செவ்வாய், டிசம்பர் 04, 2012

மாம்பழத்தின் மகிமை

சங்ககாலம் தொட்டே சிறப்பு பெற்ற முக்கனிகளில் ஒன்று மாம்பழம் . இந்திய மாம்பழங்கள் உலக அளவில் சிறப்பு வாய்ந்தவை. மாங்கா என்ற தமிழ்ச்சொல்லில் இருந்தே mango வும் மாம்பழம் என்ற சொல்லில் இருந்து ஆம் என்ற ஹிந்தி சொல்லும் தோன்றியிருக்கலாம்
இயற்கையாக பழுத்த மாம்பழங்கள் உடலுக்கு நன்மை செய்பவை

மாம்பழத்தில் விட்டமின் A மற்றும் beta-carotene,alpha-carotene,beta-cryptoxanthin ஆகிய சத்துக்கள் நிறைய உள்ளது.இவைகள் கண் பார்வைக்கும் நோயெதிர்ப்பு சக்திக்கும் உதவும்.
மற்ற பழங்களில் உள்ளது போலவே மாம்பழத்திலும் பொட்டாசியம் (potassium) தாதுப்பொருள் நிறைய உள்ளது .இது இருதயத்திற்கு நல்லது.

மேலும் விட்டமின் B6 (pyridoxine) ,விட்டமின் c , விட்டமின் E போன்ற உயிர்சத்துக்களும் உள்ளது


விட்டமின் B6 நரம்பு மண்டல GABA எனப்படும் ஹார்மோன் உற்பத்திக்கு அவசியமானது. மேலும் இது பக்கவாதத்தை தடுக்கும் ஆற்றல் கொண்டது


விட்டமின் C கிருமிகளுக்கு எதிரான நோயெதிர்ப்புக்கு உதவுவதோடு சிறந்த Anti-oxidant ஆக செயல்பட்டு உடலில் நுழையும் free radical எனப்படும் கலகக்காரணிகளை கட்டுப்படுத்தும்

விட்டமின் E வும் free radical ஐ கட்டுப்படுத்தும்

குறிப்பு :இந்த free radical என்பவை ரவுடிகளைப்போன்றவை .நம் உடலில் புகுந்து கலகத்தையும் கலக்கத்தையும் எற்படுத்தவல்லவை.இவைகளை எதிர்த்து போராடுவன... மேலும் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக