திங்கள், ஜூன் 16, 2014

படித்தது 100% (நூறு சதவீதம்) மனதில் பதிய என்ன செய்ய வேண்டும்?

படிப்பதும், பதிவதும்
"இராத்திரி 12 மணி வரைக்கும் படிக்கிறா. காலையிலே 5 மணிக்கு எழுந்து படிக்கிறா. தினத்துக்கும் எட்டு மணிநேரம் படிக்கிறா. ஆனா மார்க் மட்டும் 50க்கு மேல் வாங்கறதில்லை. இவ இப்படியிருந்தா எப்படிங்க டாக்டராக முடியும். நீங்கதான் வழி செல்லணும் ”
இது ஒரு பெற்றோரின் ஆதங்கம்.
 
"என் friend எப்ப பார்த்தாலும் T.V. பாத்திட்டு, விளையாடிட்டு, அரட்டை அடிச்சிட்டு ஜாலியாக இருக்கா. தினம் இரண்டு மணி நேரம் கூட படிக்கிறதில்லை. எல்லா exam மிலும் 90,100 ன்னு வாங்கறா. நான் reading quicklyஅவளைக் காட்டிலும் 6 மணி நேரம் அதிகம் படிக்கிறேன். ஆனா 60 மார்க்குக்கு மேலே வாங்க முடியறதில்லை. எங்கிட்ட என்ன குறைன்னே தெரியலை.நீங்க தான் கண்டு பிடிக்கணும்".
இது ஒரு மாணவனின் ஆதங்கம்.
 
எத்தனை நேரம் படிக்கிறார்கள் என்பது முக்கியமல்ல. எப்படிப் படிக்கிறார்கள் என்பது தான் முக்கியம்.
தொடர்ந்து இடைவெளியின்றி மணிக்கணக்கில் படிப்பதால் மூளையில் பதியும் ஆற்றல் சாரசரி மாணவனுக்கு எப்படியுள்ளுத? முதல் ஒரு மணி நேரம் படிப்புத 100% பதிகின்றது என்றால், அடுத்த ஒரு மணிநேரத்தில் படிப்பதில் 50% தான் பதிகிறது. அடுத்த ஒரு மணிநேரம் படிப்பதில் 25% தான் பதிகிறது.
தொடர்ந்த படிப்பில் பதிவது பாதியாகக் குறைகிறது.
தொடர்ந்து நாள் முழுவதும் ஒரே வகைப் பாடத்தைப் (Subject ) படிக்கலாமா?
மறுநாள் அந்தப் பாடத்தில் தேர்வு என்றால் தான் ஒரே வகைப் பாடத்தைப் படிக்கலாம். அதையும் தொடர்ந்து படிக்கக் கூடாது. ஏன்?
மூளைக்கு போராடிக்கும், மூளையின் இயக்கம் மனம் சார்ந்தது.
காலை முதல், மாலை வரை அனைத்து வகுப்புகளும் ( Periods ) இலக்கண வகுப்பு ( Grammer ) என்று இருந்தால் மனம் ஒன்றாது.
மனம் ஒரு மாற்றம் விரும்பி.
எனவேதான், ஒவ்வொரு Periodக்கும் ஒரு Subject, அதைச் சொல்லித்தர வேறு, வேறு ஆசிரியர்கள்.
தொடர்ந்து மணிக்கணக்கில் படிப்பது தவறு எனில் நன்கு படிக்க? பதிய வைக்க என்ன வழி?
அதற்கு அருமையான வழிதான்,
ஒரு மணி நேரப் படிப்பு – 10 நிமிட புத்துணர்வு
One Hour Study – 10 Minutes Refreshment
ஒரு வகைப் பாடத்தை ஒரு மணி நேரம் படித்தோமெனில் அதை மூடி வைத்து விட்டு, அந்த இடத்திலிருந்து வெளியே வர வேண்டும். நீர் / பழச்சாறு ஒரு டம்ளர் அருந்திவிட்டு, வீட்டை ஒரு சுற்று சுற்றிவிட்டு; மரம், செடி, கொடிகள், இருந்தால் அதனருகில் சென்றுவிட்டு, மீன் தொட்டி / வளர்க்கும் பிராணி இருந்தால் ஒரு நிமிடம் அதனிடம் உறவாடிவிட்டு, அன்னையிடம் அரை நிமிடம் அளவளாவிவிட்டு கீழ்க்கண்ட புத்துணர்வுப் பயிற்சிகளைச் செய்ய வேண்டும.
 
1. மூச்சுப் பயிற்சி – 1 நிமிடம்
( தேர்வுகளில் சிறப்பான வெற்றி – 4ல் விரிவாகச் சொல்லப்பட்டுள்ளது)
 
2. கண் பயிற்சிகள்
மூளைக்கு அடுத்தபடியாக உடலில் உள்ள மிக நுட்பமான, நிறைவாற்றலுக்கு அவசியத் தேவையான உறுப்பு கண்கள். மூளையின் அனைத்து செயல்களையும் செய்யும் ஒரே ஒரு கருவியைச் செய்ய முடியாது.
-மிக அருகில் உள்ள பொருளைப் பார்க்க Microscope என்ற நுண்நோக்கியைப் பயன்படுத்துகிறோம். வெகுதூரத்தில் மரத்தில் அமர்ந்துள்ள ஒரு பறவையைப் பார்க்க Telescope என்ற தொலை நோக்கியைப் பயன்படித்துகிறோம். அவைகளைக் கொண்டு உடனே மரத்தில் உள்ள காகத்தைக் காண முடிகிறது. அனைத்தும் வினாடிக்கும் குறைவான நேரத்தில்.
எறும்பைப் பார்க்க கண் வில்லையின் குவிய தூரத்தை ( Focal lenth) குறைக்கவும் செய்யும் அற்றலை, விரைந்து செய்யும் ஆற்றலைப் பெற்றுள்ளன கண்கள்.
கண்களின் அருமைகளை அறிய ஒருநாள் முழுவதும் காந்தாரி போல் கண்களைக் கட்டியிருந்தால் தெரியும்.
இயற்கை நமக்களித்துள்ள விலைமதிப்பில்லாச் செல்வத்தைப் பாதுகாக்க வேண்டாமா?
அதற்குத்தான் கண் பயிற்சிகள். இதனால் கண்களுக்கு குறைகள் வராமல் காக்கவும், வந்துள்ள குறைகளைப் போக்கவும் முடியும்.
கண்களைச் சிமிட்டுதல் ( Blinking ) :
இயல்பு நிலையில் கண்கள் பொதுவாக 15 லிருந்து 20 தடவைகள் மூடித் திறக்கும் தன்மை கொண்டவை. நாம் படிக்கும்போது, எழுதும் போது, படங்கள் பார்க்கும் போது இந்த எண்ணிக்கை குறையும். டி.வி.யில் கிரிக்கெட், வீடியோ கேம், போன்றவைகளைப் பார்க்கும் மாணவர்கள் ஆர்வம் மிகுதியால் மிக ஒன்றிப்போய் நிமிடக் கணக்கில் கண் சிமிட்டும் செயலை நிறுத்தி வைக்கின்றனர்.
கண் சிமிட்டும் நேரத்தில் அடிக்கும் Sixer அல்லது Four- ஐ தவறிவிடாமல் பார்க்க வேண்டும் என்ற துடிப்பு, Video Game -ல் Car Race மற்றும் Shooting போது Point to scrose அதிகரிக்க வேண்டும் என்ற ஆவல் போன்றவை மனதில் தோன்றுவதால், மனதின் கட்டளைக்கு கண்கள் கட்டுப்படுகின்றன. எனவே கண்கள் சிமிட்டுவது குறைகிறது.
இதனால் என்ன பாதிப்பு?
Summer Readingபொதுவாக கண்களை மூடித்திறக்கும்போது கண்களின் வில்லை ( Lens ) வழியாக விழித்திரையில் ( Retina ) விழும் ஒளியானது வினாடியில் ஒரு பகுதி தடுக்கப் படுகின்றது. அச்சிறு நேரத்தில் கண்களில் உட்பகுதி, ஒளிவாங்கி நரம்புகள் ( Oprial rever ) ஒய்வெடுக்கின்றன. கண்களைச் சிமிட்டாமல் இருக்கும் போது, தொடர்ந்து உட்புகும் ஒளியால் விழித்திரை, ஒளிவாங்கி நரம்புகள் விரைவில் சோர்வடைகின்றன. கண் பதிவும் ( Eye fixation ), ஒருமித்த சிந்தனையும் ( Concentration ) பாதிப்புக்குள்ளாகின்றன.
காலையிலும், மாலையிலும் இரண்டு நிமிடங்களில் 30 – 40 தடவைகள் கண்களைச் சிமிட்டும் பயிற்சி அளிக்க வேண்டும்.
கண்களை அசைத்தல் மற்றும் சுழற்றுதல்
அமர்ந்த நிலையிலோ அல்லது நின்ற நிலையோ கழுத்து, தலை, முதுகுத்தண்டு இவைகளை நேராக வைத்திருக்கவும். கழுத்தையோ அல்லது தலையையோ அசைக்காமல் கண்களை மட்டும் மேல்நோக்கிப் பார்க்கவும். கீழ்நோக்கிப் பார்க்கவும். கண்களை மூடவும். நான்கு முறை செய்யவும்.
இடது பக்கம் பார்க்கவும். வலது பக்கம் பார்க்கவும். கண்களை மூடவும். நான்கு முறை செய்யும்.
இடமிருந்து வலமாக நான்கு முறையும், வலமிருந்து இடமாக நான்கு முறையும் சுழற்ற வேண்டும். திசையை மாற்றுபோது கால் நிமிடம் கண்களை மூடித் திறக்க வேண்டும். காலை, மாலை அவசியம் செய்ய வேண்டும்.
இதன் மூலம் கண்களைச் சுற்றியுள்ள தசைநார்கள், கண் கருவிழி வில்லைகள், ஒளிமூடி ( Iris ) விழித்திரை போன்றவைகள் நல்லியக்கம் பெறும். கிட்டப்பார்வை ( Short sight),தூரப்பார்வை ( Long sight ) கேளாறுகள் நீங்கும். கண்கள் பதிவது ( Eye fixation ) விரைந்து நடைபெறும். இதனால் விரைந்து படிக்க முடியும்.
 
3. கண்களைக் கழுவுதல்
காலை முதல், இரவு வரை நாம் நம் அன்றாட வேலைகளைச் செய்து வரும்போது சுற்றுப்புறச் சுழல் ஏற்படுத்தும் தூசிகள் கண்களில் படுகின்றன. அவற்றை அகற்ற வேண்டியது அவசியம். ஒரு சிறிய கிண்ணத்தில் சுத்தமான நீரை எடுத்துக் கொள்ளவும். தலையைக் குனிந்து கண்ணை அந்நீரில் படவைத்து, இமைகளை மூடித்திறக்க வேண்டும். இதனால் கண்களில் கோளகப் பரப்பில் படியும் தூசிகள் நீர்மூலம் கழுவப்பட்டு வெளியேறும். காலை, மாலை அவசியம் செய்ய வேண்டும்.
குளிர்ப்பட்டி ( Cold pack)
” அம்மா நான் ராத்திரி 12 மணி வரைக்கும் படிக்கணும். எனக்கு ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை டீ / காப்பி போட்டுத் தரணும்.”
தன் மக்களுக்காக கண் விழித்திருந்து மணிக்கொரு முறை டீ / காப்பி போட்டுத்தரும் அன்னைகளும் உண்டு. அதை அருந்திவிட்டு தூங்குவோரும் உண்டு.
டீ / காப்பியால் தூக்கத்தைப் போக்கிட முடியுமா? அதனால் தொடர்ந்து புத்துணர்வுடன் படிக்க முடியுமா? நிச்சயமாக முடியாது. உடல் நலத்திற்குத் தான் கேடு.
 
எந்தவித செலவுமில்லாமல், உடல் நலத்திற்கும் பாதிப்பு இல்லாமல், கண்கள் புத்துணர்ச்சிப் பயிற்சி செய்தல் வேண்டும். மூன்று முதல் ஐந்து நிமிடங்கள் வரை இந்த நிலையில் இருக்க வேண்டும். காலை, மாலையில் அவசியம் செய்ய வேண்டும்.
இரண்ணு வகுப்புகளுக்கு ( Periods ) இடைப்பட்ட நேரத்தில் வகுப்பறையில், தேர்வு சமயங்களில், கண்விழித்துப் படிக்கும் போது ஒவ்வொரு மணி நேரத்திற்கு இடையேயும் இதைச் செய்வது மிகச் சிறந்தது. ஒரு நிமிடம் செய்தால் கூட போதுமானது.
 
3. சாந்தி ஆசனம் : ஒரு விரிப்பின் மேல் மல்லாந்து படுக்கவும். உள்ளங்கைகள் வானத்தைப் பார்த்து இடுப்புக்கு அருகே இருக்கட்டும். கால்கள் சற்று அகன்று இருக்கட்டும், கண்களை லேசாக மூடிய நிலையில், இரண்டு நிமிடங்கள் ஒவ்வொரு மணி தொடர்ந்த படிப்பிற்கிடையே இருப்பது நலம்.
4. தியானம் : முதுகுத்தண்டு, கழுத்து, தலை இவற்றை ஒரே நேர் கோட்டில் வைத்து சித்தாசனம் / பத்மாசனம் நிலையில் ( ஆசனங்கள் பற்றி எழுதும் போது விரிவாக தெரியும் ) அமரவும்.
நான் பிரபஞ்ச சக்தியின் பொழிவில் உள்ளேன், இதோ என் உடல் உள் உறுப்புகள் அதன் நல்லியக்கத்திற்குத் தேவையான சக்திகளை ஈர்த்துக் கொள்கிறது. உடலும், மனமும் அமைதியாக உள்ளது. நான் படிக்கும் பாடங்கள் நன்கு புரிகிறது. நன்கு பதிகிறது. நான் நினைக்கும் போது படித்ததை என்னால் சொல்லவோ / எழுதவோ முடியும். எனது நினைவாற்றல் அதிகமாகி வருகிறது. ஒரு மித்த சிந்தனை உயர்ந்து
முன்னேறிக் கொண்டே வருகிறேன் என்று மனதை புருவ மத்தியில் வைத்துச் சொல்லிக் கொள்ளவும.
வீட்டை சுற்ற, அளவாளாவ – 2 நிமிடம், OX – மூச்சுப்பயிற்சி – 1 நிமிடம் உள்ளங்கை சிகிச்சை -1 நிமிடம், குளிர்ப்பட்டி – 2 நிமிடம், சாந்தி ஆசனம் – 2 நிமிடம், தியானம் -2 நிமிடம் ஆக மொத்தம் 10 நிமிடங்கள்.
ஒரு மணிக்கொருமுறை இப்பத்து நிமிட பயிற்சிகளைச் செய்தால் நீங்கள் புத்துணர்ச்சியை, புதிய தெம்பை, உற்சாகத்தை, உத்வேகத்தைப் பெறுவீர்கள். அடுத்த ஒரு மணி நேரம் படிப்பது நூற்றுக்கு 100% உங்கள் மனதில் பதியும். உங்கள் முயற்சியில் வெற்றிபெற வாழ்த்துக்கள்.
நன்றி: தன்னம்பிக்கை மற்றும் tholinutpam.com

1 கருத்து:

Yarlpavanan சொன்னது…

சிறந்த கருத்துப் பகிர்வு

கருத்துரையிடுக