ஞாயிறு, டிசம்பர் 09, 2012

இசைக்கு மொழியில்லை

ஆக்கம்: இ.சொ.லிங்கதாசன் 
பாடல்: அவுரா அம்மக்கச் சல்லா
பிராந்திய மொழி: தெலுங்கு(Telugu)
நாடு: இந்தியா
மாநிலம்: ஆந்திரா
பாடியோர்:எஸ்.பி.பாலசுப்ரமணியம் மற்றும் சித்ரா

பாடல் இடம்பெற்ற திரைப்படம்: ஆபத்பாந்தவுடு(தமிழில் 'காவலன்' என அர்த்தம் கொள்க)
நடிகர்கள்: சிரஞ்சீவி மற்றும் மீனாட்சி ஷேசாஸ்திரி
பாடலாசிரியர்: 'ஸ்ரீவெண்ணிலா' சீதாராம சாஸ்திரி
இசை:எம்.எம்.கீரவாணி
இயக்குநர்:கே.விஸ்வநாத்

காணொளி உதவிக்கு நன்றி: seenu151 
பாடலைப் பற்றிய சிறு குறிப்புகள்:இப்பாடலை ரசிக்கும் வாசகர்களுக்கு தெலுங்குப் படங்களில் கதாநாயகன் கதாநாயகியைத் தொட்டு நடிப்பதில்லையா? என்ற கேள்வி எழக்கூடும். தமிழ்த் திரைப்படங்களைப் போலவே தெலுங்குப் படங்களிலும் கனவுக்காட்சி/கற்பனைக்காட்சி என்ற பெயரில் பாடல் காட்சிகளில் கதாநாயகனும், கதாநாயகியும் கலாச்சாரத்திற்கு ஒவ்வாத வகையில் கட்டிப் பிடித்தல், முத்தமிடுதல், கட்டிப்பிடித்து உருளுதல் என்று காட்சிகள் அமைக்கப்பட்டிருக்கும். ஆனால் மேலே நீங்கள் காணும் பாடல் காட்சியில் 'தெலுங்கு சூப்பர் ஸ்டார்' சிரஞ்சீவி அவர்கள் தனது எஜமானனின் மகளாகிய மீனாட்சி ஷேசாஸ்திரியை மகிழ்விப்பதற்காக மெட்டுக் கட்டி, பாடி, ஆடுவதாக இக்காட்சி அமைக்கப் பட்டுள்ளது என்பதை வாசகர்கள் நினைவில் கொள்ளவும்.

தெலுங்கு மொழி பற்றிய சிறு குறிப்பு:திராவிட மொழிகளில் அதிக எண்ணிகையிலான மக்களால் பேசப்படும் மொழி. தமிழ்நாட்டு மக்களால் தமிழுக்கு அடுத்தபடியாக அதிகமாகப் பேசப்படும் மொழி. இந்திய அளவில் அதிக மக்களால் பேசப்படும் மொழிகளில் மூன்றாவது இடத்தில் உள்ளது.

மொழியின் சிறப்பு: தமிழ் இசைக்கு கர்நாடக சங்கீதத்தை தந்து உயிரூட்டிய மொழி. இசை மும்மூர்த்திகளாகிய முத்துசுவாமி தீட்சிதர், தியாகராஜசுவாமிகள்,சியாமா சாஸ்திரிகள்ஆகியோர் தெலுங்கு மொழியின் மூலமே தமிழிசைக்குஉயிரூட்டினர்.கர்நாடக சங்கீதத்தைக் கற்போர் சங்கீத மும்மூர்த்திகளாகிய மேற்படி கலைஞர்கள் தெலுங்கு மொழியில் படைத்த கீதங்கள், கீர்த்தனைகள், வர்ணங்கள் ஆகியவற்றைத் திறம்படக் கற்காமல் இசையில் முழுமை பெற முடியாது.

பாடகர்கள்: பிரபல பின்னணிப் பாடகர்களாகிய எஸ்.பி.பாலசுப்ரமணியம், எஸ்.பி.ஷைலஜா(எஸ்.பி.பியின் சகோதரி), பி.சுசீலா, எஸ்.ஜானகி, கண்டசாலா, பி.பி.ஸ்ரீனிவாஸ், டாக்டர்.பாலமுரளி கிருஷ்ணா ஆகியோரின் தாய்மொழி தெலுங்கு ஆகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக