ஞாயிறு, ஜூன் 08, 2014

நுரையீரல் புற்றுநோய் வராமல் தடுக்க

பழங்களில் மிகச் சிறந்தது ஆரஞ்சு என்கிறார்கள் மருத்துவ ஆய்வாளர்கள். ஏனென்றால் ஆரஞ்சு பழத்தில் மருத்துவ குணங்கள் அதிகம் இருக்குதாம். உடலில் எந்த பிரச்சினை ஏற்பட்டாலும் ஆரஞ்சு பழத்தையோ அல்லது ஆரஞ்சு சாறோ குடிக்கலாம்.

இதனால் உடலில் ஏற்பட்ட பிரச்சினை உடனே குறையும். உடலில் ஏற்படும் உஷ்ணம், வயிற்று வலி அல்லது வயிறு தொடர்பான பிரச்சினைகளை உடனே சீராக்கும் ஆற்றல் உடையது ஆரஞ்சு. ஆரஞ்சு சாறில் உள்ள வைட்டமின் சி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்கிறது. இதனால் இளமை தோற்றம் உருவாகும்.

இதில் ஏ, பி, சி ஆகிய வைட்டமின்களும், ஏழு வகையான தாதுக்களும் உள்ளதால் கர்ப்பிணிகள் மற்றும் குழந்தைகள் அவசியம் சாப்பிட வேண்டும். அதுமட்டுமின்றி ஆரஞ்சு பழத்தை குறுக்கே இரண்டாக வெட்டி முகத்தில் தேய்த்து, பத்து நிமிடம் கழுவினால் முகம் பளபளப்பாகும்.

தினமும் ஆரஞ்சு சாப்பிட்டு வந்தால் பசி ஏற்படும். மலச்சிக்கலை நீக்கும். நன்கு ஜீரணமாகும். கழிவுகள் வெளியேறி குடல் சுத்தமாகும். மேலும் சளி, ஆஸ்துமா, காசநோய், தொண்டைப்புண் முதலியவை குணமாகும். நெஞ்சுவலி, இதய நோய், எலும்பு மெலிவு ஆகியவற்றை குணமாக்கும் ஆற்றல் உடையது ஆரஞ்சு.

ஆரஞ்சு பழத்தில் உடலுக்குத் தேவையான அனைத்து உயிர்ச்சத்துக்களும் நிறைந்துள்ளன. 100 கிராம் எடை கொண்ட ஆரஞ்சு பழத்தில்

நீர்ச்சத்து – 88.0 கிராம்,
புரதம் – 0.6 கிராம்,
கொழுப்பு – 0.2 கிராம்,
தாதுப் பொருள் – 0.3 கிராம்,
பாஸ்பரஸ் – 18.0 மி.கிராம்,

சுண்ணாம்புச் சத்து – 24.0 மி.கிராம்,
கரோட்டின் – 1100 மி.கிராம்,
சக்தி – 53.0 கலோரி,
இரும்புச் சத்து – 0.2 மி.கிராம்,
வைட்டமின் ஏ – 99.0 மி.கிராம்,

வைட்டமின் பி – 40.0 மி.கிராம்,
வைட்டமின் பி2 – 18.0 மி.கிராம்,
வைட்டமின் சி – 80 மி.கிராம்

உள்ளது. ஆரஞ்சு பழத்திற்கு உரிய நிறத்தைக் கொடுக்கக்கூடிய பொருள்.  இது நுரையீரல் புற்றுநோயைத் தடுக்க வல்லது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். மாதவிலக்குக் காலங்களில் அதிக உதிரப் போக்கால் சிலர் சோர்ந்து காணப்படுவார்கள்.

இதனால் அதிக மன உளைச்சல், எரிச்சல் கொள்வார்கள். இவர்கள் ஆரஞ்சு பழச் சாற்றில் காய்ச்சிய பால் அல்லது தேன் கலந்து அருந்தி வந்தால் சோர்வு நீங்கி புத்துணர்வு பெறலாம்.

ஆரஞ்சு தினமும் உண்பதால் முகத்தில் அழகு கூடும், அதிக தாகத்தைத் தணிக்கும் வாய் நாற்றத்தைப் போக்கும், உடல் வறட்சியை நீக்கும், உடல் சூட்டைத் தணிக்கும், தலைச் சுற்றல் நீங்கும். 

நன்றி: senthilvayal.com

1 கருத்து:

Jeevalingam Kasirajalingam சொன்னது…

சிறந்த அலசல் பதிவு

visit http://ypvn.0hna.com/

கருத்துரையிடுக