மரணப் படுக்கையிலிருந்த இராவணனிடம் இராமன் பவ்யமாக அவன் காலடியில் நின்று, உபதேசம் கேட்டான். "உங்கள் ஞானம் உங்களோடு அழிந்து போய் விடக் கூடாது, என் மூலம் இந்த உலகம் பயன் பெற உங்கள் ஞானத்தை உபதேசிக்க வேண்டும்" என வேண்டினான்.
இராவணன் உபதேசித்தான்............!
- தொடர்ந்து நீ வெற்றிவாகை சூடினாலும், "எப்போதும் வெல்வோம்" என எண்ணாதே.
- உன் குற்றங்களைச் சுட்டிக்காட்டும் உன் நண்பனை நம்பு.
- இறைவனை விரும்பினாலும், வெறுத்தாலும் உன் செயல்களை முழுமையாகச் செய்.
- "நான் அனுமனைச் சிறியவன் என எடைபோட்டதுபோல், நீயும் எதிரியை எளியவன் என எடை போட்டு விடாதே.
- வானின் நட்சத்திரங்களை வளைக்க முடியும் என நம்பாதே, ஏனெனில் அவை உன் வழிகாட்டிகள்.
- உன் சாரதியிடமோ, வாயிற் காப்போனிடமோ, உன் சகோதரனிடமோ பகை கொள்ளாதே. அவர்கள் உன்னை உடனிருந்தே கொல்வர்.
2 கருத்துகள்:
இராமன் இராவணனிடம் உபதேசம் கேட்டதும் அவன் உபதேசம் செய்ததும் உண்மையிலேயே பாராட்டத்தக்க விஷயங்கள்.
தங்கள் வருகைக்கும் கருத்திடலுக்கும் மிக்க நன்றி ஐயா. டாக்டர்.பழனி கந்தசாமி அவர்களின் வருகையை அந்திமாலை இணையம் தினமும் ஆவலோடு எதிர்பார்க்கிறது.
கருத்துரையிடுக