செவ்வாய், ஏப்ரல் 26, 2011

நாடுகாண் பயணம் - பிரேசில்

நாட்டின் பெயர்:
பிரேசில் 

முழுப் பெயர்:
ஒருங்கிணைந்த ஒன்றியங்களின் பிரேசில் குடியரசு(Federativ Republic of Brazil)

அமைவிடம்:
தென் அமெரிக்கா

எல்லைகள்:
கிழக்கு - அத்திலாந்திக் சமுத்திரம் 
வடக்கு - வெனிசுவெலா, கயானா, சூரினாம், பிரெஞ்சு கயானா 
வடகிழக்கு - கொலம்பியா 
மேற்கு - பொலிவியா, பெரு
வடமேற்கு - ஆர்ஜென்டீனா, பராகுவே 
தெற்கு: உருகுவே 
Brazil Beaches

தலைநகரம்:
பிரேசிலியா(Brasilia)

மிகப்பெரிய நகரம்:
சாவோ பவுலோ(Sao Paulo)

இனங்கள்:
48.43%வெள்ளையர் 
43.80%கலப்பு இனங்கள் 
6.84%கறுப்பினத்தவர் 
0.58%ஆசியர் 
0.28%அமர் இந்தியர் 

அலுவலக மொழி:
போர்த்துக்கேய மொழி 
சமயங்கள்:
ரோமன் கத்தோலிக்கம் 73.8%      
புரட்டஸ்தாந்துகள் 15.4%
சமய ஈடுபாடு இல்லாதோர் 7.4%
ஆத்ம சமயம் 1.3%
ஏனையோர் 2.1%
ஆயுட்காலம்:
ஆண்கள் 68.9 வருடங்கள் 
பெண்கள் 76.2 வருடங்கள் 

கல்வியறிவு:
88.6 %

ஆட்சிமுறை:
மாநிலங்களுக்கு அதிகாரங்கள் வழங்கப்பட்ட ஜனாதிபதி ஆட்சி 

ஜனாதிபதி:
டில்மா ரௌஸ்ஸெப்(Dilma Rousseff)

போர்த்துக்கேய இராச்சியத்திடமிருந்து சுதந்திரம்:
29.08.1825 
பரப்பளவு:
8,514,877 சதுர கிலோமீட்டர் 

சனத்தொகை:
190,732,694 (2010 மதிப்பீடு)

நாணயம்:
ரியல்(Real /BRL)

இணையத்தளக் குறியீடு:
.br

சர்வதேசத் தொலைபேசிக் குறியீடு:
00-55
விவசாய உற்பத்திகள்:
கோப்பி(காபி), சோயா அவரை, கோதுமை, அரிசி, தானியங்கள், கரும்பு, கொக்கோ, புளிப்பான பழங்கள், மாட்டிறைச்சி.

தொழிற்சாலை உற்பத்திகள்:
துணிகள், சப்பாத்துகள், இரசாயனங்கள், சீமெந்து, இரும்பு, ஈயம், தகரம், உருக்கு, விமானங்கள், வாகன இயந்திரங்கள்,ஏனைய இயந்திரங்கள்.

ஏற்றுமதிகள்:
வாகனங்கள், வாகன உதிரிப்பாகங்கள், இரும்பு, ஈயம், சோயா, காலணிகள், காபி.

நாட்டைப் பற்றிய சிறு குறிப்புகள்:
  • ஈக்குவடோர், சிலி ஆகிய இரண்டு நாடுகள் தவிர்ந்த ஏனைய அனைத்து தென் அமெரிக்க நாடுகளுடனும் எல்லைகளைக் கொண்டுள்ள நாடு.
  • உலகில் பரப்பளவில் பெரிய நாடுகளின் வரிசையில் ஐந்தாவது பெரிய நாடு.
  • உலகில் சனத்தொகை அதிகம் கொண்ட நாடுகளின் வரிசையில் ஐந்தாவது இடத்தில் உள்ளது.
  • உலகில் மிகப்பெரிய பொருளாதாரத்தைக் கொண்ட நாடுகளின் பட்டியலில் எட்டாவது இடத்தில் உள்ளது.
  • உலகில் 'வாங்கும் சக்தி' அதிகமுள்ள மக்களைக் கொண்ட நாடுகளின் பட்டியலில் ஏழாவது இடத்தில் உள்ளது.
  • இருப்பினும் இந்நாட்டில் 26% மக்கள் வறுமைக் கோட்டிற்குக் கீழே வாழ்கின்றனர்.
  • உலகில் கோப்பி(காபி) அதிகமாக ஏற்றுமதி செய்யும் நாடுகளின் வரிசையில் முதலாமிடத்தில் உள்ளது.
  • தென் அமெரிக்க நாடுகளிலேயே மிகப்பெரிய அரசியல், பொருளாதார சக்தியாக பிரேசில் விளங்குகிறது.
  • உலகின் தலைசிறந்த உதைபந்தாட்ட வீரர்களில் ஒருவராகிய ரொனால்டினோ(Ronaldinho) இந்நாட்டைச் சேர்ந்தவர்.
  • தென் அமெரிக்க நாடுகளிலேயே முதல் தடவையாக எதிர்வரும் 2016 ஆம் ஆண்டில் ஒலிம்பிக் போட்டிகள் 'பிரேசிலில்' நடைபெறவுள்ளன.
3 கருத்துகள்:

Sutha Swiss சொன்னது…

I like et

seelan சொன்னது…

மனிதன் பிறந்தால் அவன் பூமியில் வாழும்போது எதாவது தன்னால் முடிந்த உதவியை செய்து வாழ்ந்தால் இறந்த பின்பும் அவன் பெயர் வாழும் ,,,,,,,,,,
முருகன் கோவில் தர்மகர்த்த அவர்கள் மறந்த செய்தி அறிந்து மிகவும் வேதனை அடைந்தோம்
அவர்களின் குடும்பத்தவர்களுக்கு எமது அனுதாபத்தை தெரிவிக்குறோம்

Kumaran Denmark சொன்னது…

Verry vell

கருத்துரையிடுக