வியாழன், ஜூலை 10, 2014

ஜெர்மனியில் தமிழ்ச் சிறார்களின் நடனம்.

ஜெர்மனியில் உள்ள நீடர்சாக்க்ஷேன்( Niedersachsen)மாநிலத்தில் உள்ள 'ஹில்டஸ்ஹெய்ம்' (Hildesheim) நகரத்தில் இலங்கையைப் பூர்வீகமாகக் கொண்ட சுமார் 30 தமிழ்க் குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.இவர்கள் தமது குழந்தைகளின் கலை, கலாச்சாரம் போன்றவைகளை வளர்க்கும் முகமாக திரு.செல்லத்தம்பி சிவகுமார் அவர்களின் தலைமையில் இணைவாக்கக் குழு(Integration Committee) ஒன்றை அமைத்து அதன் ஊடாக தமிழ்ச் சிறார்களின் கலை, கலாச்சார நிகழ்வுகளை நடத்தி வருகின்றனர். அத்தகைய நிகழ்வுகளின் ஒரு பகுதியாக 36 நாடுகளைச் சேர்ந்த சிறார்கள் கலந்து கொண்ட கலை நிகழ்வு ஒன்று கடந்த 29.06.2014 அன்று 'ஹில்டஸ்ஹெய்ம்'இல் உள்ள மக்டலீனஹொவ் (Magdalenahof) சதுக்கத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிகளுக்குப் பார்வையாளர்களாக ஜெர்மானிய மக்கள் உட்பட சுமார் 2000 இற்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். அந்நிகழ்வில் தமிழ்ச் சிறார்கள் கலந்து கொண்ட கலை நிகழ்ச்சியின் காணொளியை உங்களுக்காகத் தருகின்றோம்.
  

1 கருத்து:

Yarlpavanan சொன்னது…

சிறந்த பதிவு
வரவேற்கிறேன்

கருத்துரையிடுக