயாவது வேலை கெடைக்காதானு அலையுதுங்க. தெனம் நாலு பேர் தங்களோட புள்ளைங்களை அழைச்சுக்கிட்டு சிபாரிசு கேட்டு வர்றானுங்க.  சரி. சரி.  ஒன்னோட
பயோ டேட்டாவைக் கொடுத்துட்டுப் போ.  பார்க்கிறேன்" என்றார் அலட்சியமாக.

ரோஷம் பொத்துக்கொண்டு வந்தது எனக்கு.  அதற்குப் பிறகு எப்படியெல்லாமோ கஷ்டப்பட்டுப் படித்து படிப்படியாக முன்னேறி இப்போது வங்கியில் பெரிய பொறுப்பில் இருக்கிறேன்.

இப்ப எந்த மூஞ்சை வைச்சுக்கிட்டு என்னைப் பார்க்க வந்தீங்கன்னு கேட்கணும்....வீடு வந்ததும் சிந்தனை தடைபட்டது.

"வாங்க மாமாஎப்படியிருக்கீங்க?" என்னையும் அறியாமல் வெளிவந்தன வார்த்தைகள்.

"ஏதோ மேலும் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக