திங்கள், ஜூன் 23, 2014

மரணத்துக்குப் பின்னால் என்ன நிகழ்கிறது?


”மரணத்துக்குப் பின்னால்” என்று பல விஷயங்களை பலபிரிவினரும் பல விதமாகப் பயங்காட்டி வைத்திருந்தாலும், அதைக் கண்டு யாரும் பயந்ததாகத் தெரியவில்லை. அப்படி பயப்படுவதாக இருந்தால் இவ்வளவு தவறுகள் நடக்க வாய்ப்பில்லை. ஆனால் மரணம் குறித்த விஷயங்களை அறிந்து கொள்வதில் மக்களுக்கு ஆர்வம் அதிகமாக இருக்கிறது. விடை காணமுடியாத புதிருக்கு எப்போதும் மதிப்பு இருக்கும் தானே. விஞ்ஞானத்தால் நுழைய முடியாத அல்லது விஞ்ஞானத்தால் அவிழ்க்க முடியாத முடிச்சுகள் ஏராளம் இருக்கின்றன. 
ஆனால் அதையெல்லாம் நம் முன்னோர்கள் ஞானத்தால் அறிந்து சொல்லியிருந்தாலும் நம் அறிவு அதை ஏற்றுக் கொள்ளத் தயங்குகிறது. எப்போதுமே நம் பலன்களுக்கு புலப்படாத விஷயங்களை நம்புவதில் நாம் இரண்டு நிலைகளில் தான் இருப்போம். அதாவது நம்பியும், நம்பாமலும். சாதாரண மனிதனுக்கு தெரியாத இறப்பின் இரகசியம் சித்தர்களுக்கு அத்துப்படி. மரணத்தின் முதல் ஸ்பரிசம்  தீண்டும் போதே அதன் நேரத்தே மிகத் துல்லியமாக கணித்திருக்கிறார்கள். இயல்பான மரணம் மனிதனின் உடலில் எந்த உறுப்பில் முதலில் நிகழும் ? 
இன்றைய மருத்துவத்துறையினர் இருதயம் அதன் இரத்த ஓட்டம், நுரையீரலும் அதன் சுவாசமும் நின்று விட்டால் அதுதான் மரணம் என்பார்கள். ஆனால் சித்தர்கள் அது குறித்து தெளிவாக விளக்கியுள்ளனர். நம் தேகம் பஞ்சபூதங்களால் ஆனது. மனிதனின் உடலில் தொடைவரை நிலமும், நாபி வரை நீர், அதிலிருந்து இதயம் வரை நெருப்பு, இதயம், அதற்கு மேல் தொண்டை வரை வாயு, தலைப் பகுதி ஆகாயம். என்று பிரித்துக் கூறுகிறார்கள். இயற்கை மரணம் ஒருவருக்கு உண்டாகும் போது முதலில் தொடை வரை செயலிழக்கும். அந்தப் பகுதியின் நிலத் தத்துவம் வயிற்றில் உள்ள நீர் தத்துவத்தில் அடங்கும். அதன் பிறகு நிலப் பகுதியும் நீரும் சேர்ந்து நாபியிலுள்ள சடராக்கினியில் அடங்கும். பிறகு இந்த மூன்றும் சேர்ந்து இதயப் பகுதியில் உள்ள வாயுவில் கலக்கும். அப்பகுதி இயக்கங்களும் நின்று போகும். அதன் பிறகு தலைப் பகுதியில் வாய், கண், காது, உச்சிப் பகுதிகளைச் சேர்ந்து அவைகளின் இயக்கங்களை நிறுத்தி கண் வழியாக மூக்கு வழியாக உயிர் உடலை விட்டு நீங்கும். எல்லா மனிதர்களுக்கும் இது அதாவது இயற்கை மரணம் இவ்விதமாகவே நடக்கும் என்கிறார்கள். கடைசியில் உச்சியில் உயிர் பிரியும் விதத்தில் பல வித மாறுபாடுகள் நிகழ்கின்றன. மனித வாழ்வின் அந்த விலை மதிப்பில்லாத கடைசி நொடி உயிர் பிரியும் வழி எது என்பதை தீர்மானிக்கிறது. உயிரானது யோகியர் மற்றும் ஞானிகளுக்கு கபாலம் வழியாகப் பிரியும், புண்ணியர்களுக்கு கண், காது மூக்கு வழியாகப் பிரியும் , பாவிகளுக்கோ ஆசன வாய் வழியாகப் பிரியும் என்றும் சொல்வதுண்டு. நந்தி தேவர் சொல்கிறார் இது இயற்கை மரணத்துக்கு மட்டுமே பொருந்தும் அகால மரணம் அல்லது விபத்துகளால் மரணமடைபவர்கள் உயிர் அடையாளக் குறி வழியாகவே போகும் என்கிறார். பசி மரணம் எல்லா உயிர்களுக்கும் பொதுவானது உயிர் அழியாமல் இருக்க உணவை உண்டு காத்துக் கொள்ளலாம். ஆனால் மரணத்தை? அதற்கான தீர்வை சித்தர்கள் கண்டனர் அதுதான் சாகாக் கலை.

மரணம் என்றால் என்ன?
மரணம் பயம் இல்லாத மனிதர்கள் ஒரு சிலரே! வாழ்வதை விட சாவதே மேல் என்கிற நிலையில் அந்த பயம் அற்றுப் போகிறது. ஆனால் ஒரு சராசரி மனிதனுக்கு அந்த பயம் இருக்கும். அதுவும் திரைப்படங்களிலும், ஏன் இலக்கியங்களில் கூட மரணத்தை படு பயங்கரமாகவே சித்தரிக்கிறார்கள்.
Picture courtesy: Melanie
 நரி ஊளையிடுவதும், நாய் அழுவதும், ஆந்தை சீறுவது என்று பல நிமித்தங்கள் காட்டப்படும். அந்த பயத்திற்கு காரணமென்ன வென்று பார்த்தால் பல விஷயங்களைச் சொல்லிவிடுவோம், பாசம், பற்று, மற்றும் கழிவிரக்கம் என்று சில குறிப்பிட்ட விஷயங்களைச் சொல்லலாம். உண்மையில் வாழும்போது நமக்கு காலத்தின் அருமை தெரிவதில்லை. கடைசி கட்டத்தில் இன்னும் கொஞ்சம் நாள் இருக்கமாட்டோமா? என்கிற ஆசை வந்து விடுகிறது. நாம் எவ்வளவு காலத்தை வீண் விரையமாக்கி விட்டோம். வீணாக பொழுதை போக்கிவிட்டோமே? எவ்வளவு நல்ல காரியங்கள் செய்திருக்கலாம் என்கிற கவலை அப்பொழுதுதான் வருகிறது. கடைசி நிமிட ஞானம் நமக்கு கண்ணீரை வரவழைத்து விடுகிறது. ம்.. என்ன செய்ய ? உடல் கூட்டிலிருந்து உயிர் பிரிவது என்பது சட்டையை கழற்றுவது போன்ற ஒரு நிலையாகும். அந்த நொடிகளை மாய நொடிகள் என்பார்கள். இந்த மாய நொடிகள் படிப்படியாக ஆனால் குறைந்த நேரத்தில் நடந்துவிடும். இயற்கை மரணத்தில். அது கொடுமையானதல்ல, சுகமான அனுபவம் என்று மீடியத்தின் மூலமாக வரவழைக்கப்பட்டுள்ள ஆவி சொன்னதாக படித்தேன். அதன்விளைவே இந்தப் பதிவு.
Picture courtesy: Melanie
இந்த உடலானது ஐம்பூதப் பிரிவுகளாலும், தசவாயுக்களாலுமானது. இந்த இரண்டும் தன் நிலை மாறும் போது மரணம் சம்பவிக்கிறது. மரணம் நெருங்கும் போது பிருதிவியான மண்ணின் கூறுகள் தளர்ந்து நீர்மயமாகும். நீரில் மண் கரைந்தால் எற்படும் நிலைபோல் உடலில் சமன்பாடு நீங்கி எங்கோ சரிந்துவிடுதல் போன்ற உணர்வு ஏற்படும். இது முதல் நிலை. இரண்டாம் நிலையில் நீரின் தன்மை தீயின் தன்மையோடு ஒன்றும். அதாவது பழுக்க காய்ச்சிய இரும்பை நீரில் முக்கியது போன்ற ஒரு நிலை. இதனால் உடலில் நீர்சத்து முற்றிலும் வரண்டுவிடும். தாகம் மேலோங்கும். உடலில் ஒரு எரிச்சல் தோன்றும். மூன்றாவது நிலை உடலின் தீயானது காற்றில் கலக்கும். உடலின் வெப்பம் குறைந்து உடல்சக்தி முழுவதும் அடங்கிவிடும். வெப்ப நிலை குறைந்ததால் இரத்த ஓட்டம் குறையும். இதயத் துடிப்பும் படிப்படியாக குறையும். நான்காம் நிலை, உடலின் காற்றுத்தன்மை ஆகாயவெளியில் கலக்கத் தயாராகிவிடும்.இந்நிலையில் உயிரானது பிரிய ஆரம்பிக்கும். இதுவரை கீழே செயல்பட்டுக் கொண்டிருந்த அபானன் வாயு மெல்ல மேலேறி ஏனைய வாயுக்களையும் அழைத்துக் கொண்டு வெளியே பயணிக்க ஆரம்பிக்கும். அபானன் உதானனை சந்திக்கும் போது குமட்டல், கிரிதரனை சந்திக்கும் போது சோம்பல், வியானன் வாயுவை சந்திக்கும் போது உடல் இயக்கம் கொஞ்சம் கொஞ்சமாக முடங்கும். நாகனை சந்திக்கும் போது இமைகள் செயலிழக்கும். கூர்மனை சந்திக்கும் போது கொட்டாவி வரும். சாமனை சந்திக்கும் போது உடல் சூடு குறையும். இறுதியில் பிராணனோடு கலந்து மூச்சுத்திணழலை ஏற்படுத்தும். தனஞ்செயனைத் தவிர்த்து நவ வாயுக்களும் வெளியேறிவிடும். இவ்வாறே மரணம் சம்பவிக்கிறது.இது குருதி மரணம் எனப்படும். இந்த குருதி மரணத்திற்கு பிறகும் மனித மூளையானது சிந்தனை உணர்வுகளோடு இயங்கிக் கொண்டிருக்கும். அதன்பிறகு தனஞ்செயன் வாயுவானது மேல் நோக்கி பயணித்து உடல் எடையை அதிகரிக்கச் செய்யும். அது மூளையை அடையும் போது உடல் கெட்டு அழுகத் தொடங்கும். இது சிந்தனா மரணம் எனப்படும். இந்த குருதி மரணத்திற்கும், சிந்தனாமரணத்திற்கும் இடைப்பட்ட நேரம் இரண்டு முகூர்த்த காலம், அதாவது மூன்று மணிநேரம். அந்த மாய நொடிகளில் தான் புருவ வில் பூட்டு திறக்கிறது. இறந்த உடலின் நெற்றிப் பகுதியில் தனஞ்செயன் பயணிக்கிற போது அதுவரை துண்டு துண்டாக செயலற்று இருந்த சித்திரை, வஜ்ரணி, தந்திரிணி, அபூர்விணி ஆகிய நான்கு நாடிகளும் ஒன்றாக இணைந்து செயல்படத் தொடங்கும். அதற்கு பிறகு மண்டை ஒட்டை உடைத்துக்கொண்டு தனஞ்செயனின் பயணம் நமக்கு நிரந்தர மரணம்.
நன்றி:tamilkadal.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக