நாட்டின் பெயர்:
பிரான்சு(France)
*தமிழில் "ஸ்" என்ற வட எழுத்து சொல்லின் இறுதியில் வந்தால் அது இலக்கணப் பிழை என்பதால் தூய தமிழில் நாட்டின் பெயரை எழுதும்போது 'பிரான்சு' எனவும், இலக்கணப் பிழையுடன் எழுதப் படும்போது ஊடகங்களில் 'பிரான்ஸ்' எனவும், ஆங்கில உச்சரிப்பை ஒத்ததாக எழுதப் படும்போது ஃபிரான்ஸ் எனவும் எழுதப் படுவதைக் காணலாம்.
வேறு பெயர்கள்:
பிரெஞ்சுக் குடியரசு(French Republic) பிரெஞ்சு மொழியில் ரிப்புப்ளிக்கு லெ' பிறங்ஸ்(République française)
பிரான்சு(France)
*தமிழில் "ஸ்" என்ற வட எழுத்து சொல்லின் இறுதியில் வந்தால் அது இலக்கணப் பிழை என்பதால் தூய தமிழில் நாட்டின் பெயரை எழுதும்போது 'பிரான்சு' எனவும், இலக்கணப் பிழையுடன் எழுதப் படும்போது ஊடகங்களில் 'பிரான்ஸ்' எனவும், ஆங்கில உச்சரிப்பை ஒத்ததாக எழுதப் படும்போது ஃபிரான்ஸ் எனவும் எழுதப் படுவதைக் காணலாம்.
வேறு பெயர்கள்:
பிரெஞ்சுக் குடியரசு(French Republic) பிரெஞ்சு மொழியில் ரிப்புப்ளிக்கு லெ' பிறங்ஸ்(République française)
அமைவிடம்:
மேற்கு ஐரோப்பா
எல்லைகள்:
வடக்கு - பெல்ஜியம் மற்றும் ஆங்கிலக் கால்வாய். ஆங்கிலக் கால்வாய்க்கு அப்பால் உள்ள அயல் நாடு பிரித்தானியா.
வட கிழக்கு - லக்சம்பேர்க்
தெற்கு:அண்டோரா மற்றும் மத்திய தரைக் கடல்
தென்கிழக்கு - மத்திய தரைக் கடல்
தென்மேற்கு - ஸ்பெயின்
கிழக்கு - ஜேர்மனி, இத்தாலி, மொனாக்கோ, சுவிட்சர்லாந்து.
மேற்கில் - பிஸ்கே விரிகுடா
உலகில் உள்ள முக்கியமான குடியேற்ற நாடுகளில் பிரான்ஸ் நாடும் ஒன்று. உலகில் தற்போதும் இந்நாட்டின் கட்டுப்பாட்டில் பல தீவுகளும், பல சுயாட்சிப் பிரதேசங்களும் உள்ளன. உலகில் நாற்பதுக்கும் மேற்பட்ட நாடுகள் பிரான்ஸ் நாட்டின் கட்டுப்பாட்டில் இருந்து(குடியேற்ற நாடுகளாக இருந்து) விடுதலை அடைந்தவை. உலகில் தற்போதும் பிரான்ஸ் நாட்டின் கட்டுப்பாட்டில் உள்ள தீவுகள் மற்றும் சுயாட்சிப் பிரதேசங்கள் பின்வருமாறு:
- கிளிப்பேட்டன் தீவு(Clipperton Island) இது பசுபிக் சமுத்திரத்தில் மெக்சிக்கோ நாட்டிற்குத் தென் கிழக்கில் உள்ளது.
- பிரெஞ்சுக் கயானா(French Guiana) இந்நாடு அத்திலாந்திக் சமுத்திரத்தில் பிரேசில் மற்றும் சூரினாம் ஆகிய நாடுகளுக்கு நடுவில் அமைந்துள்ளது.
- பிரெஞ்சுப் பொலினேசியா(French Polynesia) இத் தீவுக் கூட்டங்கள் அத்திலாந்திக் சமுத்திரத்தில் பப்புவா நியூ கினியாவுக்கு கிழக்குப் பக்கத்தில் உள்ளன.
- பிரான்ஸ் நாட்டின் தெற்கு அந்தார்டிக் தீவுகள்(French Southern and Antarctic Lands) இவை அந்தார்டிக்கா பனிக்கண்டத்தில் உள்ளன.
- குவாட்டலூப்(Guadeloupe) இத் தீவு அத்திலாந்திக் சமுத்திரத்தில் கரீபியன் தீவுக் கூட்டங்களில் ஒன்றாகிய ஹெயிட்டிக்கு கிழக்குப் பக்கத்தில் உள்ளது. இத் தீவுகளுக்கு 17, 18 ஆம் நூற்றாண்டுகளில் தமிழகத்திற்கு அண்டை மாநிலமாகிய புதுச்சேரியில் இருந்து பல ஆயிரம் தமிழ் மக்கள் பிரெஞ்சுக் காரர்களால் அடிமைகளாக அழைத்துச் செல்லப்பட்டுக் குடியேற்றப் பட்டனர். தற்போது இம்மக்கள் தாய்மொழியையும், சுய அடையாளத்தையும் மறந்து இத் தீவில் வாழ்கின்றனர். பிரான்ஸ் நாட்டின் கடல் கடந்த பிரதேசம் என்பதால் இத் தீவின் நாணயம் யூரோ ஆகும்.
- மார்டீனிக்(Martinique):-இத் தீவு கரீபியன் கடலில் டொமினிக்கா மற்றும் செயின்ட் லூசியா தீவுகளுக்கு இடையில் அமைந்துள்ளது. பிரான்ஸ் நாட்டின் கடல் கடந்த பிரதேசம் என்பதால் அமெரிக்கக் கண்டத்தில் கரீபிய வட்டகையில் ஐரோப்பிய ஒன்றியப் பொது நாணயமாகிய யூரோவை உபயோகிக்கும் இரண்டாவது நாடு எனும் பெருமை பெறுகிறது. இத் தீவிற்கும் 18 ஆம் நூற்றாண்டுகளில் புதுச்சேரி மற்றும் காரைக்காலில் இருந்து தமிழ் மக்கள் பிரெஞ்சுக் காரர்களால் அடிமைகளாக அழைத்துச் செல்லப் பட்டனர். இவர்களும் தற்போது தமது இனம், மதம், மொழி போன்ற அடையாளங்களை இழந்து கறுப்பு இன மக்களுடன் கலந்து வாழ்கின்றனர்.
- மயோட்டே(Mayotte): இத் தீவு ஆபிரிக்கக் கண்டத்திற்கு அண்மையில் மடகஸ்கார் மொசாம்பிக் ஆகிய நாடுகளுக்கு இடையில் அமைந்துள்ளது.பிரான்ஸ் நாட்டின் நாடு கடந்த பிரதேசமாக இருப்பதால் ஆபிரிக்கக் கண்டத்தில் யூரோவைப் பயன்படுத்தும் ஒரே பிரதேசம் எனும் புகழைப் பெறுகிறது.
- நியூ கலிடோனியா(New caledonia): இத் தீவு அவுஸ்திரேலியா நாட்டிலிருந்து 1500 கிலோ மீட்டர்கள் தொலைவிலும், நியூசிலாந்து நாட்டிற்கு வடக்கிலும் அமைந்துள்ள ஒரு தீவு ஆகும். சர்வதேசத் தேதி மாற்றம் நிகழும் கோட்டில் அமைந்துள்ளதாலும், பிரான்ஸ் நாட்டின் கடல் கடந்த ஆளுகைப் பிரதேசம் என்பதாலும் உலகில் ஐரோப்பிய ஒன்றியப் பொது நாணயமாகிய யூரோ முதன் முதலாக அறிமுகம் செய்து வைக்கப் பட்ட பிரதேசம்/நாடு எனும் பெருமை பெறுகிறது. அது மட்டுமன்றி இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் யூரோவை நாணயமாகக் கொண்ட முதலாவது பிரதேசம் என்ற பெருமையைப் பெறுகிறது. இத்தகைய பெருமைகளைக் கொண்ட இந்தத் தீவிற்கும் தமிழ் மக்களின் கண்ணீர்க் கதைக்கும் தொடர்பு உள்ளதால் நாளைய தினம் இது பற்றிய விரிவான தகவல்களைக் கொண்ட 'கண்ணீரில் கரைந்த கலிடோனியா' எனும் தலைப்பிலான சிறிய விபரக் குறிப்பை உங்கள் அந்திமாலையில் படியுங்கள்.
- ரியூனியன்(Reunion): இந்து சமுத்திரத்தில் மடகஸ்கார் நாட்டிற்கு கிழக்காகவும் மொரீசியஸ் நாட்டிற்கு தென் கிழக்காவும் அமைந்துள்ள பிரான்ஸ் நாட்டின் கடல் கடந்த பிரதேசம் ஆகும். இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் ஐரோப்பிய ஒன்றியப் பொது நாணயமாகிய யூரோவை உபயோகிக்கும் இரண்டாவது பிரதேசம் எனும் பெருமையைப் பெறுகிறது.இத் தீவிலும் தமிழ் நாட்டின் அண்டை மாநிலமாகிய புதுச் சேரி, காரைக்கால் பகுதிகளிலிருந்து தமிழ் மக்கள் பிரெஞ்சுக் காரர்களால் அடிமைகளாக கொண்டு செல்லப்பட்டுக் குடியேற்றப் பட்டனர். இந்தத் தீவில் தற்போதும் இந்து சமயம் நிலைத்து நிற்கிறது. பத்துக்கும் குறைவான இந்து ஆலயங்கள் உள்ளன. பாடசாலைகளில் இளைய தலைமுறையினருக்கு 'தமிழ்' இரண்டாவது மொழியாகக் கற்பிக்கப் படுகிறது. வயது முதிர்ந்தவர்களே தட்டுத் தடுமாறித் தமிழ் பேசுகின்றனர். இளைய தலைமுறையினர் பிரெஞ்சு மொழியில் கல்வி கற்பதால் 'தமிழ்' மொழியில் பேசுவதற்கு ஆர்வம் காட்டுவதில்லை.
- செயின்ட் பார்த்தலெமி(Saint Barthelemy): கரீபியன் தீவுகளில் ஒன்று.குவாட்டலூப் மற்றும் செயின்ட் மார்ட்டீன் தீவுகளுக்கு அண்மையில் அத்திலாந்திக் சமுத்திரத்தில் உள்ள பிரான்ஸ் நாட்டின் ஆதிக்கத்திற்கு உட்பட்ட தீவு. இங்கும் நாணயமாக யூரோவே உள்ளது.
- செயின்ட் மார்ட்டீன்(Saint Martin): கரீபியன் தீவுகளில் ஒன்று. குவாட்டலூப் மற்றும் அன்டிகுவா, செயின்ட் பார்த்தலெமி தீவுகளுக்கு அண்மையில் உள்ள தீவு. இத் தீவின் அரைவாசிப் பகுதி நெதர்லாந்து நாட்டின் ஆதிக்கத்திற்கும் அரைவாசிப் பகுதி பிரான்சு நாட்டின் ஆதிக்கத்திற்கும் உட்பட்டவை. இரண்டு வருடங்களுக்கு முன்னர் தமிழ் இணையங்களிலும், You Tube இணையத்திலும் கோடிக் கணக்கான பார்வையாளர்களால் பார்த்து ரசிக்கப் பட்ட "உல்லாசப் பயணிகளின் தலைகளில் முட்டுவது போன்று" விமானம் தரையிறங்கும் காட்சி இத் தீவுக்குச் சென்ற உல்லாசப் பிரயாணி ஒருவராலேயே படமாக்கப் பட்டது. பிரான்ஸ் நாட்டின் கடல் கடந்த பிரதேசம் என்பதால் இத் தீவின் நாணயம் யூரோ ஆகும்.
- செயின்ட் பியரே மற்றும் மிக்கெலன் தீவுகள்(Saint Pierre and Miquelon): கனடாவிற்கு வட கிழக்கில் அமைந்துள்ள பிரான்ஸ் நாட்டின் கடல் கடந்த பிரதேசம் ஆகும்.சுமாராக 7000 பிரெஞ்சு வம்சாவளி மீனவர்கள் இத் தீவில் வாழ்கின்றனர். பிரான்ஸ் நாட்டின் கடல் கடந்த பிரதேசம் என்பதால் இத் தீவின் நாணயமும் யூரோ ஆகும். இருப்பினும் தீவு முழுவதும் ஏற்றுக் கொள்ளப்படும் இன்னொரு நாணயமாக 'கனேடியன் டாலர்' விளங்குகிறது.
- வலிஸ் மற்றும் புடுனா தீவுகள்(Wallis and Futuna): பசுபிக் சமுத்திரத்தில் பப்புவா நியூ கினியாவுக்கும், அவுஸ்திரேலியா, நியூசிலாந்து நாடுகளுக்கு கிழக்கில் அமைந்துள்ள பிரான்ஸ் நாட்டின் கடல் கடந்த ஆட்சிப் பிரதேசம் ஆகும். பிரான்ஸ் நாட்டின் ஏனைய ஆட்சிப் பிரதேசங்களின் நாணயமாக யூரோ இருந்த போதிலும் இத் தீவுகளின் நாணயம் 'பசுபிக் பிராங்' ஆகும்.
****** முக்கிய குறிப்பு:-பிரான்சு நாடு என்பது கடந்த 500ஆண்டுகளுக்கும் மேலாக மிகப்பெரிய ஒரு வரலாற்றைக் கொண்ட ஒரு பெரிய நாடாகவும், நவீன உலகில் அணு ஆயுத வல்லரசுகளுள் ஒன்றாகவும் இருப்பதால் அந்நாடு சம்பந்தமான மேலதிக தகவல்களை நாளைய தினம்(4.04.2012) அந்திமாலையில் காண்க.
-ஆசிரியர்-
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக