வியாழன், ஜூலை 24, 2014

ரத்த தானம்

இப்பொழுது பிறந்த நாள், திருமண நாள் போன்றவைகளின்போது ஆர்வத்துடன் ரத்த தானம் செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே போகிறது. நீங்கள் ரத்த வங்கிகளுக்கு சென்று ரத்தம் கொடுக்கலாம். அரசு ஆஸ்பத்திரிகளுக்கு சென்றும், அரசோ- தனியார்களோ நடத்தும் ரத்ததான முகாம்களுக்கு சென்றும் ரத்தம் கொடுக்கலாம். நோயாளிகளுக்கு தேவைப்படும்போது அந்த ஆஸ்பத்திரிக்கே சென்று ரத்தம் வழங்கவும் செய்யலாம்.
தெரிந்து கொள்ள வேண்டியது::
ரத்ததானம் செய்ய விரும்புகிறவர்களை ஒருங்கிணைக்கும் சங்கங்கள் வாயிலாகவும் இந்த சேவையை நீங்கள் செய்யலாம். சங்கத்தில் உங்களை பதிவு செய்யும்போது பெயர், வயது, எடை, ரத்தப் பிரிவு, விலாசம், செல்போன் நம்பர் போன்றவைகளை கொடுக்கவேண்டும். நோயாளிக்கு ரத்தம் தேவைப்பட்டால் நீங்கள் வழங்க உகந்த நேரம் எது? என்ற விபரத்தையும் கொடுக்கவேண்டும்.
பின்பு உங்களை அதற்கான `நெட் ஒர்க்கில்` இணைத்துவிட்டு, உங்களுக்கான `கோடு எண்ணும்` போட்டோ ஒட்டிய அடையாள அட்டையும் தருவார்கள். உங்களைப் பற்றிய முழு தகவலையும் கம்ப்யூட்டரில் பதிவு செய்துகொள்வார்கள்.
உங்கள் ரத்த குரூப் ரத்தம் யாருக்காவது தேவைப்படும்போது, உங்களுக்கு எஸ்.எம்.எஸ். மூலம் தகவல் தருவார்கள். தேவைப்படும் நோயாளி இருக்கும் ஆஸ்பத்திரிக்கு சென்று ரத்தம் வழங்கலாம். நீங்கள் ஒருமுறை ரத்தம் வழங்கிவிட்டால், அடுத்த மூன்று மாதம் உங்களை ரத்ததானம் செய்ய அழைக்கமாட்டார்கள்.
ரத்த தானம் செய்வதால் ஏற்படும் பயன்கள்:::
18 வயது முதல் 60 வயதுவரை ரத்ததானம் செய்யலாம். 50 கிலோ எடைக்கு குறையாமல், உடல் ஆரோக்கியத்துடன் இருக்கும் ஆண்கள் 3 மாதத்திற்கு ஒருமுறையும்- பெண்கள் நான்கு மாதத்திற்கு ஒருமுறையும் தானம் செய்யலாம்.
ஒருமுறை 350 மி.லி. ரத்தம் பெறுவார்கள். இதற்கு 15 முதல் 20 நிமிடங்களே ஆகும். கொடுக்கும் ரத்தத்தை, சிறிது நேரத்திலே உங்கள் உடல் ஈடுசெய்துவிடும். அதனால் தயங்காமல் ரத்ததானம் செய்யுங்கள். வருடத்திற்கு குறைந்தது 3 தடவையாவது ரத்ததானம் செய்துவிடுங்கள். ரத்த தானம் செய்வதால் உடலில் எந்த பிரச்சனையும் வருவதில்லை.
ஆனால் சிலரிடம்  இன்னும்  ரத்த தானம் பற்றிய விழிப்புணர்வு இல்லை.மேலும் ரத்த தானம் செய்வதால் நம் உடல் எடை அதிகரிக்காமல் ஆரோக்கியத்துடன் இருக்கும். 
நன்றி:மாலைமலர்  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக