புதன், மார்ச் 26, 2014

ஹோட்டல் சாப்பாடு யாரை பாதிக்காது?

வியாபாரத்தையே முக்கிய நோக்கமாகக் கொண்டு செய்யப்படும் உணவு விடுதிகளில் நாக்கிற்கு ருசி கிடைக்குமே தவிர, ஆரோக்கியத்தை எதிர்பார்க்க இயலாது.

பலருக்கும் சேர்த்து சமையல் செய்யும் இடங்களில் இரு உணவுப் பொருள்களின் சக்தி வாய்ந்த பரஸ்பர குணங்கள் ஒன்றுக்கொன்று எதிரிடையாக இருத்தல், சமமாக அதாவது ஒன்றுக்கொன்று மாறுபடாத ஒரே தன்மையுடையதாக இருத்தல், சில குணங்கள் சமமாகவும் சில எதிரிடையாகவும் கலந்திருத்தல், மேலும் செய்முறை, அளவு, தேசம், காலம், சேர்க்கை போன்றவை கவனத்தில் வைத்துச் சமைக்கப்படாதிருத்தல் இயல்பே.

உணவிலுள்ள பகைப்பொருள்களாலும் ஐந்து வகையான நபர்களுக்கு எந்தவிதமான கெடுதலும் ஏற்படுவதில்லை.

உடற்பயிற்சி செய்பவர்கள், எண்ணெய்ப் பசையுண்டாக்கும் சிகிச்சை செய்து கொண்டவர்கள், பசித்தீ நன்கு வேலை செய்கின்ற நிலையிலுள்ளவர்கள், நடுவயதில் உள்ளவர்கள், நல்ல உடல் வலிமை பெற்றவர்கள் ஆகிய இந்த ஐந்து வகையான நபர்களுக்கு,  சமுதாயச் சாப்பாட்டின் மூலம் தீங்கு ஏதும் ஏற்படுவதில்லை.

எனவே, நீங்கள் தொடர்ந்து வெளியே சாப்பிட வேண்டிய நிலையில் இருந்தால், மேற்கூறியவற்றைப் பெற முயற்சி செய்து நோய் எதிர்ப்பு சக்தி பெற வேண்டியது அவசியம்.

நன்றி: தினமணி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக