வியாழன், ஜூன் 19, 2014

இடுப்பு வலி, கால் குடைச்சல், இது டிஸ்க் விலகலின் அறிகுறியே!

சிலருக்கு இடுப்பில் திடீரென வலி உண்டாகி பரவும். அதிக நேரம் ஒரே இடத்தில் நிற்க முடியாது. கால் முழுவதும் மரத்துப் போனது போன்ற உணர்வு  ஏற்படும். அடிக்கடி கால் குடைச்சல் ஏற்பட்டு அவதிப்படுவார்கள். இருமினாலோ தும்மினாலோ கூட இடுப்பில் கடுமையான வலி ஏற்படும். 
 Some sudden pain in hips spread arise. You can not stand in one place for too long. I feel like if I went around the tree
குனிந்தால்  நிமிர முடியாது, ஒரே இடத்தில் அதிக நேரம் உட்கார்ந்த பின் எழும்போது சாய்ந்த படி நடப்பார்கள். இதுபோன்ற அறிகுறிகளை அலட்சியம்  செய்யாதீர்கள். அது இடுப்பில் உள்ள டிஸ்க் விலகியதன் அறிகுறியாகும். 

 தோள்பட்டை வலி: 
பொதுவாக வயதானவர்கள் சிலர் கையை பக்கவாட்டில் தூக்கமுடியாமல் சிரமப்படுவர். 70 சதவீதம் பேர் தோள்பட்டையிலுள்ள சவ்வு பாதிப்பினால்  தோள்பட்டையில் வலி, பிடிப்பு என அவதிப்படுவர். தோள் வலி முதலில் கையின் முன்புறத்தில் குத்தல் போல தொடங்கும். இரவில் தூக்கத்தின்  இடையில் கையை அசைத்தால் திடீரென பொறுக்கமுடியாத வலி ஏற்படும். இதுபோன்ற அறிகுறிகளை தொடக்கத்திலேயே கவனிக்கத் தவறிவிட்டால்  பின்பு தோள்பட்டை மூட்டு முற்றிலும் தேய்ந்து கையை மேலே தூக்கவோ, பக்கவாட்டில் தூக்கவோ, பின்புறம் மடக்கவோ முடியாத நிலை ஏற்படும்.


மூட்டு தேய்மானம்: 
மூட்டிலுள்ள கார்ட்டிலேஜ் என்ற ஜவ்வு பலகீனமாகி பின் நாட்கள் செல்லச் செல்ல மூட்டு தேய்மானமடைய தொடங்குகிறது. தொடக்கத்தில் மூட்டின்  முன்புறத்தில் குத்தல் போல் வலி ஏற்படும். பின்னர் வலி சிறிது தூரம் நடக்க தொடங்கிய உடனே சரியாகிவிடும். இதுபோலவே அதிக நேரம் ஓர்  இடத்தில் உட்கார்ந்துவிட்டு பின் எழுந்தவுடன் சிறிது வலி ஏற்பட்டு பின் நடக்க நடக்க வலி மறைந்துவிடும். வலி ஏற்பட்டால் உடனே மருத்துவரை  கலந்தாலோசிப்பது நல்லது. 


ரொமட்டாய்டு ஆர்த்ரிட்டிஸ்: 
 இளம்பெண்கள் சிலருக்கு திடீரென கை விரல்கள், மணிக்கட்டு, முழங்கை, முழங்கால், கணுக்கால், கால் விரல்களில் வீக்கம், கடுமையான வலி  ஏற்படும். அதிகாலை படுக்கையைவிட்டு எழும்போது கைவிரல்களை மடக்க முடியாமல் மணிக்கட்டில் கடுமையான வலி, உணவு அருந்தும்போது  உணவை பிசைய முடியாத அளவு வலி, தோள்பட்டையை மேலே தூக்க முடியாமல் சிரமம், முழங்கால் மூட்டு வீக்கம் என திடீரென தோன்றும்  அறிகுறிகளை அலட்சியம் செய்யாதீர்கள். இது மூட்டுவாத நோயின் அறிகுறியாக இருக்கலாம். இதனைக் கண்டறிய சில ரத்த பரிசோதனைகள்  உள்ளன.

ரத்தத்தில் Ra Factor, Uric  Acid, Asotire, ESR, Creactive Protein போன்ற பரிசோதனைகள் மூலம் இந்த நோயை கண்டறிய முடியும்.   இலைக்கிழி, மஞ்சள் கிழி, நாரங்காகிழி (எலுமிச்சை பழத்தை துணியில் போட்டு கட்டி எண்ணெயில் ஊற வைத்து தேய்ப்பது) சிகிச்சை அளிக்கலாம்.   மூட்டு வலிக்கு மூட்டை சுற்றி மூலிகை எண்ணெய் ஊற வைக்கக்கூடிய கடிவஸ்தி எனும் சிறப்பு சிகிச்சை அளிக்கப்படுகிறது. பஞ்சகர்ம, பிஜூ  போன்ற ஆயுர்வேத சிகிச்சை மூலமும் நோயை குணப்படுத்தலாம். உத்வர்த்தனம் சிகிச்சை முறையில் உடல் பருமனை குறைக்க முடியும். இந்த  சிகிச்சையால் உடலில் ரத்த ஓட்டம் சீராகும். வயிற்றை சுற்றி உள்ள கெட்ட கொழுப்புகள் கரையும்.


நன்றி:dinakaran.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக