ஆக்கம்:இ.சொ.லிங்கதாசன்
பாடல்: "நேபாள மலையோரம் ஒரு பூபாளம்"மொழி: நேபாளி(Nepali/Nepalese) மற்றும் தமிழ்
பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம் மற்றும் சுவர்ணலதா
பாடல் இடம்பெற்ற திரைப்படம்: "தாய்க்குலமே தாய்க்குலமே"
இசை: தேவா
நடிகர்கள்: பாண்டியராஜன் மற்றும் வினயா பிரசாத்
பாடலாசிரியர்: வாலி
பாடலைப் பற்றிய சிறு குறிப்பு: கடந்த மூன்று வாரங்களாக வேற்று மொழிப் பாடல்களை வழங்கிய நான் இந்தத் தடவை ஒரு மாறுதலுக்காக தமிழ்த் திரைப்படத்தில் இடம்பெற்ற பாடலையே உங்களுக்குத் தருகிறேன். பாடல் தமிழ்ப் பாடலாக இருப்பினும் பாடலின் இடையிடையே நேபாள மொழியில் வரிகள் வருகின்றன. அத்துடன் தமிழ்த் திரையிசையில் தனக்கெனத் தனி முத்திரையைப் பதித்து மறைந்துவிட்ட பிரபல பின்னணிப் பாடகி சுவர்ணலதா அவர்கள் மேற்படி நேபாள மொழியில் வரும் வரிகளைப் பாடியிருந்தார். எம்மையெல்லாம் தனது மதுரக் குரலால் மயக்கிய அவரது தாய்மொழி மலையாளம் என்பதும் குறிப்பிடத் தக்கது.
காணொளி உதவிக்கு நன்றி:goldtreat
சட்டபூர்வ உறுதிமொழி/Disclaimer: The video clip is posted for viewing pleasure and as an
archive for good old songs. By this I (R.S.Lingathasan) don't wish to violate any
copyright owned by the respective owners of this song. I don't own any
copyright of the song. If any song is in violation of the copyright
you own then, please let me know, I will remove it from our blog.
நேபாள மொழி பற்றிய குறிப்பு: இம்மொழி ஹிந்தி மொழியைப் போலவே சமஸ்கிருத மொழியிலிருந்து பிறந்தது என்பதால் எழுத்து வடிவம் ஹிந்தியை ஒத்ததாக இருக்கும் இந்தோ ஆரிய மற்றும் இந்தோ ஈரானிய மொழிக் குடும்பத்தைச் சேர்ந்தது என்பதால் நேபாள நாட்டில் அலுவலக மொழியாகவும், பூட்டான் நாட்டில் ஒரு சில பகுதிகளிலும், இந்தியாவின் 'சிக்கிம்' மாநிலத்திலும், மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள 'டார்ஜீலிங்' மாவட்டத்திலும் பேசப்படும் ஒரு மொழியாகவும் உள்ளது. இந்தியாவில் ஹிந்தி மொழி தெரிந்தவர்கள் இம்மொழியைப் புரிந்து கொள்வதற்குச் சிரமப்படுவர் எனினும் நேபாள நாட்டவர்கள் தொழில், வர்த்தகம், சினிமா போன்ற விடயங்களுக்கு இந்தியாவையே பெருமளவில் தங்கியிருப்பதால் இந்தியாவின் தேசிய மொழியாகிய ஹிந்தியை இலகுவாகப் புரிந்து கொள்வர்.
நேபாள நாடு பற்றிய குறிப்பு: பௌத்த மதத்தைத் தோற்றுவித்த 'சித்தார்த்தர்' எனும் 'கௌதம புத்தர்' இந்நாட்டில் உள்ள 'ரூபாந்தேஹி' மாவட்டத்தில் அமைந்துள்ள 'லும்பினி' வனத்திலேயே பிறந்தார். உலகில் இந்துக்கள் வாழும் பல நாடுகள் இருந்தபோதிலும் தன்னை ஒரு இந்து நாடு எனப் பிரகடனப் படுத்திய ஒரேயொரு நாடு நேபாளம் ஆகும்.(இந்தியாவில் 80 சதவீதத்துக்கு மேல் இந்துக்கள் வாழ்ந்த போதும் இந்தியா தன்னை ஒரு மதச்சார்பற்ற நாடு/Secular State என்றே பிரகடனம் செய்துள்ளது.) வீரத்திற்கும், விசுவாசத்திற்கும் பெயர்போன 'கூர்க்கா' இனத்தவர்கள் நேபாள நாட்டைச் சேந்தவர்கள். இவர்கள் இந்திய மற்றும் பிரித்தானிய இராணுவத்தில் தற்போதும் பணியாற்றுகின்றனர். இது தவிரவும் இந்தியாவின் பல மாநிலங்களில் 'வீட்டுக் காவலாளிகளாகவும்' உள்ளனர்.
நேபாள நாட்டைச் சேர்ந்த பிரபலங்கள்:

- இமயமலையில் எவரெஸ்ட் சிகரத்தில் முதன் முதலில் கால் வைத்த ஆசியர் எனப் போற்றப்படும் 'டென்சிங் நொர்காய்' நேபாள நாட்டைச் சேந்தவர்(இவரோடு சேர்ந்து எவரெஸ்ட் சிகரத்தில் முதன் முதலில் ஏறிய ஆங்கிலேயரின் பெயர் சர்.எட்மன்ட் பேர்சிவல் ஹிலரி(Sir Edmund Percival Hillary) என்பதாகும். இவர் நியூசிலாந்து நாட்டைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத் தக்கது.
- 'இந்தியன்', 'பம்பாய்', 'பாபா' திரைப்படங்களின் கதாநாயகி 'மனீஷா கொய்ராலா' நேபாள நாட்டைச் சேந்தவர்.
- பிரபல பின்னணிப் பாடகர் 'உதித் நாராயணன்' நேபாள நாட்டைச் சேர்ந்தவர். தமிழ் தவிர ஒன்பது மொழிகளில் பாடியிருக்கும் இவர் தமிழில் மொத்தம் 83 பாடல்கள் பாடியுள்ளார். இவற்றில் குறிப்பிடத் தக்கவை "எங்கேயோ பார்த்த மயக்கம்", "தேன் தேன் தேன் உன்னைத் தேடி அலைந்தேன்", "சோனியா சோனியா", "சஹானா சாரல் தூவுதோ?, "காதல் பிசாசே", "காசு மேலே காசு வந்து கொட்டுகிற நேரம் இது"
1 கருத்து:
good
கருத்துரையிடுக