ஆக்கம். இ.சொ. லிங்கதாசன்
சுருக்கமாக
இரண்டு வரிகளில் இக்கேள்விக்கு விடையளிப்பதாயின், இம்முயற்சி இரண்டு
நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டது என்று கூறி விடலாம் அவையாவன,
- சூரிய ஒளியின் உச்சப் பயன்பாடு.
- மின்சாரம் மற்றும் எரிபொருள்களைச் சேமித்தல்.
இரண்டாவதாக 1907 ஆம் ஆண்டில் பிரித்தானிய அறிஞராகிய வில்லியம் வில்லெட் என்பவர் அப்போதிருந்த பிரித்தானிய அரசுக்கு பரிந்துரை செய்தபோது, இது ஒரு 'முட்டாள் தனமான' திட்டம் என்று பிரித்தானிய அரசும், உடனடியாக நிராகரித்தது.
இவ்விரு அறிஞர்களும் 'பகல் ஒளியை' அதிகமாகப் பயன்படுத்துவதற்காக, நேரத்தை மாற்றும் தமது திட்டத்தினால் கிடைக்கும் நன்மைகள் என்று பின்வருவனவற்றைப் பட்டியலிட்டனர்.
- முன்தூங்கி, முன்னெழுவதால் மக்களின் செல்வம், அறிவு, நலம் ஆகியவை அதிகரிக்கும்.
- ஐரோப்பாமுழுவதும் பகல் குறைவாகவும், இருட்டு அதிகமாகவும் இருக்கும் காலப் பகுதியாகிய சுமார் ஆறு மாதங்களிலுள்ள ஏறக்குறைய 183 இரவுகளிலும் ஐரோப்பாமுழுவதும் உபயோகிக்கப்படும், மெழுகுவர்த்திகள், மண்ணெண்ணெய் போன்ற எரிபொருட்கள்(அக்காலத்தில் இவையே பெரும்பாலான மக்களால் பயன்படுத்தப்பட்டன) கோடிக்கணக்கான அளவில் சேமிக்க அல்லது மிச்சப்படுத்த முடியும், செல்வந்த மக்கள் பயன்படுத்திய மின்சாரத்தையும் கோடிக்கணக்கான அலகுகள் சேமிக்க முடியும்.
மேற்படி
இரண்டு அறிஞர்களும் பிரெஞ்சு, இங்கிலாந்து அரசுகளுக்குப் பரிந்துரை
செய்தபோதும் அவை அரசுப்பதவிகளில் அமர்ந்திருந்தவர்களால் ஏளனம்
செய்யப்பட்டுத் தூக்கி வீசப் பட்டது என்று கடந்த அத்தியாயத்தில்
குறிப்பிட்டேன் அல்லவா? ஆனால் ஆச்சரியப்படத்தக்க விதத்தில் ஒரு சில
வருடங்களின் பின்னர், 'முதலாம் உலகப் போரின்போது' ஜேர்மனி இச்செயற்
திட்டத்தைக் கையில் எடுத்துக் கொண்டது. முதல் உலகப் போர் தொடங்கிய ஒரு சில
வருடங்களுக்குள் 30.4.1916 தொடக்கம் 1.9.1916 வரையுள்ள காலப் பகுதியில்
இத்திட்டத்தை மக்கள்மத்தியில் அறிமுகம் செய்தது. இத்திட்டத்தினால்,
மக்களைக் குறைந்த அளவில் எரிபொருட்களையும், மின்சாரத்தையும் உபயோகிக்க
வைக்கும் மறைமுகத் திட்டமே இது. ஆனால் இந்த மறைமுகத் திட்டம் பற்றிக்
குறிப்பிடத் தக்க அளவில் புரிந்து கொள்ளாத 'ஜெர்மானிய மக்கள்' அப்போதைய
அரசு அறிவித்த 'தாரக மந்திரங்களாகிய' "நாட்டுக்கு உதவுவோம், நாட்டைக்
காப்போம்" என்ற வாசகங்களில் மெய்மறந்து, இத்திட்டத்திற்குப் பூரண ஆதரவு
நல்கினர். இதன்மூலம் மக்களின் எரிபொருள், மின்சாரப் பாவனையைக் கணிசமான
அளவில் குறைக்க முடிந்த ஜேர்மனி அரசினால் அவ்வாறு சேமிக்கப்பட்ட எரிபொருள்
மற்றும் மின்சாரத்தைக் கொண்டு போதிய அளவில் இராணுவத் தளவாடங்களை உற்பத்தி
செய்ய முடிந்தது, எரிபொருட்களைப் படைத்துறை வாகனங்களுக்குப்
பற்றாக்குறையில்லாமல் வழங்க முடிந்தது.
தனது
'எதிரி' இத்தகைய திட்டமொன்றின் மூலம் பயனடைகின்றான் என்பதை அறிந்த
'பிரித்தானியா' விடுமா என்ன? உடனடியாகவே இத்திட்டம் பிரித்தானியாவிலும்
அதன் ஆட்சிக்குக் கீழ் இருந்த குடியேற்ற நாடுகளிலும், அமெரிக்காவிலும்
அறிமுகப் படுத்தப் பட்டது. அக்காலத்தில் இலங்கை, இந்தியா உட்பட பல ஆசிய
நாடுகள் 'பிரித்தானியப் பேரரசின்' ஆட்சிக்குட்பட்டிருந்ததால், வரலாற்றில்
முதல் தடவையாக இலங்கை, இந்திய மக்கள் தாம் விரும்பியோ, விரும்பாமலோ
இத்திட்டத்திற்கு ஒத்துழைக்க வேண்டியவர்களானார்கள். ஆனாலும் ஒரு சில
'சோதிடர்கள்' இத்திட்டத்தினை எதிர்த்துக் குரலெழுப்பவும் தயங்கவில்லை.
இருப்பினும் ஆளும் வர்க்கத்தினால் அவர்களின் வாய்களுக்குப் 'பெரிய பூட்டு'
போடப் பட்டது. இரண்டாம் உலகப் போரின்போது இத்திட்டம் பலவருடங்கள்
நீடித்ததால், இலங்கை, இந்திய மக்கள் இத்திட்டத்தின் பாலும், பிரித்தானிய
அரசின்மீதும் கடும் வெறுப்பையும் கொண்டிருந்தனர். இவ்வெறுப்பு சுதந்திரப்
போராட்ட இயக்கத்தினருக்கு சாதகமான அம்சமாக மாறியிருந்ததையும் குறிப்பிட்டே
ஆகவேண்டும்.
அக்காலத்தில் இலங்கை, இந்தியா உட்பட பல ஆசிய நாடுகள்
'பிரித்தானியப் பேரரசின்' ஆட்சிக்குட்பட்டிருந்ததால், வரலாற்றில் முதல்
தடவையாக இலங்கை, இந்திய மக்கள் தாம் விரும்பியோ, விரும்பாமலோ
இத்திட்டத்திற்கு ஒத்துழைக்க வேண்டியவர்களானார்கள். ஆனாலும் ஒரு சில
'சோதிடர்கள்' இத்திட்டத்தினை எதிர்த்துக் குரலெழுப்பவும் தயங்கவில்லை.
இருப்பினும் ஆளும் வர்க்கத்தினால் அவர்களின் வாய்களுக்குப் 'பெரிய பூட்டு'
போடப் பட்டது. இரண்டாம் உலகப் போரின்போது இத்திட்டம் பலவருடங்கள்
நீடித்ததால், இலங்கை, இந்திய மக்கள் இத்திட்டத்தின் பாலும், பிரித்தானிய
அரசின்மீதும் கடும் வெறுப்பையும் கொண்டிருந்தனர். இவ்வெறுப்பு சுதந்திரப்
போராட்ட இயக்கத்தினருக்கு சாதகமான அம்சமாக மாறியிருந்ததையும் குறிப்பிட்டே
ஆகவேண்டும்.
அடுத்து
வந்த காலப் பகுதியாகிய 1947 மற்றும் 1948 ஆண்டுகளில் இந்தியாவும்,
இலங்கையும் படிப்படியாகப் பிரித்தானியாவிடமிருந்து சுதந்திரமடைந்ததன்
பின்னர், இவ்வாறு ஐரோப்பியர்கள் போன்று கோடையிலும், குளிர்காலத்திலும்
நேரத்தை மாற்றவேண்டிய தேவை இலங்கை, இந்திய அரசுகளுக்கு இருக்கவில்லை. ஆனால்
எரிபொருள் பற்றாக்குறையோ, மின்சாரத்தைச் சிக்கனப் படுத்தவேண்டிய தேவையோ
இவ்விரு அரசுகளுக்கும் ஒருபோதும் ஏற்படவில்லை என்று கூறமுடியாது. ஏனெனில்
இந்திய அரசானது தனது நாட்டில் கிடைக்கின்ற சிறிய அளவு பெற்றோலியத்தைத் தவிர
முழு நுகர்வுக்காக பெரும்பாலும் ஈராக் நாட்டின்மீதே தங்கியிருந்தது. ஆனால்
80 களின் ஆரம்பத்தில் ஏற்பட்ட ஈரான், ஈராக் யுத்தம் மற்றும் 90 களின்
தொடக்கத்தில் ஈராக் அதிபர் சதாம் ஹுசைன் அவர்கள் 'குவைத்' என்ற தனது சிறிய
அண்டை நாட்டைக் கைப்பற்றியதன் விளைவாக ஏற்பட்ட அமெரிக்க(நேசநாட்டுப் படைகள்), ஈராக்
யுத்தம் போன்றவற்றால் இந்தியாவிலும் எரிபொருட் பற்றாக்குறை ஏற்பட்டது.
இருப்பினும் இந்திய அரசு இதனைச் சமாளிக்க சில சிறிய உத்திகளைக் கையாண்டது.
முதலாவதாக எரிபொருட்களின் விலையைச் சற்று உயர்த்தியது, அதேபோல் பேருந்து,
தொடரூந்துக் கட்டணங்களை உயர்த்தியது, இரவில் சிறிய நகரங்களிலிருந்து சாதாரண
கிராமங்களுக்குப் பயணிக்கும் பேருந்துகளின் எண்ணிக்கையை அரைவாசியாகக்
குறைத்தது, ஏழை விவசாயிகளுக்குப் பயிர்ச்செய்கையின் பொருட்டு வழங்கிவந்த
'இலவச மின்சாரத்தினை' நிறுத்தியது. இவ்வாறாக எரிபொருள் பற்றாக்குறை,
மின்சாரத் தட்டுப்பாடு போன்றவற்றை இந்திய அரசு சமாளித்துக் கொண்டது. இந்திய
அரசானது ஒருபோதும் இத்தகைய நிலைமைகளில், ஐரோப்பியர்களைப்போல் 'நேரத்தை
மாற்றுகின்ற' நடவடிக்கையில் ஈடுபடவில்லை. இதேபோலவே இலங்கை அரசும் இரண்டாவது
உலக மகா யுத்தத்திற்குப் பின்னர் ஏற்பட்ட பல நெருக்கடிகளையும் ஒருவாறு
சமாளித்தது. இதற்குக் காரணம் இலங்கை மக்களில் 10% மக்களே வாகனம்
வைத்திருப்பவர்களாகவும், 15% மக்களே மின்சாரத்தை உபயோகிப்பவர்களாகவும்
இருந்தனர். ஆனால் 1995 ஆம் ஆண்டில் இலங்கையில் ஏற்பட்ட நிலைமையானது, இலங்கை
அரசாங்கத்தை நெருக்கடிக்கு உள்ளாக்கியதுடன், ஐரோப்பியர்களைப்போல்
சிந்திக்கவும் வைத்தது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக