அவமானத்துக்கே அஞ்சாத இந்த உலகில் மனிதாபிமானம்தான் முக்கியம் என்று ஒருவர் வாழ்ந்திருக்கிறார்.இந்த மனிதாபிமானத்தின் விலை ஒரு கோடி ரூபாய். அவருக்கு கோவிலே கட்டி கும்பாபிஷேகமே நடத்தலாம் என்று தோன்றுகிறதல்லவா? அதையும் செய்திருக்கிறார் நம்ம ஊர் மனிதநேய நடிகர் பார்த்திபன்.
கேரளாவின் எர்ணாகுளத்தில் வசிக்கிறார் அய்யப்பன். அடிப்படையில் கூலித்தொழிலாளியான இவர் கடனுக்கு ஐந்து லாட்டரி சீட்டுகளை வாங்கினார். பணம் கொடுத்துவிட்டு சீட்டை வாங்கிக் கொள்கிறேன் என்று அந்த சீட்டுகளை வியாபாரி சுரேஷிடமே ஒப்படைத்துவிட்டு கிளம்பிவிட்டார். என்ன ஆச்சர்யம்? இதில் ஒரு சீட்டுக்கு ஒரு கோடி பிரைஸ் விழுந்தது.
நினைத்தால் சீட்டை மாற்றியிருக்கலாம். அல்லது பதுக்கியிருக்கலாம். அல்லது பணம் தராத சீட்டுக்கு நீ எப்படி உரிமை கொண்டாடலாம் என்று சட்டையை பிடித்திருக்கலாம். இப்படி எதுவுமே செய்யாத சுரேஷ், அய்யப்பனை தேடிப்பிடித்து லாட்டரி சீட்டை கொடுத்ததுடன் அந்த சீட்டுக்கு ஒரு கோடி பரிசு விழுந்த விபரத்தையும் சொன்னாராம். பணமே தரவில்லை. அதற்கு நான் எப்படி உரிமை கொண்டாட முடியும் என்று அய்யப்பன் மறுக்க, இல்லையில்ல... அது உனக்குதான் சொந்தம் என்று சுரேஷ் இறுக்க, திகைக்க திகைக்க அங்கே ஒரு சென்ட்டிமென்ட் காட்சி நடந்திருக்கிறது.
இதை எப்படியோ கேள்விப்பட்ட நடிகர் பார்த்திபன், எர்ணாகுளத்திலிருக்கும் சுரேஷை எட்டு பேர் கொண்ட குடும்பத்தோடு சென்னைக்கு தனது செலவிலேயே பிளைட்டில் வரவழைத்து அவரது நேர்மையை பாராட்டி ஒரு லட்ச ரூபாய் பரிசும் கொடுத்திருக்கிறார். இந்த விழாவில் கலந்து கொண்ட நடிகர் விவேக் ஐம்பதாயிரம் ரூபாய் வழங்கினார். சுரேஷுக்கு சிறந்த மனிதநேயர் பட்டமும் வழங்கினார்கள்.
#சுரேஷ் போன்ற ஒரு சில மனிதர்கள் இருப்தால்தான் ,நாட்டில் மழையே பெய்கிறது ...
நன்றி:"தமிழால் இணைவோம்". முகநூல் குழு.

2 கருத்துகள்:
தற்காலங்களில் இது போன்ற தகவல்களைக் கேட்கும்போது அதிசயமாக உள்ளது!
பார்த்திபனுக்குப் பாராட்டுக்கள்.
கருத்துரையிடுக